சிகரெட்: புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? ஜாக்கிரதை!!!

புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஒரு சிறு குறிப்பு. புகைப்பழக்கம், அதன் விளைவுகள் பற்றி எவ்வளவோ விழிப்புணர்வுகள் கொடுத்தாகிவிட்டது இருந்தும் அதன் மீது நடத்தப்படும் ஆராய்சிகள் குறைந்தபாடில்லை. காரணம் புகைப்பழக்கத்தின் அடிமைகள் பெருகிக் கொண்டே போவதுதான். அண்மையில் நடத்தப்ப ஆய்வில் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. புகைப்பழக்கம் எல்லா வயதினரையும் பாதிக்கிறது குறிப்பாக நடுத்தர வயது உடையவர்கள் மூளை சுருங்கும் தன்மைக்கு ஆளாகிறார்கள். 50 முதல் 60 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களது மூளையின் வெள்ளைத்திசுவில் மாற்றம் அல்லது ரத்தக் குழாயில் சிறிய பாதிப்பு ஏற்படுவதும். திட்ட மிடுதல் மற்றும் முடிவெடுத்தல் போன்ற வற்றில் மிகவும் பின்தங்கியுள்ளதும் தெரியவந்தது.

இது என்னவோ நடுத்தர வயதுக்காரர்களுக்கு மட்டும்தானே நமக்கென்ன என்று நினைக்கும் மற்றவர்களுக்கு பொதுவான பாதிப்புகளை தெரிந்துகொள்ள மேலே படிக்கவும்.



எல்லோரும் புற்றுநோய் வரும், நுரையீரல் பாதிப்பு வரும்னு சொல்வாங்க இன்னும் தெரிஞ்சுக்க எவ்வளவோ இருக்கு. சிகரட்டில் பாக்டீரியா இருக்குன்னு கண்டுபிடிச்சுருக்காங்க அமெரிக்கர்கள் அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி. ஆனா இந்தியாவுல இதபத்தி பெருசா விழிப்புணர்வு ஏற்படல.

ஆய்வில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பல நிறுவன சிகரெட்டுகளில் மனிதர்களை தாக்குகிற கொடிய பாக்டீரியாக்கள் இருந்தது ஓர் அதிர்ச்சி. அதுமட்டுமில்லாமல், இதில் இருக்கும் பாக்டீரியாக்கள் கொடிய நோய்கள் ஏற்படுத்துவதோடு, வருடக்கணக்கில் உடம்பில் தங்கி பல வகை நோய்களையும் உண்டாக்கும்  என்பது அதிர்ச்சி தகவல்.

அதில் கண்டெடுக்கப்பட்ட பாக்டீரியாக்களும் அதன் விளைவுகளும் :

பெசில்லஸ் (Bacillus) - உணவு சம்பந்தப்பட்ட நோய்கள்.
சூடோமோனாஸ் ஏருஜினோசா (Pseudomonas aeruginosa) - தொற்று நோய்களை ஏற்படுத்துபவை.
அசினோபாக்டர் (Acinetobactor) - நுரையீரல், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள்.
பர்கோல்டீரியா (Burkholderia) - சுவாசக் குழாய் சம்பந்தப்பட்ட  நோய்கள்.

இது போக இன்னும் சில பாக்டீரியாக்களும் இருப்தாக அந்த ஆய்வு தெரிவித்தது. ஒரே ஒரு சிகரெட் பிடித்தால் கூட அதன் விளைவு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது நம் உடம்பில் உள்ள இரத்தநாளங்களை 25 சதவீதம் விரைத்துப்போகிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம் தடைபடுகிறது, இருதயம் கடுமையாக வேலை செய்தால் மட்டுமே ரத்த ஓட்டம் சீராகும் என்று தெரியவந்துளளது. இப்படி இரத்தநாளங்கள் விரைத்துப்போவது அதிகமானால் மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரத்தநாளங்கள் விரைத்துப்போவதினால் சாதாரணமாக ஓடுவது, படிக்கட்டுகளில் ஏறுவது மாதிரியான தினசரி செய்யும் செயல்கள் கூட நமக்கு மிகுந்த சிரமத்தை, அதிக மூச்சிறைப்பை ஏற்படுத்தும். புகைப்பழக்கம் இருக்கும் ஆண்களை விட பெண்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக இருதய நோய் ஆபத்து இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

புகையிலையில் நிக்கோடின் என்னும் நச்சுப்பொருள் இருப்பது தெரியும். அது காற்றில் கலந்துவிடுகிறது என்பதும் தெரியும். அதனால் அருகில் இருப்பவர்கள் கூட அதிக பாடதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதும் தெரியும். தெரியாத மற்றொன்று, நிக்கோடின் காற்றில் கலந்தது போக மீதமுள்ள நிக்கோடின் புகையானது வீட்டின் சுவர்கள், தரை, தரைவிரிப்புகள், மேஜை, நாற்காலி போன்ற பொருட்களில் படிந்து விடுகின்றன. அப்படிப் படியும் நிக்கோடின் புகை நாட்கள், வாரங்கள், மாதக் கணக்கில் படிந்த பொருள்களின் மீதே தங்கிவிடுகின்றன. இதனால் பாதிப்பு பெரியவர்களை விட குழந்தைகளுக்குத்தான். இப்படி படியும் நிக்கோடின் காற்றில் இருக்கும் நைட்ரஸ் அமிலத்துடன் (Nitrous acid) கலப்பதால். கார்சினோஜென் (Carcinogen) எனும் நச்சுப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை ஆகும். ஒரு சிகரெட்டில் சுமார் 100 நேனோகிராம் அளவு கார்சினோஜென் நச்சுப்பொருள் இருக்கிறது.

இதுக்கு மேலயும் புகைப்பழக்கத்தை குறைக்கிறதும் (கொஞ்சம் கொஞ்சமாக) விடறதும், உங்க கையிலதான் இருக்கு.

இதனை உங்கள் (புகைப்பிடிக்கும்) நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாமே.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content