வாடிக்கையாளர்கள் செய்யும், 'ரீசார்ஜ்' தொகைக்கு அதிகமாக, மொபைல்போன் சில்லரை வியாபாரிகள், கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மொபைல்போன் வாடிக்கையாளர்களில், பெரும்பாலோர், பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்களின், 'ப்ரீபெய்டு' சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 'ஈசி டாப்-அப்' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வசதியை, மொபைல்போன் சேவை நிறுவனங்கள், தங்களின் சில்லரை வியாபாரிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தன. இதற்காக, சில்லரை வியாபாரிகளுக்கு, அந்தந்த சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்கியது.
இந்நிலையில், சில்லரை வியாபாரிகளுக்கு வழங்கிய கமிஷன் தொகை, திடீரென குறைக்கப்பட்டதால், சில மாதங்களுக்கு முன், மொபைல்போன் சில்லரை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேவை நிறுவனங்களால் குறைக்கப்பட்ட, 'கமிஷன்' தொகை ஈடுகட்ட, மொபைல்போன், 'ரீசார்ஜ்'க்கான கட்டணத்திலிருந்து கூடுதலாக, 1 ரூபாயிலிருந்து, 5 ரூபாய் வரை, வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment