அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை சனிக்கிழமை (17/9/2011) முதல் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி துவக்கியுள்ளார். மூன்று நாள் உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிகிறது. கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, அந்தக் கரையை நீக்கும் முயற்சியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இஷான் ஜாஃப்ரி கொலை வழக்கில், விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது. மோடிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது, மோடிக்கும் பாஜகவினருக்கும் ஊக்கத்தை கொடுத்துள்ளது, அது மட்டுமின்றி அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் குழு, மோடியின் ஆட்சி நிர்வாகத்தை பாராட்டியதால் அவருக்கு மேலும் சக்தியூட்டி உள்ளது. அடுத்ததாக பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று விவாதம் கிளம்பியயுள்ள நிலையில், திடீரென உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக தன் மீது பல்வேறு அவதூறு நடந்ததாகவும், ஆனால், குஜராத் மாநிலம் எப்போதும் மனித நேயப் பாதையிலிருந்து மாறிவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாகவும், இந்த உண்ணாவிரதப் போராட்டம், யாருக்கு எதிரானதும் இல்லை, நல்லிணக்கம் தான் தமது சக்தி என்றும், தனது உண்ணாவிரதப் போராட்டம், வாக்கு வங்கி அரசியலுக்கு முடிவுகட்டும் வகையில் அமையும் என்றும் மோடி தெரிவித்தார்.
நரேந்திர மோடிக்கு, பாஜக தலைவர்கள் மட்டுமன்றி, கூட்டணிக் கட்சியான அகாலி தளமும் ஆதரவு தெரிவித்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேரில் வந்து, மோடியை வாழ்த்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். நேற்று (17 செப்டம்பர்) அவரது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments:
மக்களே ஓர் எச்சரிக்கை..!
இப்போது...
'நரகாசுரன்களும் தீபாவளி கொண்டாட ஆரம்பித்து விட்டனர்'..!
அஹமதாபாத் பல்கலைக்கழக வளாகத்தில் 'சத்பாவனா' என்ற பெயரில் "மதவெறி & அமைதிச்சீர்குலைவு"க்கு ஹோல்சேல் அத்தாரிட்டியாளர்களான இவர்கள் தொடங்கியுள்ள இந்த உண்ணாவிரதம்... "அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக (?!?!?)" நடத்தப்படுகிறதாம்..!?! "#%&*$~#?+$" போங்கடா நீங்களும் உங்கள் மத அரசியலும்..!
Post a Comment