அன்னா ஹசாரே இப்போது எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்துக் கொண்டே போகிறார், இளைய சமூதாயத்தை வெகுவாக கவர்ந்து விட்டார். இப்போது அவரின் படம் எம்பிராய்டரி செய்யப்பட்ட சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
குஷ்பு படேல் எனும் 23 வயது பெண் அன்னா ஹசாரே படம் எம்பிராய்டரி செய்யப்பட்ட சேலையை வாங்கியுள்ளார், படித்துக்கொண்டிருக்கும் அவர் கூறியதாவது, "அரசு அலுவலகத்தில் எப்போதெல்லாம் ஒரு வேலையை செய்ய கஷ்டமாகிறதோ, அப்போதெல்லாம் நான் இந்த புடவையை அணிந்து கொள்வேன், அதனால் எனது வேலையை செய்ய நான் லஞ்சம் கொடுக்கப்போவதில்லை என்று மக்களுக்கு தெரியும்" என்று அவரின் ஆதரவினை தெரிவித்துள்ளார்.
இந்த புடவையை அரசு வேலையில் இருக்கும் பெண்களுக்கு வழங்கி, சீருடையாக மாற்ற வேண்டும் என்றும், அதனால் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் மாட்டோம் என்ற எண்ணம் உருவாகும், அதோடு இல்லாமல் இதன் மூலம் ஹசாரேவிற்கு முழு ஆதரவு தெரியப்படுத்த முடியும் என்றும் அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புடவைகளுக்கு பெயர் போன சூரத் நகரத்தில், அவரின் படம் எம்பிராய்டரி செய்யப்பட்ட சேலைகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர். ஒருவர் 50,000 சேலைகள் மொத்தவிலை விற்பனைக்கு கேட்டிருப்பதாகவும், இந்த புடவைகள் 500 முதல் 700 ரூபாய் வரை விலையில் கிடைக்கும் என்றும், இதை வியாபார நோக்கத்தோடு செய்யவில்லை என்றும் சேலை தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதன் காணொளியை காண கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்
Click the link below to see the video

1 comments:
I really don't know what to say!
Post a Comment