தேவையான பொருட்கள் :
ப்ரட் துண்டுகள் : 6
சிக்கன் : 200 கிராம் [எலும்பில்லாதது]
பெரிய வெங்காயம் : 1
பச்சைமிளகாய் : 2
மல்லி இலை : சிறிதளவு
மிளகாய்தூள் : 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் : 1 டீஸ்பூன்
எண்ணெ : பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ப்ரட்டை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
சிக்கனை உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
ப்ரட், சிக்கன், இவற்றுடன் வெங்காயம், பச்சைமிளகாய், மல்லி இலை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு வடைக்கு அரைப்பது போல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இதனை கட்லட் வடிவில் தட்டி எண்ணெயிலிட்டுப் பொரித்து எடுக்கவும். எண்ணெய் அதிகம் சேர்க்காதவர்கள் தோசை தவாவில் இட்டு மேலோட்டமாக எண்ணெய் ஊற்றி பொரித்துக் கொள்ளவும்.
0 comments:
Post a Comment