நாளுக்கு நாள் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே போகிறது, ஜனங்களும் பெருகுவதோடு மட்டுமில்லாமல் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் முக்கியமான இடங்கள் எங்கு நோக்கினும் கூட்டமே.
இதன் விளைவு திருடர்களுக்கு கொண்டாட்டமே. கடந்த 2ம் தேதி தாம்பரத்தில் இருந்து பீச் நோக்கி சென்ற இரயிலில், செல்போன் திருடர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர். தொண்டையார்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் மற்றும் ஆனந்தன் இருவரும், இரயிலில் தனியாக வந்து கொண்டிருந்த கணபதி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பிடுங்கியுள்ளனர். பின்பு மற்ற ஆபரணங்களை கேட்டுள்ளனர், கணபதியிடம் வேறு ஏதும் இல்லாததால், அத்துடன் அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு தாமஸ் மௌன்ட் ரயில் நிலையத்தில் குதித்துள்ளனர். கணபதி போட்ட கூச்சலில் ரயில் நிலையத்தின் நடைபாதையில் இருந்த மக்கள் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்துள்ளனர். இவர்களுடன் மூன்றாவதாக வந்த அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக் தப்பி ஒடிவிட்டான்.
மக்கள் இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர், இருவரையும் விசாரித்த பின்பு தப்பி ஒடிய கார்த்திகையும் போலீசார் கைது செய்தனர். இது போன்ற திருட்டுக்கள் தினமும் நடப்பதாகவும், மக்கள் எங்கு தனியாக இருக்கின்றனர் என்று பார்த்து வழிப்பறி செய்வதாகவும், கூட்டமான நேரத்தில் பர்ஸ், செல்போன் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்கள் திருடப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாம் வெளியில் செல்லும் போது, கவனமாக இருக்க வேண்டும். தனியாக இருப்பதை தவிர்ப்பது நல்லது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, எனவே மக்கள் எப்போதும் தங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

0 comments:
Post a Comment