ரெட் ஜாயின்ட் மூவிஸின் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் ஏழாம் அறிவு ஆகும். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
அது மட்டும் இன்றி நாடோடிகள், ஈசன் படங்களில் நடிப்பில் கவர்ந்த அபிநயா, சூர்யாவின் மற்றொரு ஜோடியாகியுள்ளார்.
முதலில் இந்த விஷயத்தையே வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். படம் வெளியானதும் ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று முருகதாஸ் கூறியிருந்தாராம். ஆனால் இப்போது விஷயம் வெளியாகிவிட்டது.
ஏழாம் அறிவில் சூர்யாவுக்கு மெயின் ஜோடி ஸ்ருதிதான் என்றாலும், ப்ளாஷ் பேக்கில் சரித்திரப் பின்னணியில் வரும் சூர்யாவுக்கு அபிநயாதான் ஜோடியாம்.
படத்தில் மிக முக்கிய அம்சமே இந்த ப்ளாஷ்பேக் சூர்யாதான் என்பதால், அபிநயா கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிறார்கள்.
சரித்திரத்தின் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனத் துறவியான போதிவர்மன் (சூர்யா) என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்த சுமார் 10 கோடி தேவைப்பட்டதாம். இந்த பிரம்மாணட காட்சியமைப்பிற்கு படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி சற்றும் தயங்காமல் சரி என்று சொல்லிவிட்டாராம். இக்காட்சியமைப்பு படத்தின் முதல் 15 நிமிடங்களில் தோன்றவுள்ளது, மேலும் காட்சியமைப்பு பார்வையாளர்களை மிகவும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தில் ஒரு சீனப் பாடல் ஒன்று இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி நாடோடிகள், ஈசன் படங்களில் நடிப்பில் கவர்ந்த அபிநயா, சூர்யாவின் மற்றொரு ஜோடியாகியுள்ளார்.
முதலில் இந்த விஷயத்தையே வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். படம் வெளியானதும் ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று முருகதாஸ் கூறியிருந்தாராம். ஆனால் இப்போது விஷயம் வெளியாகிவிட்டது.
ஏழாம் அறிவில் சூர்யாவுக்கு மெயின் ஜோடி ஸ்ருதிதான் என்றாலும், ப்ளாஷ் பேக்கில் சரித்திரப் பின்னணியில் வரும் சூர்யாவுக்கு அபிநயாதான் ஜோடியாம்.
படத்தில் மிக முக்கிய அம்சமே இந்த ப்ளாஷ்பேக் சூர்யாதான் என்பதால், அபிநயா கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment