21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்



1.  குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மது அருந்துவதைக் குறைப்பதற்கு உங்களுடைய சொந்தக்காரணங்கள் யாவை? முதலில் உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். மது அருந்துவதை விட்டொழிக்க வேண்டும் என்ற உங்கள் இலக்கை அடைய அது ஒரு வழிகாட்டியாக அமையும். உங்கள் குறிக்கோள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது மது அருந்த வேண்டியிருக்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருத்தலாகவோ, மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுதலாகவோ, அல்லது மது அருந்துவதை ஒரேயடியாக விட்டொழிப்பதாகவோ இருக்கலாம். ஆனால் உங்களுக்காக மட்டுமே நீங்கள் மது அருந்துவதை விடமுயற்சி செய்கிறீர்கள் என்பதில் மட்டும் உறுதியாக நில்லுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் முயற்சியில் வெல்வது கடினம்.

2.  பிறகு, வாரத்தில் ஏதேனும் ஒருநாளை மது அருந்துவதைத் தவிர்க்கும் நாளாகத் தேர்ந்தெடுங்கள் அன்று வேலை நாளாக இல்லாமல் நீங்கள் ஓய்வெடுக்கும் நாளாக இருந்தால்தான் மது அருந்துவதை தவிர்க்க சுலபமாக இருக்கும்.

3.  நம்பிக்கை இழக்காதீர்கள் / இக்கட்டுரையில் எந்த இடத்திலும் மது அருந்துவதை விட்டுவிடுவது சுலபமானது என்று கூறப்படவில்லை. உங்கள் இலக்குகளையும், அவ்விலக்குகளை நீங்கள் தேர்ந்தெடுக்க அடிப்படையானக் காரணங்களையும் மனதில் எப்போதும் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை, ஒரு முறை நீங்கள் தவறி, அதிகமாக மது அருந்திவிட்டாலும், அச்செயல் உங்கள் குறிக்கோளை தடுக்க விடாதீர்கள். மறு நாளிலிருந்து மீண்டும் உங்கள் இலக்கை அடையும் வழியில் தொடர்ந்து செல்லுங்கள். தோல்வி அடையும் போதெல்லாம் ராபர்ட் எப். கென்னடி, “யாரெல்லாம் பெரிய அளவில் தோல்வி அடைகிறார்களோ அவர்கள் பெரிய அளவில் சாதனை புரிவார்கள்” என்று கூறியதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே குடிப்பழக்கத்தை நிறுத்த அல்லது குறைக்க விரும்பினால் உங்களால் உறுதியாக வெற்றியடைய முடியும்.

4.  மதுப்பழக்கத்தைக் கைவிட நீங்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களை உங்கள் குடும்ப அங்கத்தினர்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வெற்றியை அடைய அவர்களும் உதவட்டும்.

5.  மதுப்பழக்கத்தை நிறுத்தவேண்டும் என்ற உங்கள் குறிக்கோளை அடைய உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களின் ஆதரவினை நாடுங்கள். உங்கள் குடிப்பழக்கத்திலிருந்து நீங்கள் மீண்டுவந்தால் மகிழக்கூடிய அவர்கள், தம் விடுமுறை நாட்களில் உங்களுடன் கூடவே இருந்து உதவுவார்கள். உங்களுடைய கவலைகளையும் எண்ணங்களையும் நீங்கள் அவர்களோடு பகிர்ந்து கொள்வது நலம்.

6.  தடை செய்யுங்கள் / வாரத்தில் ஒரு நாள் மது அருந்துவதை நிறுத்துங்கள். வாரத்தில் ஒருநாள் மது அருந்துவதை நிறுத்துவது உங்களால் முடியும்போது மது அருந்துவதை இரண்டு நாட்களுக்கு நிறுத்த முயற்சி செய்யுங்கள். அதில் வெற்றியடைந்தபின் மூன்று நாட்களாகவும், பின் வாரம் முழுவதையும் மது அருந்தா நாட்களாக மாற்றுங்கள். உங்களது பெரிய இலக்கை, சிறு சிறு இலக்குகளாகப் பிரித்து அடைவது எந்த விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அது உங்கள் குறிக்கோளை நீங்கள் விரைவில் அடையவும், அதில் நிலைத்து நிற்கவும் உதவிகரமாக இருக்கும்.

7.  எப்போதெல்லாம், எந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் நீங்கள் மது அருந்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்து, பின் அதனைத் தவிர்க்கும் திட்டத்தை உருவாக்குங்கள். வீட்டிலோ அல்லது விருந்துகளிலோ மதுவுக்கு பதிலாக வேறு ஏதாவது பானத்தைப் பருகும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். பொதுவாக நீங்கள் மது அருந்தக்கூடிய நேரத்தில், உங்கள் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகமூட்டும் உரமூட்டும் பொழுது போக்குகளை (உடற்பயிற்சி, படித்தல், ஒவியம்.................. போன்றன) மேற்கொள்ளுங்கள்.

8.  மதுவின் மீது ஏற்படும் ஈர்ப்பினைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் எத்தகைய சூழலில் உங்களுக்கு மது அருந்தும் ஆவல் ஏற்படுகிறது என்று கண்டு பிடித்து அச்சூழலைத் தவிர்த்து விடுங்கள். தனியாக இருக்கும்போதோ, விருந்துகளில் பங்குபெறும்போதோ, மதுவருந்தும் ஆவல் ஏற்படுமெனில் அத்தகைய சூழலைத் தவிர்க்கத் திட்டமிடுங்கள். மதுவிற்குப் பதிலாக நல்ல சுவையுள்ள பழரசங்களைப் பருகுங்கள்.

9.  உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். மது அருந்துவதற்காக நீங்கள் செலவு செய்து வந்த பணத்தை குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் வெளியில் சென்று உண்பதற்காகவோ, திரைப்படம் பார்ப்பதற்காகவோ, விளையாடுவதற்காகவோ செலவு செய்யுங்கள்.

10.       மது அருந்தும் பழக்கக்தைக் குறைப்பது உங்களுக்குக் கடினமாக இருந்தால் கூடுதல் உதவியையும் புதிய திட்டங்களையும் நாடுங்கள் : http://www.stopdrinkingadvice.org/guide/ என்ற இணையதளத்தின் உதவியைப் பெறுங்கள். அல்லது துறைசார்ந்த வல்லுநரை அணுகுங்கள்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content