சாலை வரி மற்றும் புதிய வாகனங்களுக்காக வாகன விநியோகஸ்தர்கள் செலுத்தும் பதிவு கட்டணம் இந்த மாதம் இறுதி முதல் இணையம் (online) மூலமாக செலுத்தலாம். சனிக்கிழமை அன்று போக்குவரத்து அமைச்சர் வி செந்தில் பாலாஜி மாநில சட்டமன்றத்தில் இந்த அறிவிப்பை தெரிவித்தார். "இதன் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) உள்ள நெரிசல் குறைக்க வாய்ப்பு உள்ளது" என்றும் கூறினார்.
போக்குவரத்து அதிகாரிகள் இதை வரவேற்றனர், அடுத்த நடவடிக்கையாக ஓட்டுநர் பள்ளிகள் (Driving School)மூலமாக இணையத்தில் உரிமங்கள் (License) விண்ணப்பிக்க ஏற்பாடுகள் நடப்பதாகவும், பாதுகாப்பாக செயல்படுமா என்ற சோதனைக்குப் பிறகே நடைமுறை படுத்தப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கே.கே. நகர் அலுவலகத்தில் தெரிவித்தார்.
"இந்த புதிய அமைப்பு மிக வசதியாக இருக்கும், இடைத் தரகர்கள் இங்கு செயல்பட முடியாது. இது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) இணையதளம் மின் சீட்டு பதிவு போல எளிய முறையில் இருக்கும். எங்கள் ஊழியர்கள் வேலைச் சுமையை கூட வெகுவாக குறைந்து விடும்" என்றும் அவர் கூறினார்.

0 comments:
Post a Comment