தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

துப்பாக்கி திரை விமர்சனம் - Thuppakki Review

துப்பாக்கி


நடிப்பு

விஜய்
காஜல் அகர்வால்
சத்யன்
அக்ஷரா கொவ்டா
கவுதம் கருப்
வித்யூத் ஜம்வால்


இயக்குனர் : ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்பாளர்: கலைப்புலி தாணு
கதை: ஏ. ஆர். முருகதாஸ்

இசையமைப்பு: ஹாரிஸ் ஜயராஜ்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
ஆக்கச்செலவு:  70 கோடி



பெரிய கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ளது. இங்கு பல விமர்சனங்களின் தொகுப்பை ஒன்றாக பார்ப்போம்


நன்றி: அட்ராசக்க

தமிழ்நாட்டின் வருங்கால சி எம் கனவில் இருக்கும்  கேப்டன் விஜயகாந்த் இதுவரை 34 படங்களிலும், ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் 12 படங்களிலும் அடிச்சு துவைச்சு காயப்போட்ட சாதா கதை தான், ஆனால் ஏ ஆர் முருகதாஸ் அண்ட் டீமின் நல்ல திரைக்கதை இப்படத்தை காப்பாற்றி விடும் .

ஹீரோ ஒரு மிலிட்ரி ஆஃபீசர். லீவில் ஊருக்கு வர்றார். வந்த இடத்துல தீவிரவாதிகள் பாம் வைக்கறாங்க. எதேச்சையான ஒரு நிகழ்வில் ஹீரோ ஸ்லீப்பர் ஸெல்ஸ் என அழைக்கப்படும் தீவிரவாதக்கூட்டத்தில் ஒருவனை பிடிக்கிறார். அவனை வைத்து எப்படி டோட்டல் கேங்கையும் அழிக்கறார் என்பதே மிச்ச மீதித்திரைக்கதை.

தொடர்ந்து 5 தோல்விப்படங்கள் கொடுத்து காவலன் மிதமான வெற்றி , நண்பன் , வேலாயுதம் சராசரி வெற்றி என்று தெம்பில் இருக்கும் விஜய்க்கு கண்டிப்பாக இது ஏறு முகம் தான். நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு உற்சாகமான , வேகமான ,அழகிய விஜயை இதில் பார்க்க முடிகிறது. கடைசியாக சச்சினில் அப்படி பார்த்தது. நடிக்க வாய்ப்பு ரொம்ப கம்மி. ஏன்னா இது ஆக்‌ஷன் படம் , சும்மா வந்து நின்னா போதும், இயக்குநரும் , வசனகர்த்தாவும் மிச்ச வேலையை பார்த்துக்குவாங்க.. ( இருவரும் ஒருவரே)

ஹீரோயின்  காஜில் அகர் வால்.தமிழ் சினிமாவின் தலைவிதிப்படி அரை லூஸ் போல் சிரிச்சுக்கிட்டு , அரை குறையா உடுத்திக்கிட்டு வர்றார். பாடல் காட்சிகளில் பளிச். டைட் பனியன் போட்டுக்கொண்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும்போதெல்லாம் ஆடியன்ஸ் லூஸ் ஆகிடறாங்க.. கொடுத்த 40 லட்சத்துக்கு இது போதும்னு நினைச்சிருப்பார் போல

ஜெயராம், சத்யன் சும்மா டைம் பாஸ்க்கு , காமெடிக்கு. நல்லா யூஸ் பண்ணி இருக்கார் இயக்குநர்.வில்லன் பெருசா ஒண்ணும் பண்ணலை. ஏன்னா வில்லனை ரொம்ப புத்திசாலியா காட்டிட்டா ஹீரோ பேர் வாங்க முடியாதே? ( ஆனா வில்லனை பயங்கர டேலண்ட்டா காட்டி ஹீரோ அவனை வெல்லும்போதுதான் ஹீரோ கிராஃப் டகார்னு எகிறும்..


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  மும்பையின் 12 வெவ்வேறு இடங்களில் பாம் வைக்க பிளான் போடும்  தீவிரவாதிகள் 12 பேரை மிலிட்ரி ஆட்கள் 12 பேரை வைத்து ஒரே டைமில் போட்டுத்தள்ளும் பர பரப்பான சீன்

2. வில்லன் கடத்தும் 5 பெண்களில் தன் தங்கயை தூண்டில் புழுவாய் ஹீரோ யூஸ் பண்ணி வீட்டு நாயை மோப்பம் பண்ண வைத்து இருப்பிடம் அறியும் புத்திசாலித்தனம்

3. க்ளைமாக்ஸில் வில்லனை அழிக்க  ஹீரோ தற்கொலைப்படை  ஐடியா போடுவது அதற்கான திட்டங்கள் , சிஸ்டமேடிக்காக செய்வது

4. ஓப்பனிங்க் ஷாங்க்ல ஆடை அலங்காரங்கள் , பூக்களின் அணி வகுப்பு அழகு

5. பெண் பார்த்து போன பின் ஹீரோயினின் முரண்பாடான குணாதிசயங்களை காமெடியாக காட்டிய விதம்

6. ஹீரோ ம் மேப்பில் 12 இடங்களை வரைந்து அதை இந்திய மேப்பில் வைத்து மேட்ச் பண்ணும் இடம்

7. ஹோட்டலில் விஜய் - ஜெயராம் - காஜில் காமெடி காட்சி. ஜெயராம் பார்க்காத தருணத்தில்  விஜய்க்கு  காஜில்  கிஸ் தருவதும் அதை லேடி பார்த்து திகைப்பதும்

8. ஹீரோவும் அவர் ஆட்கள் 12 பேரும் 12 பேரை ஒரே டைமில் ஷூட் பண்ணும் காட்சி..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. மிலிட்ரிமேன் அப்டின்னா மழு மழு டெயிலி ஷேவிங்க்  உடன் இருக்கனும். இளைய தளபதிக்காக பிரெஞ்ச் தாடிக்கு  அனுமதி கொடுத்துடுவாங்களா?

2. ஹீரோ பெண் பார்க்க வரும்போது ஹீரோயின்  லோ ஹிப் சேலை , ஜெயா டி வி யில் குஷ்பூ போட்டு வரும் ஜாக்கெட்டை விட மோசமான புற முதுகை 98 % காட்டும்  ஜாக்கெட்டை அணிந்து வருகிறாரே? பெண் பார்க்கும் படலத்திலாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு முடிஞ்சவரை மூடி இருக்கக்கூடாதா?

3. முதன் முதலாக பாம் வைப்பவனை எதேச்சையாக விஜய் பிடிக்கும் காட்சி லாஜிக் சறுக்கல்.  யாரோ பிக் பாக்கெட்டை பிடிக்க பஸ்ஸை நிறுத்தி எல்லாரையும் செக் பண்றாங்க. பாம் வைத்த பேக்கை தீவிரவாதி  பஸ்லயே வெச்சுட்டு இறங்கி வர்றான். அவன் பாட்டுக்கு அமைதியா இருந்தா அவனை செக் பண்ணி அவனிடம் பர்ஸ் இல்லை என்றதும் விட்டுடப்போறாங்க. அவன் ஏன் கேனம் மாதிரி ஓடனும்? அதை கடைசி கட்டத்தில் மாட்டின பிறகு பண்ணினா போதுமே? இவனா ஏன் எங்கப்பான் குதிருக்குள் இல்லை என்பது போல் ஓடனும்? ( பாம் வெடிச்சுடும் என சாக்கு சொல்ல முடியாது, அப்படி டைமிங்க் பக்கமா இருந்தா அவன் ஏன் பஸ்ல பயணம் பண்ணனும்? அப்பவே வெச்சுட்டு இறங்கி போய் இருக்கலாமே? )

4. பப்ளிக் ப்ளேஸ்ல பொது மக்கள் முன்னிலையில் 12 பேர் 12 இடங்கள்ல ஷூட் செய்யப்படறாங்க.. ஏன் சைலன்சர் யூஸ் பண்ணாம சுடறாங்க? பில்டப்பா? மக்கள் மத்தியில் யாருக்கும் தெரியாம மேட்டரை முடிச்சு இருக்கலாமே?  தேவையற்ற கலவரம், பீதியை தடுக்க அதுதானே நல்ல வழி?

5. ஸ்லீப்பர் செல்ஸ் ஆசாமிகளைப்பற்றி ஏன் விஜய் சப் இன்ஸ்பெக்டர் சத்யனோட காரிடார்ல நடந்துக்கிட்டே பப்ளிக்கா பேசறார்? தனி ரூம்ல பேச வேண்டிய விஷயம் அல்லவா?

6. தீவிரவாதிங்க  அந்த 5 லேடீசை கடத்துறது ஆள் ஃபோட்டோ அடையாளம் வெச்சுத்தான். ஸ்கூட்டி நெம்பர் பார்த்து அல்ல,. ஹீரோவின் தங்கை ஆள் மாறாட்டம் பண்ணி ஸ்கூட்டில போறப்ப முக ஜாடையை வெரிஃபை  பண்ணாம  சும்மா நெம்பர் பிளேட்டை மட்டும் செக் பண்ணி தீவிரவாதிங்க அவ்ளவ் அசால்ட்டா இருப்பாங்களா?

7. ஒரு சீன்ல ஹீரோவின் தங்கை தீவிரவாதிகள் பிடில இருக்கா. அப்போ ஹீரோ எண்ட்ரி ஆகறார். முறைப்படி வில்லன் கூட்டம் ஹீரோவின் தங்கையை பிணையக்கைதியா வெச்சு எஸ் ஆகி இருக்கலாம்,. அதை விட்டுட்டு லட்டு மாதிரி கிடைச்ச வாய்ப்பை விட்டுட்டு தனித்தனியா ஹீரோ கிட்டே ஏன் சண்டை போடனும். அசைஞ்சா உன் தங்கச்சி க்ளோஸ்னு மிரட்ட வே இல்லை?

8. தீவிரவாதிகளிடம் மேலிடம் அவளை முடிச்சுடுன்னு சொன்ன உடனே டப்னு ஷூட் பண்ணாம ஆற அமர வீடியோ கேமரா எல்லாம் செட் பண்ணி எதுக்கு அவளை கொல்வதை வீடியோ எடுக்க ரெடி ஆகறாங்க? அது என்ன பி எஃப்ஃபா? அல்லது மிரட்ட பயன்படும் ஆயுதமா?

9. ஹீரோ தீவிரவதிகள் கூட ஃபைட் பொடும்போது ஒரு ஆம்பளைக்கு கிஸ் கொடுத்து கொலை பண்றாரு. எந்த ஹாலிவுட்ல இருந்து உருவுன சீனோ.. கேவலமா இருக்கு..

10. மிலிட்ரி ஆள்ங்கன்னா கற்பூரம் மாதிரி இருக்க வேணாமா? ஹீரோ ஃபோன் பண்ணி தன் ஆளுக்கு எச்சரிக்கை விடுக்கறார். ஆபத்து, பாம் இருக்குன்னு . டக்னு எஸ் ஆகாம அந்த ஆள் பேக்கு மாதிரி ஸ்டன் ஆகி நிக்கறான். ஏன்?

11. க்ளைமாக்ஸ்ல ரமணா, குருதிப்புனல் மாதிரி ஹீரோ சாகும் கதை அமைப்பு வெச்சுட்டு எப்பவும் போல் சராசரிப்படமாக மாத்தியது ஏன்?அங்கே ஏ ஆர் முருகதாஸ் காணாம போய் ஹீரோ விஜய் தான் நிக்கறார். ரமணாவுல இருந்த தைரியம் ஏன் இதுல இல்லை?

12. படம் ரிலீஸ் ஆகும் முன் கொடுத்த பேட்டில க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, அப்டினு பில்டப் கொடுத்தாறே. அந்த ட்விஸ்ட் என்ன? சார்? ஒரு வேளை எந்த ட்விஸ்ட்டும் இல்லாம இருந்ததுதான் ட்விஸ்ட்டோ?

13. படம் நீளம் அதிகம். ரெண்டே முக்கால் மணி நேரம். பாடல் காட்சிகள் தேவை இல்லாத திணிப்பு. விஜய்க்காக சேர்த்து இருக்காங்க.. அதிலும் க்ளைமாக்ஸில் ஒரு மெலோடி எதுக்கு? கில்லி க்ளைமாக்ஸ் பாட்டு எவ்ளவ் ஸ்பீடு?

14. ஹீரோ மாட்டிக்கிட்டதும் வில்லன் டக்னு போட்டுத்தள்ளாம இன்னும் எத்தனை படத்துல ஒண்டிக்கு ஒண்டி சண்டை வர்றியா?ன்னு ஹீரோ கேட்பதும், அதுக்கு வில்லன் ஓக்கே சொல்லி அநியாயமா சாவதும்   உஷ் அப்பா, முடியல


 மனம் கவர்ந்த வசனங்கள்

1.   -1000 பேரை அழிக்கும் தீவிரவாதிகளே உயிர்தியாகம் செய்யத்தயாரா இருக்கும்போது நாம ஏண்டா உயிர்தியாகம் செய்யக்கூடாது

2. துப்பாக்கி எதுவா வேணா இருக்கலாம் ,எந்த பிராண்டா வேணா இருக்கலாம், ஆனா அதுல தோட்டா நான்டா

3. நீ யாரு?ன்னு எனக்குத்தெரியாது.ஆனா உன் இருப்பிடம் எதுன்னு கண்டுபிடிச்சுட்டா நீ தொலைஞ்சே.உன்னை கொன்னுடுவேன்.

விஜய் - ஐ ஆம் வெயிட்டிங்

4. காஜில் - ஐ . ஐ ...

விஜய் - ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ்ல இருந்து நேரா வர்றியா?

5. உனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது.எனக்கு சஸ்பென்ஸ் ஓப்பன் பண்ணா பிடிக்காது

6. பொண்ணை பாடச்சொல்லுங்க.

மாப்ளை போட்டிருக்கும மிலிட்ரி டிரஸ்க்கு ஜனகனமன தான் பாட முடியும்

7. ஏதாவது பண்ணி பெரிய ரிஸ்க் ஆகிடுமோன்னு பயந்து எதுவுமே செய்யாம இருந்தா அதுதான் பெரிய ரிஸ்க்

8. அழகா இருக்கறவன் திறமைசாலியா இருக்க மாட்டான் ,திறமைசாலி அழகா இருக்க மாட்டான்.அழகும் ,திறமையும் ஒருத்தன் கிட்டெ இருக்கறது அபூர்வம்

9.  ட்ரெயின் கரெக்டா எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க..


 அதை ட்ரெயின் வந்த பின் தான் சொல்ல முடியுமாம்


10.  டேய், வயசாகிட்டே போகுது. மேரேஜை தள்ளிப்போடாதே
 விளையாடாதே, ஒரு நாள்ல எவ்ளவ் வயசு ஏறிடும்?நாளைக்கு போலாம்..

11. எனக்கு பொண்ணை பிடிக்காம போனதுக்கு 3 காரணம்

1. ஒன்னரை மீட்டர் கூந்தல் இருக்கு. மேரேஜ்க்குப்பின் இவ எப்படி ரெடி ஆவா? ரொம்ப லேட் பண்ணுவா

2.  ரொம்ப கூச்ச சுபாவமா இருக்கா..

3. மாடர்ன் லுக்கே இல்லை.. பழம் பஞ்சாங்கமா இருக்கா..


12. நான் வெளில போறேன், வீட்லயே காலைல இருந்து சாயங்காலம் வரை இருந்தா கெட்டுடுவேனாம்.

13. ஏய், சும்மா பிகு பண்ணாதடி, நமக்கு இந்த வளைவு நெளிவுகள் இருக்கும் வரை தான் மார்க்கெட்..

14. எதுக்கு சண்டைக்கு வர்றே? நான் கண்ணாடிக்குத்தானே கிஸ் பண்ணேன்?

 ஆனா கண்ணாடில இருந்தது நான்

15. நான் ஒரு வ்கைல அவளை பாராட்றேன், நம்ம கிட்டே பேசிக்கிட்டே சாவியை எடுத்துட்டுப்போய்ட்டா பாருங்க..

 ஒரு ஸ்மால் கரெக்‌ஷன், பேசிக்கிட்டே இல்லை.. திட்டிட்டே..

16. நீ பெரிய ஆபத்தை தொட்டுட்டே

 ம் ம் ம்

17. ஏண்டி இப்படி ஒரு கேவலமான ஆம்பளையை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சே?

 பி பிராக்டிகல். மாசம் 2 லட்சம் ரூபா சம்பளம்


18. ஆர் யூ ஸ்மீக்கிங்க்?

 வாட்?

 தமும்மா தம்

 ம்ஹூம்

 சாரி, ஐ லைக் ஸ்மோக்கிங்க் கேர்ள்ஸ் ஒன்லி..

 ட்ரிங்க்ஸ் அடிப்பியா? சரக்கு

 ம் ம் லைட்டா, சில டைம் வோட்கா கூட ட்ரை பண்ணி இருக்கேன்


சாரி. எனக்கு தண்ணி அடிக்கும் பெண்களைக்கண்டாலே பிடிக்காது


19. நம்ம லவ்வை பிரேக் பண்ணிடலாம்

 வாட்? இன்னும் ஒன் அவர் கூட ஆகலை.. அதுக்குள்ளேயா?


20. உன் கப்போர்டுல ஒண்ணுல வில்லன், இன்னொண்ணுல ஜோடி.. 2 பேரையும் ஒளிச்சு வெச்சிருக்கே? கப் போர்டுல துணியே வைக்க மாட்டியா?

21. எல்லா ஃபீல்டுலயும்  சின்சியரா ஒர்க் பண்ணீனா  பிரமோஷன் கிடைக்கும், ஆனா போலீஸ் , மிலிட்ரில மட்டும்  பெரிய காயம் பட்டா ரிட்டயர்மெண்ட் தான்

22. அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு பயம் ம் ம்

23. உனக்கு எதும் புரியல இல்லை? சஸ்பென்சோடயே சாவு

24. அவளுக்கு உன்னை பிடிக்கலை ஹா ஹா

 இதுல சிரிக்க என்ன இருக்கு?

 ஒரு மேட்டருக்கே உன்னை பிடிக்கலைன்னா இனிமே யாருக்கு உன்னை பிடிக்கும்?

25. காஜில் - டேட்டிங்க் முதன் முதலா வந்தா கேட்டதை குடுக்கனும், நீ பாட்டுக்கு கிஸ் கேட்டுட்டேன்னா நான் என்ன பண்றது? குடுத்துத்தானே ஆகனும்?

26. எனக்கு எப்படி கிஸ் பண்ணனும்னு தெரியாதே?

 நீ கண்ணை மூடு, நான் பார்த்துக்கறேன்

 ம்ஹூம், நான் கண்ணை மூடினா போன தடவை மாதிரி நீ ஓடிடுவே

27. நாம கெஸ் பண்றது நடக்கலைன்னா நாம் இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும், எதிரி வேற ஏதோ பிளான் பண்றான்னு அர்த்தம்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

 டைம்ஸ் ஆஃப் இண்டியா  ரேங்க் - 6 /10

 போக்கிரிக்கு கீழே , நண்பனுக்கு, வேலாயுதத்துக்கு  மேலே - சாதா கதை, நல்ல திரைக்கதை - ஓக்கே.விஜய் ரசிகர்கள் , பெண்கள் என எல்லாத்தரப்பும் ஃபேமிலியுடன் பார்க்கும்படி தான் படம் இருக்கு


நன்றி: மதிசுதா

முருகதாசின் இயக்கத்தில் கஜால், ஜெயராம் மற்றும் சத்தியன் கூட்டணியில் கலக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹரிஸ்ஜெயராஜ் இசையமைக்க தாணு தயாரித்திருக்கிறார்.
ஒரு மாஸ் ஹீரோவை வைத்துப் படம் எடுப்பது எவ்வளவு சவாலானது என்பதை சாதித்துக் காட்டியிருக்கும் முருகதாசை புகழாமல் இவ்விடத்தில் நகர முடியவில்லை. ஒரு விறு விறுப்புக்கான திரைப்படத்தில் ஆரம்பம் முதலே விறு விறுப்பை புகுத்துவது தான் சாலச்சிறந்தது. ஆனால் விஜய், ரஜனி போன்றோரின் படத்தில் இவை சாத்தியமற்ற ஒன்று காரணம் முதல் அரை மணித்தியாலங்களை ரசிகர்கள் தம் கட்டுப்பட்டுக்குள் வைத்துக் கொள்வதால் பார்வையாளனுக்கு சலிப்பு ஏற்படுத்தி படத்துக்கான முதல் விமர்சனமே எதிர்மறையானதாக அமைய வாய்ப்பிருக்கிறது.
அதைத் தீர்க்கும் வகையில் முதலில் ஒரு சண்டை, அதன் பின் ஒரு பாடல் அடுத்த 10 நிமிடத்துக்குள் கஜால் அகர்வாலின் அறிமுகம் என ரசிகர்கள் அனைவரையும் கத்தி களைக்க வைத்து விட்டு தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.



நடிகர் விஜயின் வழமையான நையாண்டி நகைச்சுவைகள் இருந்தாலும் இம்முறை சற்று முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டே கூறுவதால் படத்தின் சீரியஸ் தன்மையை ஆரம்பத்திலேயே உணர முடிகிறது. உதாரணத்திற்கு முதல் காட்சியிலேயே விஜயிற்கான பெண் பார்க்கும் படலத்துக்கு செல்லும் போது விஜய் கூறுவார். “வந்த ரயட்டுக்கு ஒரு குளியல் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டுப் போகலாமே” அதற்கு தாயார் யதார்த்தமாக இம்முறையும் முடியாது உனக்கு வயசு ஏறிக்கிட்டே போகிறது என்பார். அதற்கிவர் ஒரு நாளைக்குள்ள வயசு ஏறிடாதும்மா என தனது வழமையான பாணியில் முறாய்ப்பாக சொல்லி எம்மை நகைக்க வைத்து விடுகிறார்.
கதைச் சுருக்கத்தில் ராணுவத்தில் இருக்கும் விஜய் மும்பைக்கு விடுமுறையில் வருகிறார். அங்கே பொலிஸில் இருக்கும் சத்தியனுடன் ஊர் சுற்றுவது தான் வேலை. ஒரு முறை இவர்கள் பயணம் செய்த வண்டியில் ஒரு தீவிரவாதி வேறேங்கோ கொண்டு செல்ல முற்பட்ட குண்டு வெடிக்கிறது. ஆனால் அத்தீவிரவாதியை பிடித்து பொலிசில் கொடுக்கிறார். அவன் ஒரு பொலிசாராலேயே தப்பிக்க வைக்கப்பட இவரது வேட்டை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் பொலிசாரைக் கூட தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு செய்யத் தூண்டுகிறது.

கதையில் பெரியளவு வித்தியாசத்தைக் காணமுடியாவிட்டாலும் விஜயின் வழமையான பாணியில் இருந்து பெரிதும் மாறுபட்டதாகவும் அளவுக்கதிகமான ஹீரோயிசம் இல்லாமலும் கில்லியில் பார்த்த விஜயின் இன்னும் ஒரு புதிய தோற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது.
நடனத்துக்காக தினேசும், சிறீதரும் விஜயை நன்றாகப் புழிந்து விட்டார்கள் என்பது அவரது நடன அசைவுகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.
கஜால் அகர்வால் அழகு விருந்து படைத்தாலும் திரில் நிறைத்த கதைப் பகுதிக்குள் நுழைக்கப்படவே இல்லை என்பதால் ஆரம்பத்தில் மட்டும் ஒரு சில காட்சிகளால் மனதுக்குள் பதிந்ததோடு மறைந்து போய் விடுகிறார்.
ஒரு திரில் படத்துக்கு பின்பகுதியில் பாடல்களை நுழைப்பது எவ்வளவு தொய்வை ஏற்படுத்தும் என்பதை முருகதாஸ் உணரத் தவறிவிட்டார்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும் இடத்திலும், தீவிரவாதிகளை அவர்கள் இடத்திலேயே தங்கையை பணயமாக வைத்து அழிக்கும் இடத்திலும் விஜய் ஸ்டைலில் ஒரு கலக்குக் கலக்கி விடுகிறார். துப்பாக்கி சுழற்றலக்காகவே அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும்காட்சியும் அதற்காக விஜயின் கெட்டப்பும் fox, axn ல் ஒளிபரப்பான பிரபல தொடரான 24 hours ஐயும் அதில் நடித்த ஜக் பவர் ஐயும் அப்படியே நினைவுபடுத்திச் செல்கிறது. அதே போல கையில் சிப்ஸ் பதித்துச் செல்லும் இடத்திலும் misson imposible ஐ நினைவூட்டுவது போல உள்ளது.
சந்தோஷ் சிவன் தனது ஒளிப்பதிவை திறம்படச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பஸ் மற்றும் கப்பல் குண்டு வெடித்தால் காட்சிகள் மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் இப்படத்திலும் இரு தங்கைகள் மூலம் தங்கை சென்டிமென்டை கையாண்டிருக்கிறார். அனைவரும் எதிர் பார்த்தது போல படத்தில் அலட்டல் அலப்பாறைகள் நிறைந்த எந்நவொரு பஞ்ச் வசனத்தையும் விஜய் பேசவில்லை.
அதே போல ஹரிசின் இசையும் விஜயின் ஸ்டைலுக்கும் படத்தின் விறுவிறுப்புகம்கும் பெரிதும் ஒத்துப் போவது மிகப் பெரிய பிளசான விடயமாக இருக்கின்றது.
மொத்தத்தில் துப்பாக்கியானது விஜயின் இன்னொரு பரிமானத்தைக் காட்டிய திரைப்படமாகும்.


துப்பாக்கி பலமா வெடிக்குமா??


துப்பாக்கி! இந்த படம் கலை புலி தாணு தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்  நடித்து தீபாவளி அன்று  வெளியாக இருக்கிறது.  நண்பன்  படத்திற்கு பிறகு  ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இதில் காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிச்சுருக்காங்க. படத்துல வில்லனாக வித்யுத் ஜமால் நடிச்சிருக்கார்.

முதன் முறையாக விஜயோட ஏ ஆர் முருகதாஸ் கைகோர்த்து இருப்பதாலும், எப்பவுமே மணிரத்தனம் படத்திற்கு கேமர மேனாக இருக்கிற சந்தோஷ் சிவன் இந்த படத்துல இணைஞ்சு இருப்பதாலும், விஜய்யின் படங்களிலே இந்த படம் அதிக பொருட்செலவில் உருவாகி இருப்பதாலும், விஜய் நேரடி தமிழ் படத்தில்  (அதாவது ரீமேக் இல்லாமல் ) நடிச்சிருபதலும் இந்த படத்தோட பல்ஸ் எகிறி இருக்கிறது. (குறிப்பு : இந்த வருஷம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அனைத்து படங்களும் பியுஸ் போயிடுச்சு. எ.கா பில்லா 2, மாற்றான்.)



இந்த படத்தோட தலைப்பு தான் தலையாய பிரச்சனையாய் இருந்துச்சு, ஆனா இந்த பிரச்சனை முடிச்ச உடனே (எப்போ முடிஞ்சதுனு  கேட்ட அது தனி கட்டுற போடணும்), படத்தோட ப்ரோமஷன் (விளம்பர ) வேலையெல்லாம் சூடுபுடிச்சுது. 



இந்த படத்தோட கதைகளம் மும்பையினும், தீவிரவாத கும்பலோட போராடுற ஒரு ராணுவ வீரன்  பற்றியதுதான்னு,  ட்ரைலர்  பாத்தவங்களுக்கு புரிஞ்சுருக்கும்.  ஆனாலும் வழக்கமான திருடன் போலிஸ் கதையாக இல்லாம  இனியமையான காதலோட  திரைக்கதை சொல்லிருக்கிறாராம் நம்ம இயக்குனர் முருகதாஸ். 


அதுமட்டுமில்லாமல்,  படத்துல காஜல் அகர்வால் ஒரு டிபிக்கல் மும்பை பெண்ணாகவும்,   பிளே கேர்ளாக  (Play Girl) வர்ர மாதிரியும்  காட்சி அமைக்க பட்டிருக்குதாம், விஜய் மற்றும் காஜலோட காதல் காட்சி கண்டிப்பா ரசிக்கும்படி இருக்குமாம். புதுமையாக விஜய் ஹிந்தி கூட பேசி நடிசிருக்கறராம்.  



இந்த படத்தோட பாடல்கள் ஏற்கனவே கேட்ட ராகம் தான் என்றாலும் Google Google பாடலின்  டெம்போ நல்ல இருக்கு. இந்த படலை பாடியவர் உங்கள் விஜய்னு கண்டிப்பா திரையில வரும். ஏன் என்ற கரணம் உங்களுக்கே புரியும்.
சரிந்து இருக்கிற விஜயோட மார்க்கெட்,  இந்த ஆக்ஷன் படம் நிச்சயம் தூக்கி நிறுத்தும் என அவர் நம்பரதுனால படத்துக்கு பண உதவியும் செஞ்சு இருக்கார்.


இதில் முருகதாஸ் ஒரு சீனில் கெஸ்ட் ரோலும் பண்ணி இருக்கிறார்,  படம் நேற்று சென்சாருக்கு அனுப்பட்டது. படத்த பார்த்த  படக்குழுவினர் படத்துக்கு "U" (எல்லோரும் பார்க்கலாம்னு ) சர்டிபிகேட் கொடுத்து இருக்காங்க. 

இப்படி சின்ன சின்ன விஷயங்களையும் தவிர, துப்பாக்கி  படத்துல  முருகதாஸ், சந்தோஷ் சிவன், விஜய், காஜல், வித்யுத், ஹாரிஸ்  என 6 பெரிய புல்லட் லோடு ஆகி வருகிற நவம்பர் 9 ஆம் தேதி வெடிக்க தயார் இருக்குது.



துப்பாக்கி  பலமா வெடிக்குமா இல்ல திபாவளி துப்பகியாக வெடிக்குமானு பொருது இருந்து பார்போம்.







மாற்றான் திரை விமர்சனம் - Maattraan review - maatran review





இராமச்சந்திரன் எனும் ஒரு விஞ்ஞானி, குழந்தைங்களோட வடிவத்த பத்தி ஆராய்ச்சி பண்றார். அவரோட மனைவி மேல அத சோதனையும் செய்றார், ஆனா அந்த முயற்சி தோல்வி அடஞ்சிடுது. அதனால ஒரே இதயத்தோட ஒட்டிபிரக்கறாங்க ரெண்டு சூர்யாவும். (அகிலன் & விமலன்). அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சா ஒருத்தர் இறந்துடுவாங்க, அதனால இராமச்சந்திரனோட மனைவி பிரிக்க மறுத்துடறாங்க. 

அதுக்குள்ளே இராமச்சந்திரனோட திட்டம் நிராகரிக்கப்படுது. அதுக்கப்றம், அவரு கஷ்டப்பட்டு பால் பவுடர் (Energion) தயாரிக்க அது கிளிக் ஆயிடுது. 

அதுக்கப்றம் நடக்கறது தான் மெயின் ஸ்டோரி. அகிலனாவும், விமலனாவும் நடிச்சிருக்காரு சூர்யா, ரெண்டு பேறும் ஒட்டியே இருந்தாலும், ரெண்டு பேருக்கும் வேற வேற டேஸ்ட்டு (இஸ்டக் ஆண் யூ கதை தான் கொஞ்சம்), அவங்க வாழ்க்கையில அஞ்சலி (காஜல் அகர்வால்) வராங்க, ரெண்டு பேருக்குமே காஜல் மேல ஆசை, அனால் காஜல் விமலனத்தான் விரும்பறாங்க.


ஒரு கட்டத்தில் விமலனுக்கு (ஒரு ரஷிய நிருபர் மூலமாக) (Energion) பால் பவுடரில் கலப்படம் இருப்பது தெரிய வருகிறது, அது பிற்காலத்தில் மிகப்பெரிய விளைவை உருவாக்கும்; இந்தியாவின் வருங்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை கண்டு பிடிக்கிறார். அதன் பிறகு இதை பற்றி தெரிந்து கொள்ள முயலும் பொது, நிருபர் கொல்லப்படுகிறார். யார் இதையெல்லாம் செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்று கண்டு பிடிக்க ரஷியா செல்கிறார், அங்கு பிரச்சனை மேலும் பெரிதாகிறது, அதன் பிறகு என்ன நடந்தது என்று சொல்லியிருக்கிறார் ஆனந்த்.

மாற்றான் சூர்யாவுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் எதிர் பார்த்த மாற்றமில்லை ...!

by

P Dineshkumar


சிங்கப்பூரிலிருந்து சில ரசிகர்களிடம் இருந்து வந்த தகவல்கள்:

படம் முதல் பாதி நல்லா இருக்கு, இரண்டாம் பாதி கொஞ்சம் சுமார்.

கே.வி.ஆனந்த் இந்த முறை சொதப்பிட்டார்.

அயன் மாதிரி இல்ல.

வித்தியாசமான முயற்சி! எல்லோருக்கும் பிடிக்குமா என்பதில் சந்தேகம்.

_______________________________________________________________________________

படத்தின் கதை, எடுக்கப்பட்ட விதம், படத்தின் வேகம் போன்றவற்றில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அனைவரின் ஒருமித்த கருத்து: ‘சூர்யா பிரமாதப்படுத்திட்டார்!’
படத்தின் முதல் பாதி முழுக்க ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ள சூர்யா, இடைவேளைக்குப் பிறகுதான் தனித்தனி சூர்யாவாக வருகிறார்.
இரண்டு சூர்யாக்கள், அதுவும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டே சண்டை போடுவதும், காதல் வயப்படுவதும் என தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத பரிமாணத்தை சூர்யா வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.
கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்பது இன்னும் சிலரின் கருத்து.
படம் சராசரிக்கு சற்று மேல் என்று கருத்து சொல்பவர்கள் கூட, சூர்யாவுக்கு 100-க்கு 100 மார்க் போட்டிருப்பது, இந்தப் படம் சூர்யாவுக்காக பாக்ஸ் ஆபீஸில் நின்றுவிடும் என்று கூறலாம்.

_______________________________________________________________________________


ஹீரோவோட அப்பா பெரிய  பேபி மில்க் பிராடக்ட் ஓனர். வெற்றிகரமா தொழில்ல முன்னேறியவர்.அவர் எப்படி மற்ற போட்டி கம்பெனிகளை எல்லாம் சர்வசாதாரணமா அடிச்சு முன்னேறுதுன்னு எல்லாருக்கும் ஒரு குழப்பம்.அப்போ ஒரு ஃபாரீன் லேடி பத்திரிக்கை ரிப்போர்ட்டர் என்ற போர்வையில்  அவர் கம்பெனிக்கு வந்து அவரை பேட்டி எடுக்கற சாக்குல  தொழில் ரகசியம் , அந்த பால் ஃபார்முலா ரகசியம் எல்லாம் தெரிஞ்சுக்கறா. 

இப்போ ஒரு திருப்பம். அந்த ஃபாரீன் லேடி பிரஸ் ரிப்போர்ட்டரும் இல்லை, போட்டி கம்பெனியும் இல்லை. ஃபாரீன் உளவாளி.ஹீரோவோட அப்பா தான் வில்லனே.

ஒலிம்பிக்ல  நடக்கும்  விளையாட்டு போட்டிகளில் யூ எஸ் பல தங்க பதக்கங்கள் வாங்க குறுக்கு வழியா ஊக்கமருந்து கண்டு பிடிக்கறார். சோதனைல யாராலும் கண்டு பிடிக்க முடியாத ஃபார்முலா . அந்த ஃபார்முலா சக்சஸ் ஆகி யு எஸ் அவரை கொண்டாடுது. அந்த ஃபார்முலாவை கொஞ்சம் சேஞ்ச் பண்ணி குழந்தைகளுக்கான பால் பவுடர்ல மிக்ஸ் பண்றாரு. 

 இதன் படி பசுக்கள்  2 மாதத்தில் வாழ்நாள்ல எவ்வளவு பால் கறக்க முடியுமோ அத்தனையும் கறக்கலாம். ஆனா பிற்காலத்துல இது ஆபத்து . ஒரு தலை முறையையே பாதிக்கும். சொந்த அப்பாவா இருந்தாலும் எப்படி பையன் அந்த சதியை முறியடிக்கறான் என்பதே கதை.. 


படத்தோட முதல் ஹீரோ எழுத்தாளர் சுபாதான். படத்தின் கதை வசனம் எல்லாம் அவர் தான். ஆனா டைட்டில்ல வசனத்துக்கு மட்டும் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க.. படத்துல ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கு.. சுவராஸ்யம் கருதி அதெல்லாம் சொல்லலை,.,. படத்தின் முன் பாதி வேகம் பின் பாதில மிஸ்சிங்க்... 

ஹீரோ சூர்யா ட்வின்ஸ்ஸா வரும்போது இரு மாறுபட்ட கேரக்டர்ஸ்க்கான வேறுபாட்டை வழக்கம் போல் நல்லா காட்டி இருந்தாலும் இடைவேளை டைம்ல இருந்துதான் அவர் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகுது..  சண்டைக்காட்சிகளில் பல இடங்களில் சாகசம் காட்டி இருக்கார். ஏழாம் அறிவு பாதிப்பு ஆங்காங்கே இருக்கு அவர் நடிப்பில் . குறிப்பாக சண்டைக்காட்சிகளில்// . ஆனால் ஏழாம் அறிவில் விட்டதை இதுல பிடிச்சுட்டார்னு சொல்லலாம்../ 

ஹீரோயின் கா ஜில்  வாவ் லால் சாரி காஜல் அகர் வால்.. ஒரு டன் கனகாம்பரப்பூக்க்களை ராட்சச மிக்சில அரைச்சு செய்யப்பட்ட மினியேச்சர்  பீட்ரூட் அல்வா அவர் உதடு. வாழை மரத்துக்கு ரோஸ் பவுடர் போட்டு விட்ட மாதிரி அவர் இடுப்பு ஐ மீன் இடை.. அவர் ஸ்லோ மோஷன்ல ஓடி வரும்போது பேக் கிரவுண்ட்ல  துள்ளி எழுந்தது காத்து சின்ன குயில் இசை கேட்டு பாட்டு நானா கற்பனை பண்ணிக்கிட்டேன்.. நடிப்பு சொல்லிக்கற அளவு இல்லைன்னாலும் ஜொள்ளிக்கற அளவு இருக்கு. இது போதாதா? தமிழ் நாட்டின் சி எம் ஆகவே ஆகலாம்..


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஸ்டக் ஆன் யூ ஆங்கிலப்பட காப்பின்னு படத்தோட  ஸ்டில் வெளியானதும் தகவல் பரவியதும் படத்தோட கதையை அவசர அவசரமா மாத்தி  சரியா செட் ஆகற மாதிரி செஞ்சது.

2. சாருலதா படத்தின் சாயல் அந்த ட்வின்ஸ் பிரிப்பு  , ஒருவர் உயிர் துறப்பு மேட்டர்ல இருந்தாலும் அது பெரிய அளவில் பாதிக்காதவாறு திரைக்கதை அமைத்தது.

3. ஒளிப்பதிவு . லொக்கேஷன்கள் கலக்கலாய் அமைச்சது. கோ படத்துல பாடல் காட்சிகள் எப்படி சிலாகிக்கப்பட்டனவோ அதே போல் அந்த ஒற்றைப்பாறை காட்சி , மலை அருவிகள் இயற்கைக்காட்சிகள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது

4. படத்துல ஏகப்பட்ட திருப்பு முனை காட்சிகள். சில யூகிக்க முடிந்தவை , சில எதிர்பாராதவை. ஒரு நாவல் ஆசிரியர் எழுத்தை நம்பினார் கை விடப்படார் என்ற பாசிட்டிவ் எண்ணத்தை நிலை நிறுத்தியது

5. படத்தின் கதை அனுமதித்தும் ஹீரோ டாமினேஷனோ பஞ்ச் டயலாக்சோ இல்லாமல் இது டைரக்டர் படம் என சொல்ல வைத்தது.

6. ஹீரோவுக்கு  ஹீரோயின் எட்டாக்கனி என்பதை யாரும் கண்டு பிடிக்காத முறையில் கேமரா கோணங்களை வைத்தது..

7. பேசிக் இன்ஸ்டிங்க்  ஹீரோயின் ஷெரன் ஸ்டோன்  சாயலில் ஒரு ஃபாரீன் லேடியை சிறப்பாக நடிக்க வைத்தது , கா”ஜில்” அகர்வால் தக்கபடி உபயோகித்தது


 இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. ப்டத்தோட ஓப்பனிங்க் சீன்லயே  ஹீரோ ஸ்லிப் ஆகி  கீழே விழுவது போல் அமங்கலமான  சீன் எதுக்கு? சூர்யா ர்சிகர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா? 

2. சூர்யாவோட அப்பா தற்கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியில் பாத்ரூம் கதவை தாழ் போடாமல் இருப்பது ஏன்? தற்கொலை செய்பவர்கள் முதலில் செய்யும் காரியமே கதவை உள் பக்கம் தாழ் போடுவதுதானே? 

3. உண்ணாவிரதம் இருக்கும் தொழிலாளிகள் பாத்ரூமில் ஒளிச்சு வெச்சு சாப்பிடும் காட்சி உவ்வே + பல படங்களில் வந்தவை 

4. காஜில் அகர்வாலுக்கு அந்த  சோடா புட்டி கண்ணாடி பார்ட்டி செந்தமிழில் காதல் கடிதம் தருவது அந்நியன் அக்மர்க் ஸ்டைல். இதை சமாளிக்க ஹீரோயினே என்ன அந்நியன் ஸ்டைலா? என்ற வசனம் வேறு 

5. ஃபாரீன் லேடி  மில்க் கம்பெனிக்கு வந்து சர்வ சாதாரணமா டாக்குமெண்ட்சை ஃபோட்டோ எடுப்பது எப்படி? மேஜை டிராயர்க்கு லாக் எல்லாம் கிடையாதா? கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள ஃபார்முலாவை இப்படித்தான் அலட்சியமாய் தொறந்து போட்டுட்டு போவாங்களா? அது என்ன நமீதா ஜாக்கெட்டா? 

6. சூர்யாவோட அப்பா அந்த ஃபாரீன் லேடியை உளவாளின்னு கண்டு பிடிச்சதும் குஜராத் போகும்போது ஏன் தன் பசங்க கிட்டே அவ பற்றி எச்சரிக்கை  பண்ணலை? நான் இல்லாத சமயம் இவ வந்தா சேர்க்காதீங்க.. அப்டினு ஃபோட்டோ காட்டி இருக்கலாமே? 


7. ஃபார்முல்கா சீக்ரெட் தந்த பின் மொத்தமா பணம் தராம அந்த ஃபாரீன் லேடி ஏன் தவ்ணை முறைல பணம் தர்றா? கையில காசு வாயில தோசை ஃபார்முலாவை ஃபாலோ பண்ணலை , ஏன்? 

8. படத்தோட ஹீரோ சூர்யா என்ன ஷகீலாவா? அவர் குளிக்கறதை ஏன் விலா வாரியா காட்டனும்? ட்வின்ஸ் எவ்வளவு சிரமப்படறாங்க என்பதை காட்டத்தான் குழந்தையா இருந்தப்ப , சிறுவனா இருந்தப்போ காட்சிகள் வெச்சாச்சே? ஒரு வேளை கமல் மாதிரி பாடியை காட்டியே தான் ஆவேன்னு அடம் பிடிச்சாரா?

9. ஃபாரீன் லேடி தன் ஹேண்ட் பேக்ல முக்கியமான ஆதார ஃபோட்டோக்களை அசால்ட்டா டேபிள்ல வெச்சுட்டு ஏதோ ஃபோன் வந்ததுன்னு அதை அப்படியே சூர்யா முன்னாடி வெச்சுட்டு அந்த பக்கம் போவது ஏன்? நானா இருந்தா அந்த பேக்கையும் கையில எடுத்துட்டு போய் இருப்பேன் 

10. தன் சொந்தக்குழந்தையை கொலை பண்ண முடிவு எடுக்கும் சொந்த அப்பா அதுக்கு ரொம்ப ஈசியான வழி 2 பேரும் தூங்கும்போது கொல்வதே. அதை விட்டுட்டு ட்வின்ஸ்ல ஒரு ஆள் விழிச்சிருக்கும்போது எந்த லூஸ் அப்பாவாவது  இன்னொரு குழந்தையை கொலை பண்ண ட்ரை பண்ணுவாரா? அந்த குழந்தை அம்மா கிட்டே சொல்லிடும்னு தெரியாதா? 

11. திருப்பத்துக்கு மேல் திருப்பம்  வேணும்கறதுக்காக க்ளைமாக்ஸ்ல சூர்யாவின் ”ராவணன்” ரகசியம் தேவையா? 

12. படத்துக்கு முக்கியமான காட்சியான ஃபாரீன் லேடி பென் ட்ரைவரை விழுங்குவது நம்ப்ற மாதிரியே இல்லையே? அதெப்பிடி தண்ணீர் இல்லாம ஒரு பென் டிரைவரை விழுங்க முடியும்? 

13. வில்லன் ஃபோன் நெம்பரை சூர்யா கண்டு பிடிச்சதும், மேனெஜர் கிட்டே  அந்த நெம்பரை சொல்லி ஃபோன் போடுங்க அப்டினு சொல்லும்போது வில்லன் டக்னு செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி இருக்கலாமே? ஏன் பேக்கு மாதிரி மாட்டிக்கறான்? டக்னு பேட்டரியை கழட்னாக்கூட போதுமே? 

14. மெடல் லேடி கிட்டே சூர்யா  ஹோட்டல்ல ஹால்ல எல்லாரும் பார்க்கும்போது லேப்டாப்பை ஓப்பன் பண்ணி அந்த ரகசியத்தை பற்றி டிஸ்கஸ் பண்றாரு. ஏன்? வில்லன் பார்க்கட்டும்னா? தனி ரூமுக்கு கூட்டிட்டு போய் செய்ய வேண்டியதுதானே? 

15.   காஜல் அகர்வால் லவ் பண்ணுன ஹீரோ சூர்யா ஆள் அவுட். அவரோட இதயத்தை பொருத்திய இன்னொரு சூர்யா தான் இப்போ உயிரோட . அதாவது நீ வருவாய் என படத்துல அஜித் கண்கள் ஆர் பார்த்திபன் கிட்டே பொருத்தப்பட்டதும் தேவயானிக்கு ஒரு குழப்பம் வருமே அந்த மாதிரி காஜல்க்கு நோ குழப்பம். எவனா இருந்தா எனக்கென்ன? சம்பளம் குடுத்தா சரி அப்டிங்கற மாதிரி லவ்வறது சரியா? கொஞ்சமாச்சும் தடுமாற்றம் , யோசனை வராதா? 

-----courtesy: அட்ராசக்கை


படம் பார்த்தவர்களிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் விமர்சனத்தை கொடுத்த தினேஷ்குமார் அவர்களுக்கும், அட்ராசக்கை தளத்திற்க்கும் நன்றி!

தாண்டவம் – விமர்சனம்



தயாரிப்பு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய் கபூர்
எழுத்து, இயக்கம் – விஜய்
இசை – ஜி.வி. பிரகாஷ்குமார்
பாடல்கள் – நா. முத்துக்குமார்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
படத்தொகுப்பு – ஆண்டனி
வெளியான தேதி – 28 – 09 – 2012
நடிப்பு – விக்ரம், ஜெகபதி பாபு, அனுஷ்கா, எமி ஜாக்சன், நாசர், சந்தானம் , சரண்யா மற்றும் பலர்.
படத்தின் கதை சம்பந்தமான பிரச்சனையில் பல தாண்டவங்கள் நடந்து , நீதிமன்றம் வரை சென்று, தடைகளைத் தாண்டி, இயக்குனர் சங்கத்தை தடம் புரள வைத்து வந்துள்ள படம். இந்த கதைக்கா இத்தனை ஆர்பாட்டம் என படம் பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக யோசிப்பார்கள்.
2000ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘சபாஷ்’. பார்த்திபன், ரஞ்சித், திவ்யா உண்ணி, தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘சபாஷ்’ படத்தின் கதையை கொஞ்சம் பார்ப்போம்.
பார்த்திபன், ரஞ்சித் இருவரும் நண்பர்கள், பார்த்திபன் ஒரு விபத்தில் கண் பார்வை இழந்தவர். அவருடைய மனைவியான திவ்யா உண்ணி, மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். ஆனால், இதை கொலை என நம்புகிறார் பார்த்திபன், அதுவும் தன் நண்பன் ரஞ்சித் செய்திருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார். அதன் பின், பார்த்திபன் கொலையாளியை எப்படி  கண்டு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
சரி, தாண்டவம் படத்தின கதைக்கு வருவோம். விக்ரம், ஜெகபதி பாபு இருவரும் நண்பர்கள். விக்ரமின் மனைவி அனுஷ்கா. லண்டனில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பில் இறந்து போகிறார். அந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருப்பவர் விக்ரமின் நண்பரான ஜெகபதிபாபு. மனைவி மரணமடைய காரணமானவர்களை விக்ரம் எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
தயவு செய்து மேற்சொன்ன சபாஷ், தாண்டவம் படத்தின் கதைகளுக்கு தொடர்பு இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
இந்திய உளவுத்துறையின் மிகப் பெரிய அதிகாரிகளில் ஒருவராக விக்ரம். அவரும் மற்றொரு அதிகாரியுமான ஜெகபதிபாபும் நாட்டின் பாதுகாப்புக்கு பாதுகாவலர்களாக விளங்குபவர்கள். ஆனால் நண்பன் ஜெகபதிபாபுவுக்கு  தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது மிகப் பெரிய அதிகாரியான விக்ரமிற்கு தெரியவேயில்லை. தமிழ் சினிமா வழக்கப்படி கிளைமாக்சில்தான் கண்டு பிடிக்கிறார்.
விக்ரம், இந்த படத்திற்காகவும் நிறைய உழைத்திருக்கிறார் என்று சொல்வது வழக்கமான ஒன்று. அவருடைய கதாபாத்திரம் எதுவானாலும் அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். இந்த படத்திலும் அப்படியே.
ஸாரி, மிஸ்டர் ஜெகபதி பாபு. உங்க அப்பாவியான முகத்தைப் பார்த்தால் நாட்டுக்காக துரோகம் செய்கிறவர் மாதிரி தெரியலை. அடுத்த தமிழ்ப் படத்துல நல்ல கதாபாத்திரத்துல நடிச்சீங்கன்னா நல்லா இருக்கும்.
அழகாக, அம்சமாக இருக்கிறார் அனுஷ்கா. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு அனுஷ்காவின் அழகு மேல் அவ்வளவு காதல் போல. ஒவ்வொரு காட்சியிலும் அனுஷ்காவை மேலும் அழகாக காட்டியிருக்கிறார். இப்படி ஒரு அழகான மனைவியாக அமைவபரை விக்ரம் கடைசி வரை தொடமலிருப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
எமி ஜாக்சன் கேரக்டர் எதற்கென்றே தெரியவில்லை. இந்த கதாபாத்திரத்தால் படத்தில் எந்த பயனுமில்லை. லட்சுமி ராயும் படத்தில் இருக்கிறார்.
லண்டன் போலீஸ் அதிகாரியாக நாசர். இலங்கைத் தமிழ் பேசி மட்டுமே கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
சந்தானம் ஓரிரு காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். கொலைகள் நடக்கும் போதெல்லாம் சந்தானம் அங்கு வந்து மாட்டிக் கொள்வது, நாம் தமிழ் சினிமாதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.
பிளாஷ்பேக்கில் வரும் கிராமத்து காட்சிகள் இனிமை. சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், சுஜிதா, தம்பி ராமையா, அனுஷ்காவின் தங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் சுவாரசியமாக அமைந்துள்ளன.
ஜி.வி. பிரகாஷ்குமாரின் 25வது படம். ஒரு பாதி கதவு…., அனிச்சம் பூவழகி…, உயிரின் உயிரே….., ரசிக்க வைத்துள்ளன. மெலோடி பாடல்களில் அசத்துகிறார் ஜி.வி.
2 மணி நேரம் 47 நிமிடம் ஓடும் படத்தில் ஆண்டனி கத்திரியை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
தாண்டவம் – வெற்றிக் கோட்டை தாண்டாது.
- screen4screen

யுவன் சங்கர் ராஜாவின் 100வது படம்



யுவன் சங்கர் ராஜா தனது இசைப் பயணத்தை 1996ஆம் ஆண்டு ஆரம்பித்தார், அவரது முதல் படமாக சரத்குமார் நடித்த அரவிந்தன் அமைந்தது, முதல் படத்திலேயே நல்ல மெலடி மற்றும் துள்ளும் இசையை வழங்கினார். 15 வருடங்கள் கடந்தும் தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ளார். சில ஒடாத மொக்கை படங்கள் கூட யுவனின் பாடல்களுக்காக எல்லோரின் மனதிலும் ஞாபகம் உள்ளது.

தற்போது அவர் தனது 100வது படத்தை இசை அமைக்கவிருக்கிறார், அதுவும் அவரது சகோதரரின் இயக்கத்தில், ஆம் வெங்கட்பிரபு கார்த்தி இணையும் பிரியாணி தான் யுவனின் 100 வது படம். சென்னை 600028 முதல் மங்காத்தா வரை யுவனின் இசை வெங்கட்பிரபுவிற்கு ஒரு பெரிய பலமாகவே இருந்து வந்துள்ளது, தற்போது 100 வது படமாக வேறு இது அமைவதால் யுவனின் கவனமும் பாடல்களும் மிகச் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெங்கட்பிரபு "எனது தம்பியை பெருமையாகவும், அவரது 100வது படத்தை நான் இயக்குவதில் மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

வாழ்துக்கள் யுவன்!

லிங்குசாமியின் அடுத்த இயக்கத்தில் சூர்யா


லிங்குசாமி தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார், இன்னும் பெயர் முடிவாகாத அந்த படத்தில் சூர்யா நடிப்பார் எனத் தெரிகிறது. இப்படத்தை லிங்குசாமியே தனது சொந்த தயாரிப்பான திருப்பதி பிரதர்ஸ் மூலமாக எடுக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவிருக்கிறார்.

படத்தின் கதாநாயகியாக சமந்தா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சூர்யா தற்போது 4 படங்களில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. இன்னும் திரைக்கதை முடிவாகாத நிலையில் லிங்குசாமி அதனை முடித்துவிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிகிறது.

நூறு முத்தங்களுடன் ஒரு பாடல்



தமிழ் சினிமாவில் புதிது புதிதாக சிந்தித்து பாடல்களும் எடுக்கின்றனர், அதன் உச்சகட்டத்தில் கிடைத்த யோசனையில் சீனுராமசாமி தான் இயக்கும் நீர்பறவை எனும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் 100 முத்தங்களை காட்சியைமக்க போகிறார்.

ரெட்  ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில், விஷ்னு மற்றும் சுனைனா நடிக்கின்றனர். கதைப்படி பிரிந்து இருக்கும் காதலர்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கின்றனர். அப்பொழுது இடம்பெறும் பாடல் காட்சியில் இரண்டு பேறும் முத்தமிட்டுக்கொள்வது போல பாடல் படமாக்கப்படுகிறது, அந்த ஐந்து நிமிடத்திற்குள் 100 முத்தங்கள் ஒருவருக்கொருவர் கொடுப்பார்கள், அது அருவருப்பாக இருக்காது என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!!

பில்லா 2 விமர்சனங்கள்




மங்காத்தா என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த அஜித்தின் அடுத்த படம் , 2007 இல் வெளியாகி சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வரும் படம் . உன்னைப்போல் ஒருவன் என்ற வெற்றித் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த சக்ரி டலோடியின் இரண்டாவது படம் . இவ்வாறு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டு வெளிவந்திருக்கும் பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா??? நிச்சயமாக ஆம் என்று கூறலாம் 
படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் "தம்" அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்...உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா...என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது...!
சக்கரவர்த்தி டொலட்டி"க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்
படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக "மதுரை பொண்ணு..." பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி...சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க...!(கலக்கலோ கலக்கல் தான்..இந்த பாட்டில எந்த பொண்ண பார்த்தாலும் சூப்பர் ஆக இருக்கு...மச்சீ என்று என் நண்பன் ஷான் சொல்ல கேட்டேன்..!)
படத்தி ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்...!
படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த.....தலதான் என்று...!
படத்தின் எடிட்டர்க்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு...தனது கடமையை முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது இருக்கின்றார்..!
படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டுவது போல இல்லாமல்..அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அடிக்கடி இயக்குநர் அனுப்பி விடுகின்றார்..அவ்வளோ பிரமாதமான திரைக்கதை...படத்தில் பெரிய திருப்பம் "பில்லா தான்தான் இனி எல்லா ஆயுத பிஸ்னஸ் எல்லாவற்றையும் செய்வதாக சொல்லும்" கணத்தில் இருந்து படம் சூடு பிடிக்க தொடங்குகின்றது...இறுதிவரை தனது தனித்துவத்திற்க்காக போராடும் ஒரு தலைவனாக பில்லாவை காட்டி இருப்பது "சக்கரவர்த்தி டொலட்டி"க்கு ஒரு பெரிய வெற்றி...!
பில்லா-II முடியும் இடத்தில் இருந்து பில்லா-2007 தொங்குகின்றது என்பது படத்தின் சளைக்காத கதையின் வடிவமைப்பிற்க்கு கிடைத்த மாபெரும் கரவோசம்..!பில்லா-III இனை குறி வைத்து "சக்கரவர்த்தி டொலட்டி" கதையை நகர்த்தி இருபது தெளிவாக தெரின்கிறது..அந்த படமும் தயாராகும் போலதான் இருக்கு போற போக்கை பார்த்தால்...!
இறுதியில் படம் யுவனின் இனிய குரலுடன் தொடங்கும் "gang gang ganster..." பாடலுடன் முடிவுக்கு வருகின்றது..இறுதியாக எழுத்து ஓட்டத்துடன் அஜித்தின் சாகாசங்கள் காடப்படுகின்றது...!
வழக்கமையான படங்களை போல் அல்லாது வித்தியாசமான ஒரு புதிய முயற்சி ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் இருந்த படம்...இப்போது வழமைக்கு மாறாக சாதனைகளின் குமியலாக வலம்வந்துகொண்டிருக்கின்றது...!
பில்லா பாகம் இரண்டு இனி தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொடக்கம்...நேரம் போறதே தெரியாமல் இருக்கின்றது படத்தின் முக்கிய ஒரு பிளஸ் பாயிண்ட்..
பில்லா 2 - அஜித்தின் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல்

நன்றி : தமிழ் 10


As expected the story about on How the Refugee turning out as a Don. The first few minutes of the movie touching the srilkan refugee issue which is really gonna create a impact among tamilians and gonna create a new market for Ajit in NRI Area
Its really gonna be a electrifying for fans whenever Ajith appearing in a screen. As usual Ajith carried himself superbly throughout the film. Especially the stunt sequences are rocking.
This film really gonna take Ajith to next level in his career. Once again this movie expected to break all the collections of Kollywood.
Like Mangatha for VP, For Chakri this gonna create a good place in Tamil Cinema
Technically the film is outstanding.
Finally this film is not only a treat for Ajith fans but also for Tamil Cinema Lovers. For the persons whoever booked the tickets in advance,it wont disappoint you for sure.


நன்றி : துபாயில்ருந்து டைம்ஸ் ஏ பி

!படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் "தம்" அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்...அதுக்கும் எழுத்து ஓட்டத்துடனேயே...


உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா...என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது...!



சாரம் கட்டி இருக்கு அஜித்(டேவிட்) எப்டி "கோட் சூட்" போட்டார் என்பதை தத்துரூபமாக எடுத்து காட்டி உள்ளார்.(சுருக்கமாக சொல்லப்போனால் கதையின் மையம் இங்கு இருந்துதான் துடன்குகின்றது)
"சக்கரவர்த்தி டொலட்டி"க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்...

படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக "மதுரை பொண்ணு..." பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி...

 ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..

எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்...!

படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!

"உனக்குள்ளே மிருகம் என்னும் பாடல்.." அஜித்தின் வரலாற்றில் இன்னும் ஒரு திருப்பு முனையான பாடல்...முழுக்க முழுக்க ஸ்டில்களை மட்டும் வைத்து மிகவும் தத்துரூபமாக எடுக்கப்பட்ட பாடல்...அஜித் அந்த பாடலில் ஒரு வித்தியாசமாக தெரிகின்றார்...!பாடல் புதியது அதன் வரிகள் மிகவும் கூர்மையானது..

பதினொரு வருடங்களுக்கு பின்பு அஜித் இரண்டு படங்கள் அடுத்து அடுத்து வென்று இருக்கின்றார்...பில்லா பாகம் இரண்டு ஒரு தமிழ் சினிமாவின் இன்னொரு அத்தியாயம் சொல்லப்போனால் இன்னொரு ஆரம்பம் என்றும் சொல்லலாம்...பில்லா பில்லாதான் அஜித் அஜித்தான்...இந்த படம் பதினாறு வயது தொடக்கம் நாற்பது வயது வரைக்கும் இருப்பவர்கள் பார்ப்பதற்க்கு உகந்தது...ரத்தமும் சதையும் கலந்த ஒரு படம்...பில்லா..டேவிட்...பில்லா... கதை சொல்லும் கதையின் கதாநாயகன்.தனி ஒருவராக நின்று படத்தினை தூக்கி நிறுத்தி இருக்கின்றார்...!


நன்றி : யாழ்பாடி

மாற்றான் ட்ரைலர் புத்தம் புதுசு!!

மாற்றான் ட்ரைலர் புத்தம் புதுசு!!




ஷ்ருதிஹாசனை பிடித்த பிரபுதேவா


பிரபுதேவா நயன்தாரா பிரிவிற்கு  பிறகு ஒருவரை ஒருவர் பற்றி மாற்று கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருந்தனர். அதன் பிறகு பிரபுதேவா தொடர்ந்து பாலிவுட் பக்கமே தனது கவனத்தை செலுத்தி வந்தார். அவர் கடைசியாக இயக்கிய சிறுத்தை படத்தின் ரீமேக்கான ரௌடி ரத்தோர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.


ஹிந்தி பட வாய்புகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் பிரபு தேவா தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார், நீண்ட நாட்களாக கதாநாயகியை தேடிக்கொண்டிருந்தவர் தற்போது ஷ்ருதிஹாசனை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஷ்ருதிஹாசன் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார், இந்த படம் காதல் நிறைந்த கமர்சியல் படமாக இருக்கும் என பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

கட்டிப்பிடித்து முத்தமிட்ட த்ரிஷாவும் நயன்தாராவும்



த்ரிஷாவிற்கும் நயன்தாராவிற்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நடந்து வந்ததாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. தற்போது அதை பொய்யாக்கியுள்ளனர் இருவரும். நயன்தாரா பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சிகாக சென்னை வசம் வந்து போனார். அவர் சிறந்த நடிகைக்கான தெலுங்கு விருதினை பெற்றார். பிலிம்பேர் விருது விழா முடிந்த பிறகு, கடந்த வாரம் சென்னையில் நடந்த பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற நயனும் த்ரிஷாவும் ஒருவரைஒருவர் கட்டியணைத்து பல நாட்கள் பழகியது போல் நட்பு பாராட்டியுள்ளனர்.


அவர்கள் இருவரும் கட்டியணைத்து முத்தங்களும் பரிமாரிக்கொண்டுள்ளனர் இது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. குருவி பட வாய்ப்பினை திரிஷா நயனிடமிருந்து தட்டிப் பறித்ததாக ஒரு செய்தி வெளியானதிலிருந்து இருவருக்கும் பனிப்போர் என்ற செய்திகள் வந்துகொண்டிருந்தது, தற்போது அதை இருவரும் பொய்யாக்கியுள்ளனர். 'நடிகைகள்' ஆயிற்றே எந்த சூழலையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

2012 ஒலிம்பிக்கில் தமிழ் பாடல்கள் பாடும் தமிழ் இசைகுழு


சென்னையை சேர்ந்த இசைகுழு ஒன்று 2012ஆம் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது, ஆம் 'ஸ்டக்காடோ' (Staccato) எனும் பெயர் கொண்ட அந்த இசைகுழு ஆசியாவின் சார்பாக பங்கேற்கிறது. ஆசியாவிலிருந்து 10,000திற்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு மத்தியில் 2 குழுக்கள் மட்டுமே தேர்வாகியுள்ளது, ஒன்று சீனாவிலிருந்து மற்றொன்று நம் சென்னையிலிருந்து.


லண்டனில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விழாவில், ஜுலை 30 மற்றும் ஆகஸ்டு 2 ஆம் தேதிகளில் இவர்கள் பாட உள்ளனர். தற்போதுள்ள கர்நாடக சங்கீதப் பாடல்களில் நன்கு பெயர் பெற்ற இவர்கள் தற்போது லண்டன் செல்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இந்தியாவை பிரதிபலிக்க இவர்கள் மட்டுமே உள்ளனர், அதில் தமிழ் பாடல்களும் இடம் பெறப்போவது தனிச் சிறப்பு.அங்கு பலவிதமான பாடல்களை அவர்கள் வழங்க உள்ளனர்.
அதிலும் இவர்கள் சென்னை (டப்பாங்குத்து) பாடலையும் பாடி மகிழ்விக்க இருக்கின்றனர், இதனால் தமிழ் பாடல்களும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கப்போவது உறுதி. என்னதான் மற்ற ரகப் பாடல்களை பாடினாலும், இந்த பாடல் வெளிநாட்டவர்க்கு புது விருந்தாக அமையும்.

அவர்கள் ஒலிம்பிக்கில்  தேர்வாவது அவர்களுக்கே தெரியாமல் நடந்திருக்கிறது, அவர்களது குழுவில் உள்ள ரஃபிக் என்பவர் ஒலிம்பிக் தேர்விற்கு  அவர்கள் இசையமைத்த பாடல் ஒன்றை அனுப்பி  வைத்துள்ளார். இது தெரியாமல் இருந்த அந்த குழு தேர்வான மின்னஞ்சல் கிடைத்தபொழுது அதை பொய் என்று நினைத்துள்ளனர். பின்புதான் அவர்களுக்கு விஷயமே தெரியவந்துள்ளது.


ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் இயக்குனரான டேனி போயல் தான் ஒலிம்பிக்கின் தேர்வுக்குழுவில் இருந்து இந்த இசைகுழுவை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து லண்டன் செல்லும் ஸ்டக்காடோவிற்கு வாழ்த்துக்கள், நீங்களும் வாழ்துக்களையும் விருப்பங்களையும் தெரிவிக்க அவர்களது பேஸ்புக் மற்றும் இணையதள முகவரியை கீழே சொடுக்கவும்.

https://www.facebook.com/Staccato1708

http://www.reverbnation.com/staccato

விஸ்வரூபம் ‍‍‍‍ட்ரைலர் மற்றும் உருவானவிதம்

விஸ்வரூபம் ‍‍‍‍ட்ரைலர் 





உருவானவிதம்



பாலின்பக் கல்வி (Sex Education) தேவையா? தேவையற்றதா?


இன்று நம் சமுதாயம் செக்ஸ் எனும் மயக்க உலகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது, பல செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. கணவன்/மனைவி கள்ளத்தொடர்பு, பெற்ற பிள்ளைகளுடன் தகாத உறவு, ஆசிரியர் மாணவ முறைகேடு எனக் கூறிக் கொண்டே போகலாம். 15 வருடங்களுக்கு முன்பு கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட விசயங்கள் இப்போது அடிக்கடி நடக்கும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் முறையற்ற பாலின்பக் கல்வி இல்லாததே. இப்போது உள்ள பெற்றோரிடம் பாலின்பக் கல்வி வேண்டும் என்றால் கண்டிப்பாக அதை எதிர்ப்போரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். ஏன்? என்றால் சிறு வயதிலேயே செக்ஸ் பற்றி சொல்லிக் கொடுத்தால் கெட்டுப்போய் விடுவார்கள் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கும்.


SEX என்ற ஆங்கிலச் சொல்லை 'ஒரே அர்த்தத்துடன்' பார்க்கின்றனர் நிறைய பேர், அதுதான் SEX EDUCATION என்ற விசயத்தையும் தடுக்கிறது. SEX என்ற ஆங்கிலச் சொல்பல அர்த்தங்களை கொண்டுள்ளது. பாவம் உலகை ஆளும் ஆங்கிலத்திற்கு வார்த்தை பற்றாக்குறை போலும். எல்லா இடங்களிலும் அந்த ஒரு வார்த்தையை மட்டும் வைத்தே பிழைப்பை நடத்துகிறது ஆங்கிலம். தமிழ் மொழியில் தான் 2 லச்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் இருக்கிறது, என்ன செய்ய நாம் அதை தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. சரி விசயத்திற்கு வருவோம், SEX என்ற சொல்லுக்கு 'பால் , பால் வேறுபாடு, ஆண் பெண் பாகுபாடு , இனம்,  உடலுறவு , பாலியல் உறவு' என தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது. அதில் உடலுறவு , பாலியல் உறவு என்ற அர்த்தத்தை மட்டுமே நாம் மனதில் வைத்திருந்தால் அது நம் அறியாமை. அதனால் தான் தலைப்பில் 'பாலின்பக் கல்வி' என்று குறிப்பிட்டிருப்பேன்.

நமது கலாச்சாரம் போல் எந்த நாட்டிலும் இல்லை, ஆனால் அதை சரியாக சொல்லி புரியவைக்காமல், பல கட்டுப்பாடுகளை மட்டும் விதித்து இப்போது முறைகேடுகள் அதிகரித்துவிட்டது. எந்த ஒரு விசயத்தையும் அளவுக்கு அதிகமாக அடக்கினாலோ, இல்லை அடக்கு முறை மேற்கொண்டாலோ அது பெரிதாக ஒருநாள் வெடிக்கும். நம் நாட்டில் SEX என்பதில் அந்த முறையை தான் கையாளுகின்றனர். அதை வெறும் அந்தரங்கமான ஒன்றாக மட்டுமே சித்தரித்துவிட்டோம். அதை சரியான முறையில், சரியான வயதில் இருபாலருக்கும் கல்வியாக புரிய வைக்கவேண்டும். உடனே சில பேருக்குத் தோன்றும் 'சின்ன வயசிலேயே செக்ஸ் பத்தி சொல்லிகொடுப்பதா?', முட்டாள்தனமாக கூட தெரியும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டும் சொல்லி கொடுக்காமல் அதோடு நம் கலாச்சாரத்தையும், விழிப்புணர்வையும் கலந்து சொல்லிக் கொடுப்பதே நல்ல பாலின்பக் கல்வியாகும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டுமே பார்க்கும் முட்டாள்களுக்கு எதையும் சொல்லி புரியவைக்க முடியாது.

நமது கலாச்சாரத்தில் 'பெண்ணின் திருமண வயது 21'க்கு மேல் என்ற எண்ணம் உண்டு, அதை சாதரணமாக சொல்லிவிடவில்லை. அதை ஆட்டோக்களுக்கு பின்னால் மட்டுமே பார்த்துப் பழகிய நமக்கு ஏன் சொன்னார்கள் என்று முழுதாக தெரிந்து கொள்வதில்லை. ஒரு பெண் பருவம் அடைந்த உடன் திருமணம் என்று சொல்லாமல் ஏன் ஒரு வயதை நிர்ணயிக்க வேண்டும்? அந்த வயதிற்கு பிறகே ஒரு பெண் மனதாலும் உடலாலும் பக்குவமாகி தாம்பத்திய வாழ்க்கைக்கு தயாராகி விட்டாள் என்பதே அதன் அர்த்தம். பாலின்பக் கல்வியைதான் நமது கலாச்சாரதில் கலந்துவிட்டனர். பாலியல் குற்றங்கள், இளம் வயதில் கர்ப்பம், தகாத உறவு, தவறான உறவுகளால் வரும் பாலியல் நோய்கள், எய்ட்ஸ் ஆகியவற்றை தடுக்கவே நமது கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருந்து வருகிறது. அப்போது ஒளிவு மறைவாக அதை சொல்லிவைத்தனர், அதன் காரணம் ஒருவரின் முழு கவனமும் இதன் மீதே இருந்து கெட்டுப்போய்விடக்கூடாது என்பதே..அதே போன்று பால் உணர்வை தூண்டும் விசயங்கள் அந்த காலத்தில் அதிகமாக இல்லை. இப்போதோ ஊடகமும், சினிமாவும், இணையமும் போதும் கவர்ச்சி, ஆபாசம் காட்டி பாலுணர்வை தூண்ட . கட்டுப்பாடுகளை கொண்டுள்ள நாம் பாலுணர்வை தூண்டும் விசயங்களையும் கையில் வைத்துள்ளோம், இதனால்தான் மேலே கூறிய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முறையான பாலின்பக் கல்வி  அவசியம்.

பாலின்பக் கல்வி என்பது வெறும் உடலுறவு சார்ந்தது என்ற எண்ணத்தை முதலில் அகற்ற வேண்டும். அதன் குறிக்கோள் உடலுறவு சார்ந்த கெட்ட எண்ணங்களை, பழக்கங்களை நிறுத்தவேண்டும் என்ற நோக்கில் இருக்க வேண்டும். தகாத வயதில் அதை மேற்கொண்டால் அதன் விளைவு மனதளவிலும் உடலளவிலும் எவ்வாறு இருக்கும் என புரியவைத்தல் வேண்டும். அதை எந்த வயதில் எந்த நேரத்தில் எப்படி மேற்கொள்வது என சரியாக மற்றும் முறையாக விளக்க வேண்டும். அதோடு நம் கலாச்சாரத்தையும் நன்கு புகுத்த வேண்டும். எதனால் அது தவறு, எப்போது அது சரி என சொல்விளக்கம் வேண்டும்.


எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, முதலில் இதை பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தால் நல்லது. அதுவும் அவர்கள் பருவ வயது அடையும் காலத்தில் அதன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் இதனை பாடமாக கொண்டுவரும் பட்சத்தில் சில கற்பிக்கும் முறைகளை கையாளவேண்டும். முதலில் பாடத்தில் வரும் விளக்கமோ படமோ பால் உணர்வை தூண்டாத விதத்தில் இருக்க வேண்டும், இதற்கு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் பரிசீலிப்பது நல்லது. சில பகுதிகளாக பிரித்து அந்த வயதிற்கற்ற கல்வியை கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களும் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களும் எடுக்கலாம். பாலுணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்தால் அதற்கு சிறந்த மனோதத்துவ நிபுணரிடம்  மாணவர்களுக்கு தகுந்த புத்திமதிகளை கூற வேண்டும். 

கலாச்சார பின்னனியோடு இவ்வாறு பின்பற்றினால் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், ஆனால் இதனை உடனே செயல்படுத்த முடியாது. ஏனெனில், பாலின்பக் கல்வி பெறாத ஆசிரியர்கள் தான் இப்போது உள்ளனர். இதனை பெற்றோர்கள் மூலமாக இப்போது கொடுப்பதே நல்லது. இதன் விளைவு, விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தவேண்டும். 2 அல்லது 3 தலைமுறைக்கு பிறகு பாலின்பக் கல்வி பெற்ற, பக்குவமடைந்த நல்ல ஆசிரியர்களும் இதனை எடுத்துக்கூறலாம். வளரும் சமுதாயம் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமுமே உள்ளது, கவனமாக ஒழுக்கத்துடன் வளர்த்தால் கண்டிப்பாக நல்ல சமுதாயமும் கலாச்சாரமும் இருக்கும் (கிடைக்கும்).

"டூப்ளிகேட் " ஆன சூர்யா படம் !

கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றான் படம், தெலுங்கில் டூப்ளிகேட் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

கல்பாத்தி அகோரம் தனது ஏஜிஎஸ் பேனரில் தயாரிக்கும் படம் மாற்றான். சூர்யா ஐந்து வித்தியாசமான ரோல்களை இந்தப் படத்தில் செய்கிறார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

பால்கன் நாடுகள் எனப்படும் ரஷ்யா, செர்பியா, குரேஷியா, மாசிடோனியா மற்றும் அல்பேனியாவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

சூர்யா படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்தப் படத்தை நேரடி தெலுங்குப் படம் என்ற அளவுக்கு பக்காவாக டப் பண்ணப் போகிறாராம் இயக்குநர் கே வி ஆனந்த். தெலுங்கு பதிப்புக்கு டூப்ளிகேட் என பெயர் சூட்டியுள்ளார். மே அல்லது ஜூனில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

துப்பாக்கி: டுமில்! டுமில்! என்கவுண்டர் போடும் விஜய்‍!

விஜய்யின் திரை வாழ்க்கையில், ஒருவரையும் அடிக்காமல், பஞ்ச் வசனங்கள் பேசாமல், அமைதியான நடிப்பை வெளிபடுத்தி நண்பன் படத்தில் வெற்றி கண்டார், இதனை தொடர்ந்து முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் ஆக்ஷன் படம்தான் துப்பாக்கி. இப்படத்தின் ஷூட்டிங் முத‌ற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் நடந்து முடிந்துள்ளது.

தற்பொது இப்படம் பெப்சி பிரச்சனையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, விரைவில் படப்பிடிப்பு தொட‌ங்கவிருக்கிறது. இப்படத்தில் விஜய், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது படப்பிடிப்பு குழுவினர் கசிய விட்ட செய்தி.  ஆகையால், இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவிருக்காது.

இப்படத்தின் நாயகியான காஜல் அகர்வாலை, விஜய்க்கு பெண் பார்ப்பது போன்ற காட்சியை மும்பையில் படம்மாக்கியுள்ளனர் என்பது கூடுதல் தகவல். விஜய் ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.


விலை போகும் ஆண்கள் ! விடையில்லா பெண்கள்!


ஆணுக்கு பெண் இளைப்பில்லை; ஆணுக்கு பெண் சம‌நிகர் சமானம், என்பதெல்லாம் வெறும் வாய்கூற்றாகவே போய்விட்டது இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட. திருமணம் என்னும் வியாபார ச்ந்தையில், வரதட்சனை என்னும் விலை பேசிதான் மணமகனுக்கு திருமணம் செய்யப்படுகிறது.

இந்த வரதட்சனை கொடுமை என்னும் பெண் கொடுமை தமிழகத்திலும், இந்தியாவின் இதர மாநிலங்களிலும் ஒழிந்தபாடில்லை. கடந்த மாதம் நாளிதழ் ஒன்றில் வெளியான் தலைப்பு செய்தியே இதற்கு நற்சான்று.

செய்தி யாவெனில், வரதட்சனை தரமறுத்ததால் மணப்பெண் உயிருடன் எரித்துக்கொலை! நாட்டில் கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் மட்டுமே வரதட்சனை கேட்கப்பட்டதா என்றால் இல்லை, இது அனைத்து தரப்பு மக்களிடமும், ஜாதி, மதம், கல்வி, வசதி, வேலைவாய்ப்பு என்ற பாகுப்பாட்டிற்கு ஏற்ப வரதட்சனை பெறப்படுகிறது.

வரதட்சனை என்பது திருமணத்துடன் முடிந்துவிடுவதில்லை அழைப்பு, பிறப்பு  என அனைத்து விழாக்களிலும் தொடர்கிறது. இத்தனை வரதட்சனை கொடுத்தும் மகிழ்ச்சியும், நல்வாழ்வும் என்பது மணப்பெண்ணிற்கு உறுதியில்லை.


இதன் விளைவுதான், நாட்டில் பெண் பிள்ளையை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மட்டும் தமிழ் நாட்டில் வரதட்சனை கொடுமையின் பெயரில் 8931 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புகார் தரமால் புழுங்குவோர் கணக்கில் அடங்கா.

சென்னையில் கடந்த் ஞாயிறுயன்று வெளியான மண்ப்பெண் தேவை விளம்பரத்தில், வயது, ஜாதி, மதம் முக்கியமில்லை எனக் குறிப்பிட்டிருந்தோர் பலர், வெறும் இருவரே வரதட்சனை தேவையில்லை  எனக் குறிப்பிட்டிருந்தனர். சென்னை போன்ற பெரு நகரங்களிலே இது ஒழியவில்லையெனில் கிராமங்களை பற்றி கூறத்தேவையில்லை. ஆகையால் வியாபார திருமணத்திற்கு  விலைபோகும் ஆண்களும், பெண் கொடுமைகளுக்கு ஆளாகும் ஆண்களும் ஒழிய வேண்டும்.


ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு : ரிக்கி பாண்டிங் !


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில், 9 மற்றும் 10-வது போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மோசமான ஆட்டம் காரணமாக முன்னாள் கேப்டன் பாண்டிங் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய தேர்வு குழுவினரின் இந்த அதிரடி முடிவால் பாண்டிங் அதிர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பாண்டிங் இன்று அறிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து என்னை நீக்கியது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இதை ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 5 ஆட்டத்தில் எனது ஆட்டம் மோசமாக இருந்ததால் எந்த வித உத்தரவாதமும் இருக்காது என்றே நினைத்தேன்.

ஒருநாள் போட்டியில் இனி விளையாடுவேன் என்று எதிர்பார்ப்பு இல்லை. ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது. இதனால் ஓய்வு பெறுகிறேன்.

இவர் ஒரு காலத்தில் இந்தியாவிற்கு மிகப் பெரிய சிம்ம சொப்பனமாக விளங்கியவர், பாண்டிங் 1995-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 375 ஒருநாள் போட்டியில் விளையாடி 13,704 ரன் எடுத்துள்ளார். சராசரி 42.03 ஆகும். 30 சதமும், 82 அரை சதமும் அடித்து உள்ளார்.

ஆனால் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். டாஸ் மேனியா அணிக்காக தொடர்ந்து ஆடுவேன் என்று பாண்டிங் கூறியுள்ளார்.

நோக்கியாவின் டூயல் சிம் போன்கள்

எத்தனை புதிய செல்போன்கள் வந்தாலும், இந்தியாவில் நோக்கியாவிற்கு ஒரு தனி இடம் இருக்கிறது, டூயல் சிம் போன்கள் வந்த பிறகு நோக்கியாவின் வளர்ச்சி சற்று குறைந்தது, வசதிகள் மற்ற போன்களை போல இல்லாவிட்டாலும் நோக்கியா என்ற பெயரில் உள்ள நம்பிக்கையில் டூயல் சிம் போன்களை தயாரித்து வழங்குகிறது அதன் விபரங்கள் கீழே:

Nokia Asha 200 :
 

போன் அளவு (Size): 115.4 x 61.1 x 14 mm
எடை (Weight): 105 g
திரை அளவு (Screen Size): 320 x 240 pixels, 2.4 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):  up to 32GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes
உள் அளவு (Internal Memory): 10 MB, 64 MB ROM, 32 MB RAM
திறக்கற்றை (Bluetooth): Yes, v2.1
புகைப்படக்கருவி (Camera): 2 MP, 1600x1200 pixels
 மின்கலம்  (Battery): 1430 mAh, 7 h talk time
யு எஸ் பி (USB): microUSB v2.0
ஜி பி ஆர் எஸ் (GPRS): Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around):  Rs. 4,240


Nokia C1-00:

போன் அளவு (Size): 107.1 x 45 x 15 mm
எடை (Weight): 72.9 g
திரை அளவு (Screen Size): 128 x 160 pixels, 1.8 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):  No
தொடர்பு எண்கள் (Phonebook): Yes, 500
திறக்கற்றை (Bluetooth): No
புகைப்படக்கருவி (Camera): No
 மின்கலம்  (Battery): 1020 (BL-5C), 13 h talk time
யு எஸ் பி (USB): No
ஜி பி ஆர் எஸ் (GPRS): No
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around): Rs. 1,400


Nokia 101:

போன் அளவு (Size): 110 x 45.5 x 14.9 mm
எடை (Weight): 71 g
திரை அளவு (Screen Size): 128 x 160 pixels, 1.8 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):   up to 16GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes, 500
திறக்கற்றை (Bluetooth): No
புகைப்படக்கருவி (Camera): No
 மின்கலம்  (Battery): 1020 (BL-5C), 8 h talk time
யு எஸ் பி (USB): No
ஜி பி ஆர் எஸ் (GPRS): No
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around): Rs. 1,400


Nokia X1-01:

போன் அளவு (Size): 112.2 x 47.3 x 16 mm
எடை (Weight): 91.1 g
திரை அளவு (Screen Size): 128 x 160 pixels, 1.8 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):   up to 16GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes, 500
திறக்கற்றை (Bluetooth): No
புகைப்படக்கருவி (Camera): No
 மின்கலம்  (Battery): 1320 mAh (BL-5J), 13 h talk time
யு எஸ் பி (USB): No
ஜி பி ஆர் எஸ் (GPRS): No
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around): Rs. 1,800


Nokia C2-00:

போன் அளவு (Size): 108 x 45 x 14.7 mm
எடை (Weight): 74.1 g
திரை அளவு (Screen Size): 128 x 160 pixels, 1.8 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):   up to 32GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes, 1000
உள் அளவு (Internal Memory): 64 MB ROM, 16 MB RAM
திறக்கற்றை (Bluetooth): Yes, v2.1
புகைப்படக்கருவி (Camera): VGA, 640x480 pixels
 மின்கலம்  (Battery): Li-Ion 1020 (BL-5C),  5 h 40 min talk time
யு எஸ் பி (USB): Yes, microUSB
ஜி பி ஆர் எஸ் (GPRS): Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around): Rs. 2,500


Nokia X2-02:

போன் அளவு (Size): 113 x 50 x 15 mm
எடை (Weight): 71 g
திரை அளவு (Screen Size): 240 x 320 pixels, 2.2 inches
தொடுதிரை (Touch): No
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):   up to 32GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes
உள் அளவு (Internal Memory): 10 MB, 64 MB ROM, 32 MB RAM
திறக்கற்றை (Bluetooth): Yes, v2.1
புகைப்படக்கருவி (Camera): 2 MP, 1600x1200 pixels
 மின்கலம்  (Battery): 1020mAh (BL-5C),  9 h 50 min talk time
யு எஸ் பி (USB): Yes, microUSB
ஜி பி ஆர் எஸ் (GPRS): Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around): Rs. 3,500


Nokia C2-03 and Nokia C2-06:

C2-03

C2-06

போன் அளவு (Size): 103 x 51.4 x 17 mm
எடை (Weight): 115 g
திரை அளவு (Screen Size): 240 x 320 pixels, 2.6 inches 
தொடுதிரை (Touch): Yes
3.5 mm ஜாக்: Yes
 ஞாபக அட்டை/துளை (Memory Card/Slot):   up to 32GB/microSD
தொடர்பு எண்கள் (Phonebook): Yes, 1000
உள் அளவு (Internal Memory): 10 MB
திறக்கற்றை (Bluetooth): Yes, v2.1
புகைப்படக்கருவி (Camera): 2 MP, 1600x1200 pixels
 மின்கலம்  (Battery): 1020mAh (BL-5C),  5 h talk time
யு எஸ் பி (USB): Yes, microUSB
ஜி பி ஆர் எஸ் (GPRS): Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps
சேணொலி (Wireless LAN): No
விலை (Price around):
                Nokia C2-03  – Rs.4,300
                Nokia C2-06  – Rs.4,750
இரண்டு போன்களுக்கும் ஒரு சில வேறுபாடுகள்தான், வண்ணங்களிலும் சிறிது வேறுபாடு உள்ளது.





வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content