நடிப்பு: அஜீத், அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, ஆன்ட்ரியா லட்சுமி ராய், பிரேம்ஜி
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: க்ளவுட் நைன் மூவீஸ்
மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கிடையே வந்துள்ள அஜீத்தின் பொன்விழாப் படம் மங்காத்தா. மேலும் ஆட்சி மாற்றதிற்கு பிறகு சன் பிக்ஸர்ஸ் வெளியிடும் படமாகும்.
மணிரத்தினத்தின் திருடா திருடா படத்தின் 1000 கோடியை கொள்ளையடிக்கும் 3 கேங்க் என்ற ஒரு வரி கதை தான், இதில் சற்று வித்தியாசமாக 2 கேங்க் 500 கோடி பணம், ஆனால் இதில் கொள்ளையடிக்கும் வில்லன் வேலையை செய்பவர் போலிஸ் அதிகாரி. ஐபிஎல் கிரிக்கெட்டில் பெட்டிங் பணமாக கட்டப்படும் ரூ 500 கோடியை அப்படியே தனக்கு சொந்தமாக்க திட்டமிடுகிறார் ஆறுமுக செட்டியார் (ஜெயப்பிரகாஷ்). இவர்தான் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப் புள்ளி. இந்தப்பணத்தை அவரிடமிருந்து பறிக்கத் திட்டமிடுகின்றனர், அவரிடமே வேலைப் பார்க்கும் வைபவ் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட ஒரு கேங்க்.
இந்த சூதாட்டம் பற்றி அறியும் போலீஸ், அர்ஜுன் தலைமையில் ஒரு போலீஸ் படையை மும்பைக்கு அனுப்புகிறது. அதே சமயம் தற்செயலாக சந்திக்கும் பிரேம்ஜியின் மூலம் வைபவ் கேங்கை பிடித்து, அவர்கள் மூலமே விஷயத்தைக் கறந்துவிடுகிறார் சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான அஜீத்.
அதனால் அஜீத்தும் அவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு அந்த ரூ 500 கோடியை கொள்ளையடிக்கிறார். கொள்ளையடித்த பணத்தை ஒரு இடத்தில் 5 பேரும் மறைத்து வைக்கின்றனர். மற்ற நான்கு பேரையும் கொன்று, கொள்ளையடித்த பணத்தை ஒரே பங்காக, தனக்கே சொந்தமாக்க நினைக்கிறார் அஜித். ஆனால் திடிரென்று பணம் அங்கிருந்து இருவரால் கொள்ளையடிக்கபடுகிறது, அந்த பணத்தை கொள்ளையடித்தது யார்? அந்தப் பணம் யாரிடம் சென்றடைகிறது? அர்ஜூன் அந்த கூட்டத்தினை பிடித்தாரா? இந்த மங்காத்தா ஆட்டத்தில் வென்றது யார் என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.
நிறைகள்:
சண்டை, நடனம், ரொமான்ஸ் என்று நடிப்பில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தே படைத்துயிருக்கிறார் அஜீத். அஜித்தும் அர்ஜுனும் செல்பொனில் பேசும் வசனங்கள் நச்.
அஜீத்துக்கு இணையான வேடத்தில் ஜொலிப்பவர் அர்ஜூன். அர்ஜுன் நடத்தும் சண்டைக் காட்சிகள், சேஸிங்குகளால் படம் மெருகெறுகிறது.
சக்தி சரவணனின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் பிண்ணனி இசையும், பாடல்கள் படத்திற்கு பலம். குறிப்பாக பாடல்களில் "விளையாடு மங்காத்தா, கண்ணாடி நான்" ரசிக்கும் ரகம்.
குறைகள்:
ஹீரோயின் த்ரிஷாவுக்கு வேலையே இல்லை, அஜித்தை காதலிப்பதை தவிர , அஜித்தை உண்மையாக காதலிக்கும் த்ரிஷாவுக்கு காதல் ரசமே ஒட்டவில்லை. ஆன்ட்ரியா, அஞ்சலியை வீணடித்திருக்கிறார்கள்.
வாயசைவை வைத்தே கண்டுபிடிக்கூடிய படத்தில் வரும் கெட்ட வார்த்தைகள், பாத்திரங்களின் அறிமுக காட்சிகள் கொஞ்சம் இழுவைதான்.
அர்ஜுன் கிழடு முக தோற்றத்தில் தெரிவது, படத்தில் எல்லா போலீஸும் கிராப்பை குறைத்து குளோஸ் கட்டிங்கில் வரும்போது இவர்மட்டும் ஹிப்பி தலையுடன் ஃப்ங்குடன் வருவது இவரது கேரக்டர் மதிப்பிழக்கிறது.
குறைகளை அனைத்தையும் தவிர்த்தால், ரசிர்களுக்காக ஆடிய
மங்காத்தா ஆட்டத்தில் அஜீத்தும் இயக்குநர் வெங்கட் பிரபுவும் வென்றிருக்கிறார்கள்.
அஜித் ரசிகர்களுக்காக ....... சில படங்கள்.
0 comments:
Post a Comment