ஜீவா, நந்தா துரைராஜ், டாப்சீ பன்னு, சந்தானம் ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை இயக்கியிருப்பது ஆர்.கண்ணன், இசை தமண், ஒளிப்பதிவு பி. ஜி. முத்தையா, தயாரிப்பாளர் கே.எஸ். ஸ்ரீனிவாசன்.
ஜீவாவின் ரௌத்திரம் படத்திற்கு பிறகு, சிறிது எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம். கண்ணன், மணிரத்தினத்தின் சிஷ்யராக இருந்து பின் இயக்கிய ஜெயம் கொண்டான் பெரிய வெற்றி இல்லை என்றாலும் பாராட்டுகளை பெற்ற படம். இரண்டாவது படமான கண்டேன் காதலை வணிக ரீதியாக சிறிது வெற்றி பெற்றது, இருந்தாலும் அது ஜப் வீ மெட் எனும் இந்தி படத்தின் தழுவல்தான். ஏதோ இவ்விரண்டு படங்களும் மூன்றாவது படத்தின் எதிர்பார்ப்பிற்கு உதவியுள்ளது.
ஆனால் இனிமேல் ஆர்.கண்ணனின் படம் என்றால் விமர்சனம் கேட்ட பிறகு போகலாமே என்று தோன்றும், அப்படியொரு படம் தான் வந்தான் வென்றான். அதுக்காக படம் முழுவதும் மொக்கை இல்லை. சில ரசிக்கக் கூடிய விஷயங்கள் ஒளிப்பதிவு, பாடல், நகைச்சுவைகளும் இருக்கு.
விஷால் நடித்த தோரணை படத்தை எத்தனை பேர் பார்த்திங்களோ தெரியாது, ஆனா அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம். படத்தோட ஆரம்பத்தில, 'புதுசா ஏதோ காட்டுவாங்க போல' அப்படி நினைச்சு பார்த்துகிட்டே இருந்தா, அதான் இல்லை போகப் போக படம் என்னனு நம்மளுக்கே தெரியுது, சின்ன வயசிலேயே ஒடிப் போயிடுவாரு அண்ணன், மும்பைல ஒரு பெரிய தாதாவா ஆயிடுவாரு. அவருதான் நந்தா, ஜீவா அவரை தேடி ஒரு உதவி கேட்டு வருவாரு, அப்பறம் ஜீவாவின் காதல், டூயட்னு படம் ஏதோ போகுது. சந்தானம் அடிக்கடி கொஞ்சம் வர்றதுனால சிரிக்க முடியுது.
வெறும் 'அந்த ' இரண்டாவது ட்விஸ்டை நம்பி படம் எடுத்திருக்கார் நம்ம ஆர்.கண்ணன், ஆனா அதுவே அவர் இமேஜ்யை கடிச்சு வச்சிருச்சு. இனிமேலும் வித்தியாசமா சிந்திக்கிறேன்ற பேர்ல இப்படி படம் எடுக்காம இருந்தா சரி. சந்தானம் கொஞ்சம் படத்தை நகர்த்த உதவியிருக்கார், தமண் இசையில் அஞ்சனா, காஞ்சனமாலா, திறந்தேன் பாடல்கள் அருமை. டாப்சீ பொண்ணுக்கு யாராவது கொஞ்சம் நடிப்பு சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்கும். கொடுத்த காசுக்கு படத்தோட ஹீரோயினாக வந்துட்டு போகுது. (பொம்மை மாதிரி).
ஜீவா அவர் வேலையை ஒழுங்கா பார்த்திருக்கார், நந்தாவும் நல்லா நடிச்சிருக்கார் இருந்தாலும் ஒரு சில இடத்தில ரௌடியாக தெரியல. மனோபாலா, நிழல்கள் ரவி வந்துட்டு போறாங்க, ரகுமானுக்கு சின்ன பில்டப் கொடுத்தாலும் அவர் எதுவும் பெரிசா பண்ணல. எவ்வளவோ லாஜிக் இல்லாத காட்சிகள் படம் முழுக்க வருது, அதையெல்லாம் லிஸ்ட் போட்டா 'வந்தான் வென்றான் விமர்சனம் 2' அப்படிங்கற தலைப்பில தான் எழுதனும்.
, சந்தானம் கொஞ்சம், பாடல்கள் கொஞ்சம், படத்தோட எதிர்பார்ப்பு கொஞ்சம் எல்லாம் சேர்ந்து தியேட்டர்ல சில நாள் ஒடும். நேரம் கிடைச்சா சும்மா பாருங்க எதையும் பெருசா எதிர்பார்க்காதிங்க.
0 comments:
Post a Comment