தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

செல்லப் பிராணி வளர்ப்பவரா நீங்கள்?

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்தல் அதன் மீது உள்ள ஆர்வம், அன்பு, பொழுதுபோக்கு என ஏதேனும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதனை சரி வர வளர்ப்பதும், கவனிப்பதும், ஆரோக்கியமாக பாதுகாப்பதும் ஒரு சிலரே. நாய் மற்றும் பூனை வளர்ப்பவர்கள் இதனை தொடர்ந்து படிக்கலாம். மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

நமக்கு சர்க்கரை நோய் வருவது போல், நாம் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய், பூனைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரும். இது எத்தனை பேருக்கு தெரியும்.

மனிதர்களை போலவே மிருகங்களுக்கும் சர்க்கரை நோய் கண்டறியபடுகிறது. இரத்தத்தில் குளுகோஸின் அளவை பொறுத்தே சர்க்கரை நோயின் அறிகுறிகள் சொல்லப்பப்படுகிறது. இன்சுலின் (கணையநீர்) எனப்படும் சுரப்பிதான் குளுகோஸின் அளவையும், குளுகோஸினை உறியும் உயிர் அணுகளையும் கட்டுபடுத்துகின்றது. இன்சுலின் குறையும் போதோ, உயிர் அணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காமல் போகும் போதோ சர்க்கரை நோய் அதிகமாகிறது.

பிராணிகளை பொருத்தவரை சர்க்கரை நோய் வருவது நடுத்தர வயதில்தான் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதிகமாக இது பெண் நாய்களிடம், அதுவும் ஒரு சில வகைகளுக்கு மட்டும் வருகிறது. பூனைகளை பொருத்தவரை ஆண் பெண் இரண்டுக்கும் இது பொருந்தும்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

அதிகமாக தண்ணீர் அருந்துவது
வழக்கத்திற்கு அதிகமாக சிறுநீர் கழித்தல்
வழக்கத்திற்கு அதிகமாக சாப்பிடுதல்
உடல் எடை குறைதல்
தோல் பாதிப்பு

இவைகளில் ஒன்று தோன்றினாலும் மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுங்கள், அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வது நல்லது.

சிறிதளவு பாதிப்பு இருந்தால் அதனை எளிதில் குணப்படுத்தி விடலாம். கட்டுப்பாடான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி இருந்தால் போதும். இருப்பினும் குளுகோஸின் அளவை சீறாக கொண்டுவர இன்சுலின் ஊசிகளை பின்பற்ற வேண்டும். தவறாத பரிசோதனை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவை அனைத்தும் உங்கள் பிராணியை ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு உதவும்.

எந்த பிராணியாக இருந்தாலும் நம் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்கள் அவைகளுக்கு நச்சு/விஷத்தன்மையை ஏற்படுத்துகின்றன. கீழே குறிப்பிட்டுள்ள அப்பொருட்களை விலக்கி வைத்திருப்பது நல்லது.

வெங்காயம், பூண்டு, திராட்சை, போதை பொருள், பருப்பு வகைகள், இனிப்புள்ள பொருட்கள், கடல் உணவு, லில்லி செடிகள்.

இலவசமும், இலவச மடிக் கணினியும்

மாணவ-மாணவிகளுக்கு மடிக் கணினி வருகிறது. ஆம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் இலவசக் கணினி வழங்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் இலவசக் கணினி வழங்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் (ஒப்பந்தப் புள்ளி) அறிவிப்பை எல்காட் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.


அதில் எச்.சி.எல்., விப்ரோ, எச்.வி. சோனி, லெனோவா, டெல், ஏசர், ஜெனித், சாம்சங், எல்.ஜி., இன்டெல் போன்ற 85-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. சில விதிமுறைகளின் கீழ் அனைத்து நிருவனங்களும் பங்கேற்றன.

அனைத்து நிருவனங்களும் வைப்புத் தொகையாக தலா 20 லட்சம் கட்டியிருக்க வேண்டும், மடிக் கணினியில் தமிழ், ஆங்கிலம் (மென்பொருள்) சாப்ட்வேர் இடம் பெற்றிருக்க வேண்டும். பேட்டரியுடன் (மின்கலம்) சேர்த்து கணினி எடை 2 கிலோ 700 கிராம் அளவிற்குள் இருக்கவேண்டும். பழுது ஏற்பட்டால் சர்வீஸ் செய்ய தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் (பணியகம்) வைத்திருக்க வேண்டும். மடிக் கணினிக்கு 3 வருட உத்தரவாதம், பேட்டரிக்கு 1 வருட உத்தரவாதமும் தரவேண்டும், லேப்-டாப்புக்கு வழங்கும் பேட்டரி 6 எண்ணிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். கேமரா (புகைப்படக்கருவி), பவர் கேபிள் (மின் கம்பிவடம்), சார்ஜர் (மின்னேற்றி) ஆகியவையும் தரமானதாக வழங்க வேண்டும், 2 ஜி.பி. ரேம், 320 ஜி.பி. ஹார்டு டிஸ்க் இடம் பெற வேண்டும், வின்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறை அதில் இருக்க வேண்டும். கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள், டேட்டோ பேஸ் புரோகிராம் உள்பட பல வசதிகளும் அதில் இருக்கவேண்டும், கணினி மீது 'தமிழக அரசின் மடிக்கணினி திட்டம்-2011' என்று குறிப்பிட வேண்டும், என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தரமான கணினியை அரசு வழங்கும் என தெறிகிறது.

இந்த தரமனான கணினி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொழில்நுட்பத்தையும், கணினி பற்றிய விழிப்புணர்வையும் எல்லோருக்கும் ஏற்படுத்தும் என்று மகிழ்ச்சி அடைந்தாலும். இதில் ஒழிந்திருக்கும் அபாயத்தினை அரசு சிந்தித்து பார்த்திருக்குமா?

இன்றைய சூழலில் நம்மைச் சுற்றி இருக்கின்ற விஷயங்கள் அனைத்திலும் கெட்ட விஷயங்களை அதிகமாக பார்க்கிறோம். உதாரணமாக, திரைப்படங்களை எடுத்துக்கொள்வோம். அதில் காட்டப்படும் வன்முறை, ஆபாசம், காதலை பற்றிய தவறான பார்வை இவை அனைத்தும் பெரியவர்களை விட சிறியவர்களையும், பள்ளி மாணவ-மாணவிகளையுமே அதிகமாக பாதிக்கிறது.

கைபேசியின் மதிப்பு இறங்கி போனதால் தான் இன்று பள்ளி மாணவர்கள் கூட அதனை உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்கும் நோக்கில் அதை வாங்கி கொடுத்தாலும், அதன் மூலம் குறுந்தகவல், கண்டதை புகைப்படம் எடுத்தல், ஆபாச  படங்கள் போன்றவை பறிமாற வசதியாகி விட்டது. இந்த வசதிகள் அனைத்தும் நல்ல வழியில் பயன்பட்டால் தப்பில்லை.

கைப்பேசியிலேயே இவ்வளவு பாதிப்பு உள்ளதென்றால், கணினியில் எவ்வளவு இருக்கும், அதுவும் நாம் அறிந்த ஒன்றே. இணையதளம் அதில் உள்ள நல்லவை கெட்டவை அதற்கு ஒரு நல்ல சான்று. கணினியை கூட நம் கண்காணிப்பில் வைத்து விடலாம், ஆனால் மடிக் கணினி அப்படி அல்ல. அதை எங்கு வைத்து என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் ஆராய்ந்து கொண்டே இருக்க முடியாது.

மடிக் கணினியும் இலவசமாக வருகிறது, அதன் மதிப்பும் இறங்கிவிடும். இதன் விழைவும் அதிகமாக இருக்கும். அரசு இதனை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் இருந்து மடிக் கணினியை வழங்கலாம். கல்லூரி மாணவர்கள் அனைத்து பிரிவினருக்கும் கூட இது உபயோகமானதாக இருக்கப் போவதில்லை, இருந்தும் அதை கூட பொருத்துக்கொண்டு சரி எனலாம்.

ஆனால் பக்குவமற்ற வயதுடைய பள்ளி மாணவ-மாணவியர்கள் இதனால் பாதிப்படைவது உறுதி. இதை இனி மாற்றி அமைக்கவோ, தடை செய்யவோ முடியாவிட்டாலும், பெற்றோர்கள் பள்ளி மாணாக்கர்களை தம் கவனத்திற்குள் வைத்துக் கொண்டே இருப்பது நல்லது.

இலவசம்! - இது நம்மை எவ்வளவு கவர்ந்த ஒன்று.

இன்று நம் நாட்டில் இலவசம் என்பது சாதாரன விஷயமாகி விட்டது. கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் ஒன்றே அதிகமாக இருந்தது. இலவசமாக பொருட்களை வழங்குவது கடந்த ஆட்சியிலிருந்தே நடந்து வருகிறது. இது இயலாதவர்களுக்கு நல்ல திட்டமாக கருதினாலும், முடிந்தவர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும், இவை மனிதனின் தன்மானத்தை சீண்டும் விஷயமே. இது சில தரப்பினரிடம் சோம்பேரித் தனத்தை வளர்த்து விடாதா?

எல்லோருக்கும் இல்லாதவர்களுக்கும் இலவசமாக சமமாக பொருட்கள் கிடைக்கிறது. இது சந்தோசத்திற்க்கும் பாராட்டுதலுக்கும் உரிய விஷயமே. இருந்தாலும் அதன் பயன்கள் சரியாகவும், சரியான இடத்திற்கு தகுந்தாற் போலவும் போய் சேர வேண்டும், இல்லையேல் விழைவுகள் சரியானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.

இதுபோக மிக்சி (மின்னம்மி), கிரைண்டர் (மின்னறவை), மின்விசிறி, கறவை மாடு போன்றவைகளும் இலவசமாக தருகிறது நம் அரசு. அண்மையில் கோவை நகர கிரைண்டர் தயாரிப்பாளர்களை புறக்கணித்து விட்டு வேறு எங்கோ கிரைண்டர் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் அறிந்த தயாரிப்பாளர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 700 க்கும் மேற்பட்ட கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. இதனால் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்விசிறி, மிக்ஸி போன்றவை தமிழகத்தில் பெருமளவு தயாரிக்கப்படாத காரணத்தினால், பிற மாநிலத்திருந்து அல்லது இறக்குமதி செய்வதில் எந்த தவறுமில்லை. ஆனால் டெண்டருக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலையில், பொருட்களை தர நினைத்து இப்படி தரம் குறைந்த சீன தயாரிப்புகளை இறக்குமதி செய்வது மட்டுமில்லாமல், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிழைப்பை கெடுக்க வேண்டாமே. கிரைண்டருக்கு பெயர் பெற்ற நகரத்தை வைத்து கொண்டு தமிழக அரசு, சீன தயாரிப்புகளை நாட நினைப்பது தவறு.

இலவசத்திற்காக இவ்வளவு விஷயங்களை பொருக்க வேண்டுமா? அரசு எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்குமா?

செல்போனில் ஆபத்து!!!

செல்போனில் பண பரிவர்த்னை -
இன்று தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் நமது வாழ்க்கைமுறையும், வேலையும் மிக எளிமையகியுள்ளது என்றால் அது மிகை ஆகாது. அதே நேரம் அவையால் விளையும் ஆபத்துகள் கற்பனைக்கு எட்டாதவை.

இன்று வங்கியின் பண பரிவர்த்தினை மற்றும் பண பரி மாற்றத்தினை வீட்டில் இருந்தோ (அ) நாம் இருக்கும் இடத்தில் இருந்தோ கைப்பேசியின் (செல்போன்) மூலம் செய்யும் அளவிற்கு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது. அதே சமயம் இதனால் விளையும் அபாயங்களை நாம் அறியாதது நம் அறியமையே.

இந்த பரிவர்த்தினை ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் நவீன ரக கைப்பேசியின் மூலம் செய்யப்படுகிறது. இவ்வகையான கைப்பேசிகள் இயங்கு தளங்களின் (Operatin System) அடிப்படையில் இயங்குகின்றன. இது போன்ற பண மாற்றத்தின் போது நாம் உபயோகிக்கும் கடவுச்சொல் (பாஸ் வோர்ட்) எனும் ரகசிய குறியீடுகளை (வைரஸ்) எனும் கணினி நஞ்சுகாலாள் திருடப் படுகின்றன. இதனால் நம் வங்கியின் பணத்தை இழக்க நேரிடும்.

இந்த தற்கால வைரஸ் ஜித்மோ (Zitmo) என்று அழைக்கப்படுகிறது. இவை மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு பெரிய சவாலாக திகழ்கின்றன. இந்த வகையான வைரஸ்கள் இணைய தளங்களிலிருந்து தரவிருக்கம் செய்யும்போது கைப்பேசியினுள் வந்துவிடுகின்றன. இவை உள் நுழைந்தவுடன் இயங்கு தளத்தின் கட்டுப்பாட்டினை இவைகளின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகின்றன. மற்ற நேரங்களில் அமைதியாகவே உள்ளன, உபயோகிப்பாளர் வங்கியின் இணையத்திற்கு சென்றவுடன் இவை வேலை செய்யகின்றன.

சந்தையில் இன்று மிகவும் விற்பணையாகும் ஆன்றாய்டு இயங்குதளம் கொண்ட கைப்பேசிகள் இது போன்ற வைரஸ்களால் எளிதாக பாதிககப்படுகின்றன என்பது அறிவியல் வல்லுநர்களின் கருத்து. அது மட்டும் இன்றி ஆப்பிள் போன்ற விலை உயர்ந்த போன்களையும் இவை விட்டு வைக்கவில்லை. இது பற்றி முன்னணி வங்கியின் மேலாளர் பேசுகையில், வ்ங்கியால் முடிந்த
அளவிற்கு பாதுகாப்பினை வழங்கி வருகிறது. உபயோகிப்பாளர் தங்கள் பணத்தின் மீது கவனம் கொண்டு கடவுச்சொல்லை யாரலும் கனிக்க முடியாதவாறு உபயோகிக்க வேண்டும், (Public Wi-FI) எனப்படும் பொதுவான பிணையத்தினை தவிர்க்கவும். அவ்வப்போது மென்பொருளினை மேம்படுத்தி (Update) உபயோகிக்கவும்.


திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.


நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா???


தண்ணீர் நமக்கு எவ்வளவு தேவை, அதன் முக்கியத்துவம், அனைத்தும் தெரியும். இருந்தும் நிறைய கேள்விகள் நமக்கு தோன்றின. தண்ணீர் எப்போது ஆபத்தானவை? நாம் தினமும் பருகும் தண்ணீர் சுத்தமாக சுகாதாரமாக உள்ளதா? இதில் நாம் எந்த அளவு அக்கறை கொண்டுள்ளோம்?  குழாய் தண்ணீரை விட போத்தல்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் சுத்தமானதா? வீட்டில் தண்ணீரை எப்படி பாதுகாப்பானதாக மாற்றுவோம்? இதற்கெல்லாம் பதில் நம்மிடம் உள்ளதா???

நமக்கு கிடைக்கின்ற தண்ணீர் ஆழ்துளைக் கிணறு (Borewell), மாநகாரட்சி வழியாக வழங்கப்படுவது, அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water), கனிம நீர் (Mineral Water), கிணறு, குளம், மழை ஆகிய வழிகளில் இருந்தே வருகிறது.இந்த வகைகளில் வரும் தண்ணீரை மக்கள் தங்கள் வசதி மற்றும் தகு நிலைக்கு தகுந்தாற்போல் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.

இதில் நாம் பருகும் தண்ணீர் எவ்வளவு சுத்தமாக உள்ளது என நாம் அறிய வேண்டும். ஆழ்துளைக் கிணறு வழியாக வரும் தண்ணீர் கண்டிப்பாக பாதுகாப்பற்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை நேரடியாக பருகுவது எப்போது வேண்டுமானாலும் ஆபத்தாக அமையும். அடுத்து குளோரின் (பாசிகை) கலக்கப்பட்ட தண்ணீர், தண்ணீரில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கதான் குளோரின் கலக்கப்படுகிறது. ஒரு புறம் இது நன்மைக்காக என்றாலும், இதனாலும் பக்க விழைவுகள் உள்ளன. ஸ்பானிய நாட்டைச் சார்ந்த சீஆர்இஏஎல் எனும் ஆராய்ச்சி மையம் அண்மையில் நடத்திய ஆய்வில், அளவுக்கு அதிகமாக குளோரின் கலந்த தண்ணீரை பருகுவதோ, அதில் குளிப்பதோ சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் அதிகமாகின்றன அறிவித்துள்ளது.குளோரின் கலந்த நீரை அதிகமாக பருகியவர்களிடம் புற்றுநோய்கான அறிகுறிகள் தெரிவதாக பல மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். குளோரின் நுண்ணுயிர்காளை அழிக்க உதவினாலும், மிகவும் ஆபத்தான கோலிஃபோர்ம் எனும் கிருமி அதில் அழியாமல் இருப்பதாக கூட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளோரின் கலந்த நீரில் வளர்ப்பு மீன்கள் இறந்து விடுகின்றன, இது சிந்திக்க வேண்டிய ஒன்றே.

போத்தல் தண்ணீர் இரண்டு வகைகளில் நமக்கு கிடைக்கின்றது, ஒன்று அடைக்கப்பட்ட குடிநீர் மற்றொன்று கனிம நீர். இதில் அடைக்கப்பட்ட நீர் என்பது சுத்திகரிக்கபட்ட நீர். நீரை தூய்மை செய்ய பல வழிகள் உள்ளன, அதைனை பயன்படுத்தி அருந்துவதற்கு ஏற்ற நீராக மாற்றப்படுகிறது. கனிம நீர் என்பது கனிமங்கள் (Minerals) நிறைந்த நீராகும். இயற்கயாகவே கனிமங்கள் சேர்ந்திருக்கும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கூடுதல் பலன்களை நீங்கள் இதன் மூலம் பெறலாம். செயற்கயாக கனிமங்கள் சேர்க்கப்படும் நீரும் விற்கப்படுகிறது. இந்த இரண்டு வகை நீரும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இது போக குளம், கிணறு ஆகியவற்றில் இருக்கும் நீர் சுத்தமானதாக இருக்கும் என்பது அதனை பாராமறிப்பதை பொறுத்து இருக்கிறது, இருந்தாலும் நம்பகத்தன்மை என்பது குறைவே.

நமக்கு சுத்தமான தண்ணீர் தேவை, இப்போது இருக்கும் சற்றுப்புறத் தூய்மைக் கேடுகளில் தண்ணீர் எவ்வளவு தூய்மையாக கிடைக்கிறது என்பது சந்தேகமே. எனவே வீட்டில் நாம் சுத்திகரீக்கப்பட்ட தண்ணீரை அருந்தவும், பயன்படுத்தவும் வேண்டும். எல்லோரும் பணம் செலவு செய்து சுத்தமான நீரை வாங்க முடியாது, வசதிக்கு ஏற்றார் போல் இதனை நடைமுறைப்படுத்தலாம்.

நாம் தண்ணீரை சுத்தப்படுத்த வீட்டில் மாசுநீக்கி - Purifierகளை பயன்படுத்தலாம். இவை வசதிக்கு ஏற்றார் போன்ற விலைகளில் கிடைக்கிறது, நிறைய ரகங்களும் இருக்கிறது. தொழில்நுட்பம் பல நிறைந்த சுத்திகரிப்பு முறையும் இதில் உள்ளன. Reverse Osmosis - எதிர்மறை சவ்வூடுபரவல், Ultrafiltration - நுண் வடித்தல், Ultraviolet - புற ஊதா போன்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுத்தமான குடிநீர் நமக்கு கிடைக்கின்றது.

இதுவும் நடைமுறைப் படுத்த முடியாதவர்கள், குறைந்தபட்சமாக நன்கு கொதிக்க வைத்த நீரை பருகலாம். கொதிக்க வைக்கும் வெப்ப அளவு நூறாக இருந்தால் மிக நன்று.

மற்றவர்களுக்கும் இதனை வலியுறுத்துவோம்.

கூகுள் பிலஸில் -- 20 நாளில் 20 மில்லியன் பயனர்கள் !!இருபதே நாளில் 20 மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளது கூகுள் ப்ளஸ். குறிப்பாக இந்தியாவில் மட்டும் 20 லட்சம் பேர் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்துள்ளனர்.

பேஸ்புக்குக்குப் போட்டியாக கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது கூகுள் ப்ளஸ். சோதனை ஓட்டமாக அறிமுகமானபோதே பல லட்சம் பேர் இதனைப் பயன்படுத்த முனைந்ததால், சர்வர் திணறும் அளவுக்கு நிலைமை போனது.

இப்போது முழு வீச்சில் பயனர்களுக்கு கிடைக்கிறது கூகுள் ப்ளஸ். தினமும் பல லட்சக்கணக்கானோர் இந்த தளத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் வரையிலான 20 நாட்களில் உலகம் முழுக்க 20 மில்லியன் பயனர்கள் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்துள்ளனர்.

இவர்களில் 50.31 லட்சம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 20.85 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 8.7 லட்சமும், ஜெர்மனிகாரர்கல் 7.1 லட்சமும், பிரான்ஸைச் சேர்ந்தவர்கள் 5 லட்சம் பேரும் பயனர்களாக சேர்ந்துள்ளனர்.

கூகுள் ப்ளஸ்ஸில் பயனர்கள் சேரும் வேகத்தைப் பார்த்தால், அதிவிரைவில் உலகின் டாப் சமூக தளமாக அது வந்துவிடும் என காம்ஸ்கோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்போது ஒரு நாளைக்கு 7.63 லட்சம் பேர் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்த வண்ணம் உள்ளார்கள். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 5 மாதங்களில் கூகுள் ப்ளஸ் 100 மில்லியன் பயனர்கள் எண்ணிக்கையைத் தாண்டிவிடும் என ஆன்செஸ்ட்ரி இணையதள நிறுவனர் பால் ஆலன் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி- 1இந்தியா
 

பேரழிவை ஏற்படுத்த இருக்கும் மஞ்சள் காமாலை!!

 ஆசியாவின் தென்பகுதி மற்றும் தென்கிழக்கு நாடுகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மஞ்சள் காமாலை (அ) கல்லீரல் அழற்சி நோயினால் கொல்லப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (ஜெனீவா, சுவிட்சர்லாந்து) தெரிவித்துள்ளது.

இவை மனிதனின் உடம்பில் உள்ள கல்லீரல் பாதிக்கப்படும் போது இந்த நோய் உருவாகிறது. நீர் மற்றும் தொற்று இந்த நோய் மூலமாக பருவுகிறது.

இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தை இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு நாடும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக கருத வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில், மலேரியா, டெங்கு அல்லது எயிட்ஸ் நோயினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இந்த மஞ்சள் காமாலை நோயினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று தெரியவந்துள்ளது.

மஞ்சள் காமாலை நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி ஏற்றும் திட்டம் முன்னேற்றம் கண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக பரவும் இந்த மஞ்சள் காமாலை நோயினால் ஆண்டு தோறும் பெருமளவானோர் கொல்லப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் பறக்கும் புல்லட் ரயில்கள் மோதல், 30 பேர் பலி, 180 பேர் காயம்.


சீனாவின் கிழக்கு மாகணமான ஸேஜியாங் நகரத்தில், நேற்று இரவு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. முதலில் சென்று கொண்டிருந்த ரயில் மின்னல் தாக்குதல் காரணமாக மின்சார இணைப்பை இழந்து நின்று கொண்டிருக்கையில் பின் தொடர்ந்து வந்த அதிவேக புல்லட் ரயில் நின்ற ரயிலின் மீது மோதியது. இந்த விபத்து 20 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் நடந்ததால் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு கீழே விழுந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்தோர் எண்ணிக்கை 200 ஆகவும், 35க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருக்க கூடும் என அந்நாட்டின் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த விபத்து அந்த நாட்டின் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து நிகழ்ந்த ரயில்கள் டி பிரிவினை சேர்ந்தவை ஆகும். அதாவது இந்த வகையான ரயில் மணிக்கு 150 கி.மீ வேகம் செல்லக் கூடியது. ஆனால் தற்போது சீனாவிடம் .மணிக்கு 250 கி.மீ செல்லக் கூடிய ரயில்கள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

சில மாதத்திற்கு முன்புதான் அதி வேக புல்லட் ரயிலின் எண்ணிக்கையை அதிகமாக்குவாதக சீன அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.

எங்கே தேடுவேன்? தமிழை எங்கே தேடுவேன்??


தமிழை எங்கே தேடுவேன்???

மலையாள நட்சத்திரங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை

மோகன் லால் மற்றும் மம்மூட்டி வீடுகளில் இன்று காலை 6.30 மணியிலிருந்து சோதனையிட ஆரம்பித்தனர்.அதிகாரிகளிடம் பல ஆவனங்கள் சிக்கியாதக தெரியவந்துள்ளது. அதில் அதிகார பூர்வமாக தெரிந்த ஒரு தகவல், மோகன் லால் தனது கொச்சி வீட்டில் யானை தந்தம் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மற்ற தகவல்கள் வெளியே வரவில்லை.

இருவருக்கும் சேர்த்து மொத்தம் 18 இடங்களில் வருமானா வரி சோதனை நடக்கிறது. இதில் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், ஓட்டல்களும் அடங்கும்.

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினச் சிறப்பு கட்டுரை

"உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன்."

"நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்."

"ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் பார்த்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர்."

"உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் அனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது."

"பனைமரம்: தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.
தென்னைமரம்: தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது.
அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
வாழைமரம்: தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும்
. - கண்ணதாசன்"
இப்படி நண்பர்களை பற்றி கூறியவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.

நட்பு என்பது ஒரு மந்திர உறவு, முழுமையான மகிழ்ச்சி மற்றும் கேளிக்கைகள் கொண்டது. ஜாய்ஸ் ஹால் என்பவர் 1919 ஆம் ஆண்டு இதனாய் நடைமுறைபடுத்தினார். அன்று முதல் இது கொண்டாடடப்ட்டு வருகிறது. வயதானாலும் நட்புக்கு என்றும் வயது இல்லை. அன்று உயிருக்கு உயிராக நண்பர்களாக பழகி வருபவர்கள் கூட தங்கள் நட்பை பலப்படுத்திக்கொள்ள, தங்கள் அன்பை வெளிப்படுத்த நண்பர்கள் கையில் நட்பு கயிற்றை கட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள். குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆண்-பெண், ஏழை-பணக்காரர் போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு.கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் பொய், கொஞ்சம் சண்டை ஆனால் நிறைய சந்தோஷம் நிறைய நிறைய அன்பு, பகிர்வு, அக்கறை இதுவே நட்பு.

நண்பர்கள் இல்லாதவர் என யாருமில்லை.சந்திக்க முடியாவிட்டாலும், வாழ்த்து அட்டை, இ-மெயில், ஏன் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதன் மூலம் கூட அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது வரவேற்கத்தக்கது. பழைய நண்பர்களை நினைவுபடுத்தும் தினமாகவும் நண்பர்கள் தினம் இருக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை, நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது.

நண்பர்களிடையே வரக்கூடாத விஷயம் "முறிவு'. தவிர்க்க முடியாத காரணங்களினால் முறிந்து விட்ட நட்புக்கு வைத்தியம் பார்க்கும் நாளாகவும் இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதால் எந்த இழிவும் இல்லை என்பதை உணர வேண்டும்.

எல்லோருக்கும் வலையுலக நட்புக்களுக்கும் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்து உரித்தாகட்டும்.

(இந்த கட்டுரை எனது நண்பர்களுக்கும் நண்பர்கள் தினம் கொண்டாடும் அனைவருக்கும் சமர்ப்பணம். எல்லோரும் தங்களது நண்பர்களுக்கு இத்தனை பகிர்ந்து கொள்ளவும்.)

இன்ப துன்பம் காரணத்தோடு வருகிறது - புத்தர்தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும்.
அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச்
சொல்லுங்கள்.

‘நான்’ என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும்
பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத்
தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும்.
அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்து
கொள்ளும் வரை ‘நான்’ என்ற மயக்கம் இருக்கும்.

வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள்
அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது.
காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பமோ துன்பமோ ஒரு
காரணத்தோடுதான் வருகிறது.

கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய்
உருவெடுக்கிறது. பின்பு, அது மழையாகி மலைச்சரிவின் வழியே
உருண்டோடி ஆறாகிறது. ஆறு கடலில் கலக்கிறது. இது ஒரு
சுழற்சி, இடையறாத இயக்கம். எல்லா நிகழ்வுகளிலும் இதனை
நீங்கள் காணமுடியும்.

நடுக்கடலின் ஆழம் கரையோரத்தில் இல்லை. கரையில் நிற்பவர்
கொஞ்சம் கொஞ்சமாய் கடலினுள் செல்லும் போது அதன் ஆழம்
அதிகரிப்பதை அறியலாம். அதுபோலவே படிப்படியாகத்தான்
தர்மத்தில் மேன்மை அடைய முடியும். பயிற்சியைத் தொடர்வதன்
மூலமே ஒழுக்கத்தில் உணர்வு காணமுடியும்.

கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம்
ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே
ஒதுக்கிவிட வேண்டும்.

குளு குளு குடகு

ஊட்டி, கொடைக்கானல் அல்லது மூணாறு ஆகிய இடங்களுக்கு போய் அலுத்து போனவர்களுக்கு ஒரு மாற்று  விடுமுறை கொண்டாட்டமாக இருப்பது குடகு மாவட்டம். அதாங்க கூர்க் (Coorg). கர்நாடகாவில் உள்ள ஒரு சிறந்த சுற்றுலா தளம் தான் கூர்க்.


மைசூரில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள கூர்கில், காபி, ஏலக்காய், மிளகு இவை அனைத்தும் தாண்டி அனுபவிக்க நிறைய உள்ளது. மடிக்கேரி இதன் தலைநகரம், நல்ல கடை தெருக்களும் மற்றும் சிவப்பு-கூரைகள் கொண்ட இந்திய மலை வீடுகளும் கொண்டதாகும்.
மடிக்கேரி அருகில் சுமார் 30 கிமீ தொலைவில் புத்த துறவிகள் மடம் உள்ளது. 1963 ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது, அவ்விடத்தை தங்க கோவில் அதாவது கோல்டன் டெம்பிள் என்று அழைக்கின்றனர். புத்த மதத்தினை பற்றி தெரிந்து கொள்வாதோடு மட்டுமில்லாமல் மனத்தை தளர்த்திக் கொள்ள ஒரு நல்ல இடம். இது அமைந்திருப்பது குஷால் நகர் எனும் இடத்தில் உள்ளது.மடிக்கேரி அருகே மற்றொரு இடம் காவேரி நிசர்காதமா, இங்கு அனுபவிக்க படகு சவாரி, யானை சவாரி, மான் பூங்கா மற்றும் காவேரி நதி கரை என்று பல உள்ளன.
அது மட்டுமில்லாமல் அருகே அருமையான அபே அருவி உள்ளது. இங்கிருந்து காவேரி நதிக்கு தண்ணீர் பாய்கிறது. இருப்பு அருவி, தலை காவேரி, ராஜா ஸீட் போன்ற குழுமையான இடங்களும், தடியன்டாமோள், நால்கூநாடு அரண்மனை போன்ற இடங்களும் தவறாமல் பார்க்க வேண்டியவை.

சென்னை: அடிப்படை வசதிகளில் பின் தங்கும் நகரம்!!!!!


சென்னை: அடிப்படை வசதிகளில் பின் தங்கும் நகரம்.

இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் சென்னையும் ஒன்று. அது மட்டுமின்றி தமிழ் நாட்டின் தலைநகரும் இது தான். இன்று அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் கிளை தொடங்க ஆர்வம் காட்டப்படும் நகரும் இது தான். வான் போக்குவரத்து மற்றும் விமான போக்குவராத்தும் தன்னகத்தேகொண்ட நகரமும் இது தான்.


நகருக்காண மிக சாதாரண அடிப்படை வசதி கொண்டில்லாத நகருமும் இது தான் என்பது வேதனைக்கு உரியதுதான். சென்னையில் சில பகுதிகள் செழிப்பகவும், சில பிகுதிகள் வறண்டும் காணப்படுகிறது. இன்னும் ஒரு கழிப்பிட வசதியம் இல்லாத பேருந்து நிலையன்களும் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன, கழிப்பிட வசதி இருக்கும் இடங்களில் அவைகள் பராமரிப்பற்று அவல நிலையிலே உள்ளன. இவ்விடம் எச்சில் அவலங்களும், குப்பை கூளங்களும், கொட்டி கிடக்கும் இடமாகவே மாறிவிட்டன. கூட்ட நெரிசல் உள்ள இடங்கலான திருவன்மையூர் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களிலே காண முடிகிறது என்பது தான் வேதனைக்கு உரியது. இவைகளால் பெரிதும் பாதிக்க படுபவர்கள் வெளியூர் பயணிகளே.

சாலையில் காணப்படும் குண்டும் குழிகள், மாநகராட்சியின் அவலங்கள், மழை காலங்களில்
சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மாநகராட்சியின் அலட்சியத்தால் இது போன்று பல்வேறு இடங்களில் சென்னை தூய்மையில் பின் தங்கி கிடக்கிறது. சென்னை நகரின் மிகப்பெரிய முட்டு கட்டைகளில் ஒன்று பராமரிப்பு பணிகள். அரசின் பல்வேறு திட்டங்களில் கொண்டு வரப்படும் பணிகளை சரியாக பாரம்ரிப்பு செய்தாலே இந்த் நகரின் அடிப்படை தேவைகள் பூர்த்தி ஆகிவிடும்.மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்

மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; அதிகாரிகளிடம் விசாரணை

மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள கோடிக்கணக்கான ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தி, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.


மதுரை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த தேன்மொழியும், துணை மேயராக பி.எம்.மன்னனும் உள்ளனர். மண்டலத் தலைவர்களாகவும் திமுகவை சேர்ந்தவர்களே இருந்து வருகின்றனர்.

திமுக ஆட்சியில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் கட்டமாக மதுரை திடீர் நகரில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு அவற்றை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார்.

ஆனால், குடிசைகளே இல்லாத பகுதிகளில் குடிசைகள் இருப்பதாகக் காட்டி, அந்த இடங்களில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டதாகவும், இதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், இதன்மூலம் பல கோடி மோசடி நடந்துள்ளதாகவும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

இந் நிலையில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இசக்கி ஆனந்தன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாநகராட்சியில் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று பகலில் தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.

மதுரை மாநகராட்சிக்கு மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் ரூ.2,496 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு கடந்த 2007ம் ஆண்டு 2வது வைகை குடிநீர் திட்டம், தடுப்பணைகள் கட்டுதல் மற்றும் பல்வேறு பணிகள் மதுரை மாநகராட்சியால் தொடங்கப்பட்டன.
இந்தப் பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பல கோடி ரூபாய் ஊழல் செய்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

காணாமல் போன நிறுவனம்- காணமல் போன ரூ.23.60 கோடி கம்பிகள்:

பெங்களூர் தீபிகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் கிருதுமால் நதியில் சுவர் அமைக்க முன்பணமாக ரூ.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் பணியைத் தொடங்கவில்லை. மேலும் அந்த நிறுவனமே சில காலமாக இயங்கவில்லை. கிட்டத்தட்ட தலைமறைவு நிலையில் உள்ளது அந்த நிறுவனம்.


இந்தப் பணிகளுக்காக 800 டன் இரும்பு கம்பிகள் வாங்கப்பட்டன. இதில் 70 டன் இரும்பு கம்பிகள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதம் 20 டன் கம்பிகள் மட்டுமே இருப்பில் உள்ளது. மீதம் 710 டன் இரும்பு கம்பிகள் விற்கப்பட்டுவிட்டதாகவும் புகார் உள்ளது.இதன் மதிப்பு ரூ.23.60 கோடியாகும்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விஜயகுமார், ராஜேந்திரன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசீலன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.


இந் நிலையில் இன்றும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. அதிகாரிகள் தரும் தகவல்களின் அடிப்படையில் மேயர், துணை மேயரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நன்றி : ஒன் இந்தியா

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது புகார்!!!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார்:
Add caption

திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்பட 11 பேர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ஹோட்டல் அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கே. கதிர்வேல். இவர் நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 2005-ம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றை அதன் உரிமையாளர்கள் ஆர். குரு சங்கர நாராயணன், ஆர். சங்கரிதேவி, ஆர். சுப்புலட்சுமி, வளமங்கை நாச்சியார் ஆகியோரிடம் இருந்து முறைப்படி வாங்கினேன். இது குறித்து நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளோம்.

இதையடுத்து ஹோட்டலுக்கான வரிகள், கட்டணங்களை நான் செலுத்தினேன். பின்னர் ரூ. 1.5 கோடி செலவு செய்து ஹோட்டலை புதுப்பித்தேன்.

இந்நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் என் ஹோட்டலுக்கு அருகே உள்ள இன்னொரு ஹோட்டல் உரிமையாளர்களான ஜி. ரங்கநாதன், ஜி. மணி மற்றும் சிலர் வந்து என்னை மிரட்டினர்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவருடைய சகோதரர் கே.என். ராமஜெயம் ஆகியோர் என் ஹோட்டலை வாங்க ஆர்வமாக உள்ளனர் என்றும், அவர்கள் மீறி இங்கு எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டினர்.

அவர்கள் தொடர்ந்து மிரட்டியதால் நான் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். மறுநாள் இரவு 1.30 மணி அளவில் திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்தவர்கள் என் ஹோட்டலை அடித்து நொறுக்கிவிட்டு, ஊழியர்களையும் விரட்டிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் உடனே அப்போதைய கன்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் சுவாமிநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்தேன். அதற்கு அவர் அமைச்சரின் ஆசையைத் தடுக்க முடியாது. எனவே, அவரது தம்பியிடம் சமரசமாகப் போகுமாறு தெரிவித்தார். நான் இந்த உரையாடலை பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

நான் கொடுத்த புகார் பற்றி கண்டுகொள்ளாத காவல்துறை, எதிர்மனுதாரர்களிடம் இருந்து பெற்ற பொய்ப் புகாரை வைத்துக் கொண்டு போலீசார் என் மீதும், என்னைச் சார்ந்தவர்கள் சிலர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி என்னிடம் இருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்ட ஹோட்டலை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : ஒன் இந்தியா

மதுரை பெயரைக் கெடுக்கும் தமிழ்ப் படங்களால் பின்வாங்கும் ஐடி நிறுவனங்கள்!

மதுரை: மதுரை என்றாலே வன்முறை நிறைந்த நகரம் என்று நினைக்கும் அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் கோவில் நகரம் கொலை நகரமாகக் காட்டப்படுகிறது. இதனால் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மதுரைக்கு வர அஞ்சுவதாக தெரிய வந்துள்ளது.

மதுரை என்றாலே மல்லிகைப்பூவும், மீனாட்சி அம்மனும் தான் நினைவுக்கு வரும். விருந்தோம்பலில் மிரள வைப்பவர்கள் மதுரைக்காரர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் கேட்காமலேயே உதவிக்கு வருபவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று மதுரையைப் பற்றி நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு மட்டும் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.

நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களை வைத்துப் படம் எடுத்து கல்லாக் கட்டி பிழைத்து வரும் தமிழ் சினிமாக்கார்களின் செயலால் இன்று மதுரை நகரம் மிகப் பெரிய அவலத்தையும், பொருளாதார பின்னடவையும் சந்திக்க நேர்ந்துள்ளது என்றால் நம்ப முடியவில்லை இல்லையா. ஆனால் உண்மையை அறிந்தால் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.

முன்பு மதுரையை வைத்து நிறையப் படங்கள் வந்துள்ளன.அந்தப் படங்களில் மதுரை மண்ணின் பாசம், நேசம், உயிர்ப்பு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றையே பிரதானமாக காட்டுவார்கள். குறிப்பாக அந்தக் காலத்து சிவாஜி கணேசன் படங்கள், பின்னர் வந்த எஸ்.எஸ்.ஆர். படங்கள், பிற்காலத்தில் வந்த ராமராஜன் படங்களில் இதை அதிகம் காணலாம்.

ஆனால் தற்போது வெளிவரும் தமிழ் படங்களில் மதுரையில் ஏதோ கொலையை தொழில் போல செய்வதாக காட்டுகிறார்கள். காலையில் எழுந்துதம் பல்லை விளக்கி விட்டு, பத்து பேரைக் கொலை செய்து பின்னர்தான் டீ சாப்பிடுவார்கள் என்பது போலவும், மத்தியானத்திற்கு மண்டையை வெட்டி கறி சமைத்து சாப்பிடுவார்கள் என்பது போலவும், சாயந்திரம் நாலு பேரை சாய்த்து விட்டுத்தான், ராத்திரிக்குத் தூங்கப் போவார்கள் என்பது போலவும் காட்டுகிறார்கள்.

மதுரை என்றாலே ரத்த பூமி என்பது போலவும், அங்கு மனிதர்களே கிடையாது என்பது போலவும், மதுரையி்ல் தினசரி தவறாமல் கொலை செய்வது போலவும் காட்டி மதுரையின் மாண்பை சீர்குலைத்து, சீரழித்து வருகிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.

குறிப்பாக சுப்பிரமணிய புரம் படம் வந்த பிறகுதான் மதுரை என்றாலே கொலை நகரம் என்ற அவப்பெயரை மக்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் திணித்து விட்டனர் தமிழ் சினிமாக்காரர்கள்.

மதுரை சம்பவம், ஆடுகளம் ஆகிய படங்களும் மதுரையில் எடுக்கப்பட்டவை. அனைத்திலும் வன்முறை தான் பிரதானம்.

இது சாதாரண சினிமாதானே என்று விட்டு விட முடியவில்லை. காரணம், மதுரையின் பொருளாதாரத்தையே பாதிப்பதாக அமைந்துள்ளன இந்த சினிமாப் படங்கள் என்ற உண்மை இப்போது தெரிய வந்துள்ளது.

இப்படிப்பட்ட கேடு கெட்ட திரைப்படங்களைப் பார்த்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மதுரையில் கிளை அமைக்க அஞ்சும் அளவுக்கு நிலைமை கை மீறிப் போயுள்ளது.

இந்தியாவின் பெருநகரங்கள் தவிர்த்து 2ம் நிலை நகரங்களில் கிளை அமைக்கலாம் என நினைக்கும் பெரிய பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடைசியாகத்தான் மதுரையைப் பற்றி சிந்திக்கிறார்களாம். காரணம், திரைப்படங்களில் காட்டப்படும் பொய்யான மதுரையை நினைத்து அஞ்சுவதால்.

இதில் விந்தை என்னவென்றால் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் 25 சதவீதம் பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள்தான்.

கடந்த ஆண்டு நடந்த பல்துறை வல்லுநர்கள் கூட்டத்தில் தான் இந்த கருத்து வெளியிடப்பட்டது.

மதுரையில் இலந்தைக்குளத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது ஐடி பூங்கா அமைக்கப்பட்டது. அதில் இதுவரை இதுவரை 3 நிறுவனங்கள் மட்டும் தான் தங்கள் கிளைகளை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல வடபழஞ்சியில் அமைக்கப்படுவதாக கூறப்பட்ட ஐடி பூங்கா இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை.

தமிழ் சினிமாக்களில் மதுரையைப் பற்றி அவதூறாக, அசிங்கமாக, கோரமாக சித்தரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் மதுரையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக அரசு இந்த விஷயத்தை சற்று சீரியஸாக கவனித்தால் மட்டுமே மதுரைக்கு மோட்சம் கிடைக்கும் - இந்த தமிழ் சினிமா வியாபாரிகளிடமிருந்து.

நன்றி : ஒன் இந்தியா

தமிழ் காய்கறி சொற்பொருள்

AMARANTH - முளைக்கீரை
ARTICHOKE - கூனைப்பூ
ASPARAGUS - தண்ணீர்விட்டான் கிழங்கு
BEANS - அவரை
BEET ROOT - செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு
BITTER GOURD - பாகல், பாகற்காய்
BLACK-EYED PEAS - தட்டைப்பயறு
BOTTLE GOURD - சுரைக்காய்
BROCCOLI - பச்சைப் பூக்கோசு
BRUSSELS SPROUTS - களைக்கோசு
CABBAGE - முட்டைக்கோசு, முட்டைக்கோவா
CARROT - மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு
CAULIFLOWER - பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா
CELERY - சிவரிக்கீரை
CILANTRO - கொத்தமல்லி
CLUSTER BEANS - கொத்தவரை
COLLARD GREENS - சீமை பரட்டைக்கீரை
COLOCASIA - சேப்பங்கிழங்கு
CORIANDER - கொத்தமல்லி
DRUM STICK - முருங்கைக்காய்
ELEPHANT YAM - கருணைக்கிழங்கு
FRENCH BEANS - நாரில்லா அவரை
GOOSEBERRY - நெல்லிக்காய்
GREEN BEANS - பச்சை அவரை
KALE - பரட்டைக்கீரை
KING YAM - ராசவள்ளிக்கிழங்கு
LADY'S FINGER - வெண்டைக்காய்
LEAFY ONION - வெங்காயக் கீரை
LEEK - இராகூச்சிட்டம்
LETTUCE - இலைக்கோசு
LOTUS ROOT - தாமரைக்கிழங்கு
OLIVE - இடலை
PARSLEY - வேர்க்கோசு
PLANTAIN - வாழைக்காய்
POTATO - உருளைக்கிழங்கு
RED CARROT - செம்மஞ்சள் முள்ளங்கி
RIDGE GOURD - பீர்க்கங்காய்
SNAKE GOURD - புடல், புடலங்காய்
SPRING ONION - வெங்காயத்தடல்
SQUASH GOURD - சீமைப்பூசனி(க்காய்)
SWEET POTATO - வத்தாளக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு
TAPIOCA - மரவள்ளி(க்கிழங்கு)
YAM - சேனைக்கிழங்கு
ZUCCHINI - சீமைச் சுரைக்காய்

பெண்கள் உணவில் சேர்க்க வேண்டிய ஊட்டச் சத்துக்கள் ஐந்து

இலை காய்கறிகள்:

உங்கள் உணவில் காய்கறிகள் இல்லாமல் உங்கள் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. கீரை, பருப்பு வகைகள், காளான்கள், கீரை, வெந்தய இலைகள், பூக்கோசுகளிள் ஊட்டச்சத்து, நார்சத்து, உயிர்ச்சத்து அதிகமாக உள்ளது. காய்கறிகள் பார்வை பாதுகாவலன் என கூறலாம், தேவையான 4 கனிமங்கள் தருகிறது, அவை சுண்ணாம்புச்சத்து (கால்சியம்), வெளிமம் (மெக்னீசியம்), இரும்பு மற்றும் வெடியம் (பொட்டாசியம்). இவைகளை உங்கள் உணவில் தினமும் சேர்க்க முயற்சிக்கவும்.

தானியங்கள்:


96 சதவீதம் ஊட்டச்சத்து மற்றும் தேவையான உயிர்ச்சத்து உள்ளது. கோதுமை ரொட்டி, கோதுமை மாச்சேவை, பழுப்பு அரிசிகளிள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது, இது உடல் இடை அதிகபடுத்தாது.

 


பருப்பு, கொட்டைவகைகள்:

தயிருடன் கலந்து சாப்பிடுவது புரதச் சத்தை அதிகப்படுத்தும். இதய நோய் மற்றும் புற்றுநோய்களை தடுக்கும். மாலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அதிகமா வேண்டாம். வாரத்திற்கு ஒரு முறை கால் கப் அல்லது சுமார் 15-20 பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் போதுமானது.

வெண்தயிர்:

குறைந்த கொழுப்பு அல்லது வெற்று தயிரில், வைட்டமின்கள்,  புரதம் மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. ஒரு வாரத்திற்கு மூன்று  அல்லது நான்கு கப்  உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் அதில் சர்க்கரை சேர்க்க கூடாது.

சதைக்கனி:

சதைப் பற்றுள்ள பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை, நோய் குறைவாகவும், மேலும் நினைவக இழப்பை தடுக்கும்.

"சமச்சீர் கல்வித்திட்டம் செல்லுபடியாகும்"

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக திமுக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லுபடியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தச் சட்டத்துக்கு தற்போதைய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தங்கள் செல்லுபடியாகாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கிராமப்புற பள்ளியில் சில மாணவர்கள்

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டு தொடர வேண்டும் எனவும், எதிர்வரும் 22 ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்றைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டமானது மாணவர்களின் கல்வியறிவையும் தரத்தையும் உயர்த்துவதாக இல்லை என்றும் அதன் காரணமாக அந்தத் திட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்து அதன் செயலாக்கத்தை தற்போதைய அ இ அ தி மு க அரசு அதனை நிறுத்தி வைக்கும் வகையில் சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது.

தமிழக அரசின் முடிவை எதிர்த்து சமச்சீர் கல்விக்கு ஆதரவானவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். சென்னை உச்சநீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திருத்ததுக்கு தடை விதிக்க, தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது.

இந்திய உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினை குறித்து ஆராய ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அந்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் என தெரிவித்தது.

தமிழக அரசு தலைமைச் செயலர் தலைமையில் அமைத்த உயர்மட்டக் குழு வழங்கிய அறிக்கையை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் முந்தைய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் எனவும் அதன் அடிப்படையில் பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டதிருத்தம் அவசரகோலத்தில் கொண்டுவரப்பட்டது என்றும், புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இந்தத் திட்டத்தை ரத்து செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசு சரியாக ஆராயாமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது என்றும் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

உயரும் மின்சார கட்டணம்!!! பணக்கஷ்டத்தில் தமிழ்நாடு மின்வாரியம்!!!

மின்சார கட்டணத்தை உயர்த்தும் நோக்கில் தமிழ் நாடு அரசு மின்சார வாரியத்திடம் தெளிவான கட்டண வீதப் பட்டியலை கோரியுள்ளது.
மின்சார வாரியம் ஆண்டிற்கு ரூபாய் 40,300 கோடி இழப்பயும், ரூபாய் 10,000 கோடி அளவு பற்றாக்குறையையும் சந்தித்துள்ளது.


அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ் நாடுதான் கடந்த சில ஆண்டுகளாக மிக குறைந்த கட்டண வீதம் வசூலித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு தான் ஒரு சில பிரிவிற்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டது.
பண பற்றாக்குறையின் காரணமாக கட்டண வீதப் பட்டியலை சீர் செய்வது ஒன்றே வாரியத்தை மீட்க வழி என்று அரசு முடிவெடுத்துள்ளது. பட்டியலை சீர் செய்து அரசிடம் வாரியம் ஒப்படைத்த பின்பு கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளது.

வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவில் தொழில் நடத்த சலுகை மின்சாரம் நாம் ஏன் வழங்க வேண்டும். இலவச மின்சாரம், சலுகை மின்சாரம் என்ற பேரில் மின்சாரம் வழங்குவதை நிறுத்தினாலும் நாடு முன்னேறும்.

தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு -ஒரு சவரன் ரூ 18,850தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அடித்தட்டு மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. இதற்கு online வர்த்தகம் போன்ற
மறைமுக பதுககல் தான் காரணம் என்கின்றனர் பொருளியல் வல்லுநர்கள். இது போன்ற பதுக்கல் இருந்து தங்கதிருக்கு விளக்கு அளிக்கும் பொருட்டு தங்கத்தின் விலை ஏற்றததினை குறைக்க
இயலும்.

தெய்வ திருமகள் -- திரைப்பட விமர்சனம்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்...

-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.

ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

'ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.

மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, 'இனிப்பு இனிப்பாக இருக்கிறது' என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால்.... காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது 'எ பிலிம் பை விஜய்' என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.

அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்

100 -வது சதமடிக்க தயாராகும் சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச அரங்கில் மொத்தம் 99 சதங்கள் (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டி 48 சதம்) அடித்துள்ளார்.
அவர் 100 -வது சதத்தை எப்போது அடிப்பார் என்று கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்சில் வரும் 21 -ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் இந்த சாதனையை டெண்டுல்கர் படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வெஸட் இண்டீஸ் தொடரில் விளையாடாமல் குடும்பத்துடன் லண்டனுக்கு சென்ற டெண்டுல்கர் அங்கு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து வருகிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் வகிக்கும் அவர்,  அங்கிருந்தபடியே இந்திய அணியுடன் இணைந்து கொள்கிறார்.
100 -வது சதம் பற்றி கேள்வி எழுப்பிய போது, சாதனைகள் குறித்து தான் சிந்திப்பதில்லை என்றும், இந்த கிரிக்கெட் தொடரை எப்படி உற்சாகமாக அனுபவித்து விளையாடுவது என்பது பற்றி மட்டும்தான் சிந்தித்து வருவதாகவும் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
போட்டியை நான் மிக உற்சாகமாக விளையாடுகிறேன் என்றால், அதன் பிறகு இயற்கையாகவே எனது விளையாட்டின் தரமும் உயர்ந்து விடும். அதுதான் முக்கியம் என்று அவர் கூறினார்.


21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் டெண்டுல்கரிடம் ஓய்வு குறித்து கேட்ட போது அது பற்றிய எண்ணமே தனக்கு இல்லை என்று தெரிவித்தார்.

மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு; 21 பேர் பலி; காயம் 141

மும்பையில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 141 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று 7.10 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தாதர், ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுஸ் ஆகிய இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பை தொடர்ந்து மும்பை முழுவதும் மக்களிடையே பதட்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
நகர் முழுவதும் காவல்துறை பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே குண்டுவெடிப்பு குறித்த தகவலறிந்து, மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங், மகாராஷ்ட்ரா மாநில காவல்துறை டிஜிபி-யை தொடர்புகொண்டு பேசினார்.
முதல் குண்டுவெடிப்பு ஜவேரி பஜாரில் இரவு 7.10 மணி அளவிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தாதர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த டேக்ஸி ஒன்றிலும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடித்தது எந்த வகையான குண்டு என்பது குறித்து உடனடியாக எதுவும் கூற இயலவில்லை என்றும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்த மும்பை காவல்துறை உயரதிகாரி ஒருவர், தாதரில் நடந்த குண்டுவெடிப்பு இடத்தில் டிபன் பாக்ஸ் ஒன்று கிடந்ததாக தெரியவந்துள்ளதாகவும், எனவே வெடித்தது டிபன் பாக்ஸ் வெடிகுண்டா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் இந்தியன் முஜாஹிதீனின் கைவரிசை இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அனைத்து குண்டுவெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களிலும், பரபரப்பான நேரத்திலும் நடந்துள்ளது.இந்நிலையில் குண்டுவெடிப்பை தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

எல்ஜி : ஆன்ட்ராய்டுடன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தங்களது தயாரிப்புகளை முன்னிலைப்படுத்த பல்வேறு மார்க்கெட்டிங் யுக்திகளை முன்னணி நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.

அந்த வகையில், பேட்டரி சார்ஜை 50 சதவீதம் அளவுக்கு சேமிக்கும் திறன் படைத்த தொடுதிரையுடன் கூடிய ஆப்டிமஸ் பிளாக் என்ற ஸ்மார்ட்போனை எல்ஜி களமிறக்கியுள்ளது.

4.0 இஞ்ச் தொடுதிரை கொண்ட ஆப்டிமஸ் பிளாக், நோவா டிஸ்பிளேயுடன் வந்துள்ளது.

ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன்கள் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு இன்பில்ட் ஸ்பீக்கருடன் வந்துள்ளது. வடிமைப்பிலும் ஆப்டிமஸ் நெஞ்சை தொடுகிறது. தவிர, அனைத்து டாப்என்ட் வசதிகளை கொண்டுள்ளது.

ஆப்டிமஸ் பிளாக் சிறப்பம்சங்கள்:

ஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டம்

2.0 மெகாபிக்செல் முகப்பு கேமரா

கையாள்வதற்கு எளிதாக 3.84 அவுன்ஸ் எடை

போன் லாக் மோடில் இருந்தாலும், இமெயில்களை நேரடியாக பார்க்கும் வசதிகொண்ட ஆப்டிமஸ் யூஐ 2.0 சாப்ட்வேர்

டியூவல் கோர் பிராசஸர்

குறைந்த பேட்டரி சார்ஜில் இயங்குகிறது

1500mAh ஆற்றல் வாய்ந்த பேட்டரி

அனைத்து அம்சங்களும் கொண்ட இந்த போனின் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் விரைவில் களமிறக்க எல்ஜி திட்டமிட்டுள்ளது.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content