மங்காத்தா எனும் மாபெறும் வெற்றி அஜித்தின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் கூட்டியுள்ளது. மங்காத்தா வெளிவந்து இரண்டு வாரங்களில் படம் எடுக்கச் செலவான தொகையை விட அதிகமாக தொகையை வசூலித்துவிட்டது. சமீபத்தில் வெளிவந்த படங்களில் மிக சீக்கிரமாக எல்லோருக்கும் லாபத்தை கொடுத்துள்ள படம் மங்காத்தா.
இது அஜித்தின் அடுத்த படமான 'பில்லா 2'வின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது, பில்லா 2 வின் கதை முதல் பாகத்தில் இருந்து முன்நோக்கி பின்னப்பட்ட கதையாக எடுத்து வருகின்றனர். கதையின் நாயகனான டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்று சொல்லப்படுகிறது.
வைடு ஆங்கிள் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவிலும், அடுத்ததாக டிசம்பர் மாதம் ரஷ்யாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். படம் 2012ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டிற்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
மங்காத்தாவிற்கு பிறகு அஜித்தின் நிலை மேலும் உயர்ந்துள்ளதால், 32 கோடிக்கு பேசப்பட்டு வந்த பில்லா2 வின் பட உரிமைக்கு இப்போது கடும் போட்டி நிலவி உள்ளது. மும்பையை சேர்ந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனம் 40 கோடிக்கும், மலேசியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 45 கோடிக்கும், இன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத் தலைவர் சுனிர் கேட்டர்பால் 50 கோடிக்கும் வாங்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
அஜித்தின் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஏ.எம்.ரத்னம் அஜித்தை வைத்துத் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 17 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப் போவதாக தெரிகிறது. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் மாறியுள்ளார்.
1 comments:
vijay salary 20 crores..
Post a Comment