சென்னையைச் சுற்றி ஏராளமான கார் நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் கார்களின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. இப்போது பல நிறுவனங்கள் சென்னையை விட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளன.
அந்நிறுவனங்கள் தமது புதிய ஆலையை அமைக்க குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளன, இது தமிழக தொழில்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக சென்னைக்கு அருகே ஆலை வைத்து கார் தயாரிக்கும் ஃபோர்ட் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் புதிய ஆலையை நிறுவும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் இராண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான போஜோ குஜராத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய ஆலையை திறக்க முடிவெடுத்துள்ளது.
முதலில் டாடா நானோ தொழிற்சாலை குஜராத்துக்கு சென்றது. அதனை தொடர்ந்து பல நிறுவனங்கள் இம்முடிவை எடுத்துள்ளது.
இதற்குமுக்கிய காரணம் தமிழகத்தில் ஏற்பட்ட மின் தட்டுப்பாடுதான் என தமிழகத்தின் தொழில் வர்த்தக தலைவர் ரஃபீக் அகமது கூறியுள்ளார். ஹூண்டாய் தொழிற்சாலையில் பல மாதங்களாக நடந்து வரும் தொழிலாளர் பிரச்சனை மற்றும் மின் தட்டுப்பாடு, ஆகியவை அந்நிறுவனத்தையும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதாகவும், தமிழகத்தில் கார் உற்பத்திக்குத் தேவையான அம்சங்கள் சாதகமாக இருப்பதாகவும், மின் வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தினால் முதலீடுகள் தொடர்ந்து வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

2 comments:
தொழிலாளர் பிரச்சனைகளுக்கு அரசு சரியான தீர்வு ஏற்படுத்தாத வரை இந்த நிலை தொடரவே செய்யும்!
எங்கு அடக்குமுறையும் , ஒடுக்குமுறையும் இருக்கிறதோ , அங்கு நிச்சியம் எதிர்ப்பும் இருந்தே தீரும். தமிழக தொழிலாளர்கள் மூலதனத்துக்கு எதிர்ப்பை காட்டுவது போல் கூடிய விரைவில் குஜராத் மாநில தொழிலாளர்களும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வர்.
Post a Comment