பில்லா 2 படத்திற்கு இயக்குனராக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது விஷ்ணுவர்தன்தான், அது நடக்காமல் போனது. மீண்டும் இவர்களது கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், இயக்குனர் யார் எனும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தற்போது பில்லா2 படப்பிடிப்பில் இருக்கும் அஜித், அப்படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தின் அறிவிப்பை கொடுப்பார் என்று ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
தற்போது விஷ்ணுவர்தனும் பவன் கல்யாணை வைத்து இயக்கிவரும் தெலுங்கு படத்திற்கு பிறகுதான் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பார் எனத் தெரிகிறது, இருந்தும் இவர்களிடையே நடந்துள்ள பேச்சுவார்த்தை, அஜித்தின் அடுத்த படத்திற்கு விஷ்ணுவர்தன் இயக்குனர் ஆகலாம் என்று கூறப்படுகிறது. பொருத்திருந்து பார்க்கலாம்.
0 comments:
Post a Comment