நடிகர்களும் மனிதர்கள்தான். கேவலப்படுத்த வேண்டாம் ரசிகர்களே

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திறமை உண்டு, அவர்களது தனித்திறமை எல்லோருக்கும் பிடித்து விடுவதில்லை, சில நடிகர்கள் ஈர்க்காமல் போனால் அதற்கு அவரிடம் திறமை இல்லை என்று அர்த்தம் கொள்வது தவறு. ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தால் அவருக்கு போட்டியாக மற்றொரு நடிகரை நினைத்துக் கொண்டு மற்ற நடிகரை இழிவு படுத்துவது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று, அன்று மக்களின் படிப்பறிவு பின் தங்கியே இருந்தது, அப்போது புரியாமல் செய்து விட்டனர் என்று கூறலாம். ஆனால் இன்று படித்தவர்களே இழிவுபடுத்தும் கேவலமான செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று பேஸ் புக், ஆர்குட், ட்விட்டர் போன்ற வலைப் பின்னல்களில் பெரிதாக வளர்ந்து வரும் கலாச்சாரம் இது, ஒரு நடிகரை பிடிக்காதவர் அவரை எதிர்ப்பது போன்ற பக்கங்களை உருவாக்கி அதில் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு, அந்த நடிகரை இழிவுபடுத்துவது. அதோடு நில்லாமல் அவர்களுடைய புகைப்படங்களை போட்டோஷாப் மூலம் கிண்டல் செய்தும் வருகின்றனர். 'ஐ ஹேட் விஜய், அஜித், சூர்யா, சிம்பு' எனும் பெயரில் இப்படிப்பட்ட அநாகாரீக செயல்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இது போன்ற செயல்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லாததால் தங்கள் இஷ்டத்திற்கு எல்லை கடந்து போவதுதான் வருத்ததிற்குறிய விஷயம்.

நடிகர்களும் மனிதர்கள் தான் என்னதான் கேலி, கிண்டல், பொழுதுபோக்கு என எதாவது ஒரு வகையில் எடுத்துக் கொண்டாலும், இவை எல்லாம் அந்த நடிகர்களுக்கு தெரிந்தால் அவர்களது மனதும் புண்படும் என்பது தெரியாதா? ஒருவரது படம் வந்தால் அது நன்றாக உள்ளதோ இல்லையோ, குறை இருக்கிறதோ இல்லையோ அதற்கு தகுந்த விமர்சனங்கள் போதாதா? இது வெறும் கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காக சொல்லவில்லை, அதையும் தாண்டி கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், அசிங்கமாக சித்தரித்தல் போன்ற செயல்கள் அதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. கேலி என்பது ஒரு வகையான விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அசிங்கங்களை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது வெறும் சில நடிகர்களோடு நின்று விடவில்லை வளர்ந்துள்ள எல்லா நடிகற்களும் இதற்கு விதிவிலக்கே. ஏன் நடிகைகளும் தான்.

தற்போது சமூக வலைப்பின்னல்களை அதிகம் பயன்படுத்துவது படித்தவர்களே, படித்தும் அவர்கள் செய்யும் இழிவு செயல்களை பாருங்கள். பேஸ் புக்கில் இருந்து திறட்டப்பட்ட படங்களை பார்த்தால் தான் தெரியும். இந்தச் செயலால் கிடைக்கும் அற்ப சந்தோசத்திற்காக நேரத்தை இப்படிப் பட்ட வேலைகளில் வெட்டியாக செலவிட வேண்டுமா?


5 comments:

உங்கள் ஆதங்கம் ஒரு பதிவின் வழியே வந்துள்ளது. இந்த மாதிரியான கிராபிக்ஸ் பண்ணும ஆட்களுக்கு கேட்டால் சரி?

Good Thinking and comments.............Keep It up

அருமையான பதிவு ! !

நல்ல பதிவு பட் இத ஆரம்பிச்சு வைத்தது நம்ம அஜீத் ரசிகர்கள் தான் அஜித்தோட படம் வரேக்க விஜெய் ரசிகர்கள் எல்லாம் அமைதி காக்குரங்க அனால் விஜெய் படம் வரேக்க எவளவு கேவலமான கமெண்ட் எழுதுறாங்க என் இந்த பிளக் எழுதுறவங்க எத்தின பெயர் விஜய கேவல படுத்தி எழுதுறாங்க

arumayana pathuvu... ella rasigargalum unara vendiya vishayam... veleayillatha vetti pasanga tha intha mathiri velaigalai seivanunga...

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content