சுவையான 3 மீன் சமையல் (ஸ்பைசி, மஞ்சூரியன், டோஸ்ட்)


ஸ்பைசி ஃபிஷ்

தேவையான பொருட்கள்
மீன் (முள் அதிகம் இல்லாத மீன்) - அரை கிலோ
எண்ணெய் - கால் கப்
ஒன்றாக கலக்க வேண்டியப் பொருட்கள்:
தயிர் - அரை கப்
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - ஐந்து
சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
சோய் சாஸ் - அரை தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு தேக்கரண்டி
சிவப்பு கலர் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை:

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கலக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.

ஒவ்வோரு மீனையும் அதில் முக்கி எடுத்து ஒரு மணி நேரம் ஒரு தட்டில் வைக்கவும்.

பின்னர் தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மேலே ஒரு மீனை வைத்து, திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வெந்து பொன்னிறமானதும் எடுத்து விடவும்.

அதேபோல அனைத்து மீனையும் சமைத்து எடுத்து பரிமாறவும்.


ஃபிஷ் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்
மீன் - 1/2கிலோ
முட்டை- 1
கான்பிளவர்- 2தே.கரண்டி
 மைதா- 2தே.கரண்டி
மிளகுத்தூள்- 3ஸ்பூன்
வினிகர்- 1 தே.கரண்டி
சோயாசாஸ்- 1ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி பூண்டு- 1ஸ்பூன்
வத்தல்- 3
உப்பு, எண்ணெய்- தேவைக்கு

செய்முறை:

மீனை சுத்தபடுத்தி துண்டுகளாக நறுக்கி , உப்பு, மிளகுத்தூள், கான்பிளவர், மைதா போட்டு விரவி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மீன்னை பொறித்து எடுக்கவும்.

கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, வத்தல் போட்டு வதக்கவும்.

பின் சோயாசாஸ் ஊற்றி 1/2கப் தண்ணீர் விட்டு சூடாகிய பின்பு வினிகர் உப்பு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு பொறித்த மீன்னை போட்டு அதிகம் பிரட்டாமல் இறக்கவும்.


ஃபிஷ் டோஸ்ட்

தேவையான பொருட்கள்
 பிரட் - நான்கு துண்டுகள்
நீரில் அடைக்கப் பட்ட டூனா மீன் - ஒரு கேன்
(அ) வேகவைத்து உதிர்த்த மீன் -ஒரு கோப்பை
முட்டை - இரண்டு
வேகவைத்த புரோக்கலி (காலி ஃப்ளவர்) - ஒரு கோப்பை
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மயோனைஸ் - கால் கோப்பை
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
சில்லி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிவைக்கவும்.

தக்காளியின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு சதைப்பற்றை மட்டும் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

புரோக்கலியை பொடியாக நறுக்கி வெங்காயம் தக்காளியுடன் கலந்து வைக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து அதில் மயோனைஸ் மற்றும் சில்லி சாஸையும் சேர்த்து கலக்கி வைக்கவும்.

பிரட்டை டோஸ்ட்டரில் அல்லது தோசைக்கல்லில் போட்டு இளஞ்சிவப்பாக டோஸ்ட் செய்துக் கொள்ளவும்.

பிறகு வெண்ணெயை பிரட்டின் ஒரு பகுதியில் மட்டும் தடவி வைக்கவும்.

அதை தொடர்ந்து டூனா மீனை சொட்ட பிழிந்து பிரட்டின் மீது பரவலாக வைத்து தொடர்ந்து காய்கறி கலவையயும் வைக்கவும்.

பிறகு தயாரித்து வைத்துள்ள முட்டைக் கலவையை பிரட்டின் மீது பரவலாக ஊற்றவும்.

பிறகு தயாரித்த ரொட்டிதுண்டுகளை பேக்கிங் செய்யும் தட்டில் வைத்து அவனை 400 டிகிரி Fல் வெப்பத்தில் வைத்து அதன் நடுவிலுள்ள தட்டில் வைத்து பேக் செய்யவும்.

முட்டை நன்கு வேகும்வரை வைத்திருந்து வெளியில் எடுத்து குறுக்காக வெட்டி சூடாக பரிமாறவும்.

இந்த சுவையான மீன் டோஸ்ட் நல்ல சத்து நிறைந்த மத்திய உணவாகும்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content