மது அருந்துவது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனென்றால் நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும்.
ஈரல் பதிப்பு மூன்று கட்டங்களின் ஊடாக நடைபெறுகிறது.
ஆரம்பத்தில் கொழுப்புப் படித்தல் (fatty change) என்ற பாதிப்பும் பிறகு ஈரல் அழர்ச்சி (hepatitis)என்ற பாதிப்பும் இறுதியாக சிரோசிஸ் (cirrhosis)என்ற வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது
இங்கே முதல் இரண்டும் அதாவது கொழுப்புப் படித்தல் மற்றும் ஈரல் அழர்ச்சி என்பவை இருக்கும் நிலையில் ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் அவரின் ஈரல் பழைய நிலையை அடைந்து சுகமாகலாம். ஆனால் அது சிரோசிஸ் என்ற நிலையை அடைந்தால் ஈரல் பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமற்றது.
சிரோசிஸ் இருப்பவருக்கு வாழ் நாள் என்னத்தொடங்கி விட்டது என்றே அர்த்தம் , ஆனாலும் அவர் எத்தனை காலங்கள் அந்த நோயிடுன் உயிர் வாழ்வது என்பது அவர் குடியை விட்டாரா என்பதிலேயே தங்கி உள்ளது.
அதாவது சிரோசிஸ் ஏற்பட்ட ஈரல் மேலும் பாதிக்கப்பட்டு முழுவதுமாக செயற்படாமல் போய் மரணம் ஏற்படுவதை பிற்போட மருந்துகளை விட , அந்த நபர் குடிப்பழக்கத்தை விடுவதே முக்கியமானது.
இந்த ஈரல் பாதிப்பு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே ஏற்படலாம். சில பேரில் ஈரல் முற்று முழுதாக செயல் இழக்கும் வரை மதுவினால் ஏற்படும் பாதிப்பு தெரியாமலேயே ஏற்படலாம்.இதனால் தொடர்ச்சியாக அதிகமாக மது அருந்துபவர்களில் சட்டென மரணங்கள் ஏற்படலாம்.
நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் உங்களில் கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்...
- வயிற்று வலி
- உமிழ் நீர் குறைந்து உலர்ந்த வாய்
- அதிகமான தாகம்
- தொடர்ச்சியான காய்ச்சல்
- உடல் பலவீனம்
- வயிற்று வீக்கம்
- கண் மஞ்சள் நிறமடைதல்
- பசி குறைதல்
- வாந்தி வருகின்ற உணர்வு
- உடல் நிறை திடீரென அதிகரித்தல்
- கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
- ரத்த வாந்தி எடுத்தல்
- ஆண்களில் மார்பு பெரிதாகுதல்
- சிந்திக்கும் ஆற்றல் குறைதல்
- உள்ளங்கையில் சிவப்பு நிறமாக காணப்படுதல்
மது அருந்துபவர்களே இதில் ஏதாவது அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.அதற்கு முன்பு மது அருந்துவதை விட்டு விடுங்கள்.
மது அருந்துவதை 21 நாட்களில் நிறுத்தலாம் < இங்கே சொடுக்கவும் (Click Here)
0 comments:
Post a Comment