மனிதன் எப்போதெல்லாம் அதிகமாக துன்பமான சூழ்நிலைகளை எதிர் கொள்கிறானோ, அப்போதெல்லாம் உறுதியான சவாலை மேற்கொண்டு விடாமுயற்சியின் இறுதியில் வெல்லும் வாய்ப்பை பெறுகிறான். சிறு வயதிலேயே தனது அப்பா இறந்தவுடன், பள்ளிப் படிப்பை இழந்து 16 வயதில் குடும்ப பாரம் முழுவதையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவர் தான் கே ரஜினி.
ரஜினி ஒரு ஆட்டோ மெக்கானிக், இரண்டு சக்கரங்களுக்கான பந்தயத்தில் கலந்து கொள்கிறார். சொந்தமாக மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி அதில் குடும்பத்தை தாங்கியவர் ரஜினி. பந்தயங்களில் அடிக்கடி பொழுதுபோக்கிற்காக கலந்து கொள்வார். தனது நண்பர்களுடன் சென்னை அருகில் உள்ள இருங்காட்டுக் கோட்டை பந்தய தளத்திற்கு ஒரு முறை வந்த பிறகு தான் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.
"பைக் எஞ்சின் சத்ததில் எனது மனதை பறிகொடுத்துவிட்டேன், எனக்கு நானே பந்தயப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். எனது ஒர்க் ஷாப்பில் வரும் வருவாயை வைத்து பந்தயத்திற்கு தேவையானதை வாங்கிக் கொண்டேன். ஒர்க் ஷாப்பில் இன்னும் என்னால் அதிக வருவாயை ஈட்டி இருக்க முடியும் இருந்தும் இது எனக்கு புது முகவரியை கொடுத்துள்ளது" என்று ரஜினி தெரிவித்தார்.
இப்போது அவர் தேசிய அளவிலான போட்டியாளர்கள் 10 பேருடன் போட்டியிடத் தயாராக உள்ளார். அவரின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அவரை முன்னேற்றியுள்ளது. 2003ல் அவரின் திறமையை பார்த்து 2 வருடங்கள் டி.வி.எஸ் ரேஸ் ஒப்பந்தம் செய்தது. அன்று முதல் அவர் அனைவராலும் அதிகம் அறியப்பட்டார். தனது திறமையினால், ஆசிய ரோட் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டார். அதில் பங்குபெற்ற ஒரே இந்தியரும் இவரே.
பின்பு 2006ல் மலேசியன் சூப்பர் சீரீஸில் கலந்து கொண்டு கவாசாக்கி கோப்பையை வென்றார். அடுத்து ஐஒன் சீரீஸ் நடத்தும் சூப்பர் பைக் எனும் லீக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். "இது ஐ.பி.எல் போன்று நடந்தப்படும் போட்டியாகும், இதனால் இந்தியாவில் இரண்டு சக்கர வாகனப் பந்தயம் மக்களிடையே பிரபலம் ஆகும். எனது கனவு மோட்டோ ஜி.பி யில் பங்கு பெற்று வெல்வதே, முழுவதும் அதில் பங்குபெற மொத்தம் 5.5கோடி செலவாகும்." எனத் தெரிவித்துள்ளார் ரஜினி. ரஜினி வெற்றி அடைய வாழ்த்துக்கள்!!!
0 comments:
Post a Comment