திமுக., அதிமுக., அல்லாத மூன்றாவது அணி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அவர், பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியக் கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்றார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அ.தி.மு.க. நடந்து கொண்ட விதம் காரணமாக ம.தி.மு.க. என்ற ஒரு அரசியல் கட்சி தேர்தலையே சந்திக்க இயலாத ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்து வருகிறது. இது கூட்டணியில் உள்ள கட்சிகளை அவமானப்படுத்துவதாக உள்ளது.
தி.மு.க.வைப் பொருத்தவரை கூட்டணியில் உள்ள கட்சிகளை கலந்தாலோசிக்காமல் தாங்கள் தனித்துப் போட்டியிடப் போவதாக திடீரென அறிவித்தது. அக்கட்சியின் இந்தப் போக்கு எங்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது போல உள்ளது.
அதற்கு முன்னோட்டமாக வரும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மூன்றாவது வேட்பாளராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment