தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

செவ்வாய் கிரகம் உயிரினம் வாழ தகுதியற்றது -- நாசா


அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கு வெட்டி எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. எனவே, அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என கருதினர்.    
 
அதை தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளையும், செயற்கைகோள் அனுப்பிய போட்டோக்களையும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டனர்.  
 
3 வருட ஆய்வுக்கு பிறகு தற்போது உயிரினங்கள் வாழ செவ்வாய் கிரகம் தகுதியற்றது என கண்டறிந்துள்ளனர். ஏனெனில், அங்கு 60 கோடி ஆண்டுகளாக கடும் வறட்சி சிலவுகிறது. எனவே, அங்கு உயிர் வாழ போதிய அளவு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை.
 
செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் ஐஸ்கட்டிகள் படர்ந்துள்ளன. அதனால்தான் அங்கு தண்ணீர் இருப்பதாக கருதப்பட்டது. அவை தவிர மற்ற பகுதிகளில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே, அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை மற்றும் தகுதி இல்லை என தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவல் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியாவின் "விண்டோஸ்" ஸ்மார்ட்போன் அறிமுகம் !!

பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் "விண்டோஸ்" எனும் இயங்குதளம் (Operating System) கொண்டு இயங்கவல்ல இரண்டு  ஸ்மார்ட்போன்களை நோக்கியா நிறுவனம் இன்று அறிமுகப் படுத்தியுள்ளது.

ஒன்று லுமியா 800 !





இது பேஸ்புக் போன்ற சமுக வலை தளங்களை சப்போர்ட் செய்வது மட்டுமில்லாமல் நேவிகேஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்  9 பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ .28000 மட்டும்


மற்றொன்ரு லுமியா 710





இதில் 1.4 GH புராஸசர் பொருத்தப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸள் கொண்ட‌ கேமரா, எல்.ஈ.டி பிளாஷ் மற்றும் இன்டர்னள் மெமரி 8 GB ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் மைக்ரோசாப்ட் மற்றும் நோக்கியா நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பாகும். தற்போதைய மார்க்கெட்டில் உள்ள ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போனை நோக்கியா நிறுவனம் களமிறக்கியுள்ளது.

ஆபாசமாக நடித்த நடிகைக்கு 90 சவுக்கடியுடன் சிறை தண்டனை


2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'மை டெஹ்ரான் ஃபார் சேல்'  (My Tehran for Sale) எனும் திரைப்படத்தில் நடித்த மரியா (Marzieh Vafamehr) ஆபாசமாகவும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 90 சவுக்கடியும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அப்படம் டெஹ்ரான் நகரை  சுற்றி எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த இவர் மொட்டை தலையுடனும், முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தா இல்லாமல் நடித்ததற்காகவும் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டு கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக நடிகை மரியாவின் குடும்னபத்தினர் அறிவித்துள்ளனர்.

இப்படம் Independent Spirit Inside Film award  மற்றும் Trimedia Film Trimedia Film Festival-ல் சிறந்த படத்திற்கான விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஜாப்ஸின் 10 முக்கிய கண்டுபிடிப்புகள்!!

கணினி தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய ‌ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனர்களில் ஒருவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி போட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் எவ்வித முறையான பட்டமும் பெறாத ஸ்டீவ் ஜாப்ஸின் 10 கண்டுபிடிப்புகள்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அவைகள் உங்கள் பார்வைக்கு...

1. ஆப்பிள் I (1976) என்ற கணினி முதன் முதலில் உருவாக்கினார்.

2. ஆப்பிள் II (1977) இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

3. லிசா (1983) இது வெளிவந்த போது மிகவும் விலைவுயர்ந்ததாக கருதினர்.

4. மாக்கின்டோஷ் (1984) லிசாவை போன்றே கிரபிகல் யுசர் இன்டர்பேசை கொண்டிருந்தது.

5. நெக்ஸ்ட் (1989) (இது இன்னும் ஐ போனில் பயன் படுகிறது.)‌

6. ஐமேக் (1998)

7. ஐபாட் (2001) இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது.

8. ஐ டுயுன் ஸ்டோர் (2003)

9. ஐ போன் (2007) ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது.

10. ஐபேட் (2010)

மிக மோசமான நகரம் பெங்களூர் !!!

சமீபத்தில் நடத்தப்பட்ட  நான்காவது ஆண்டு ஐ.பி.எம் கம்யூட்டர் பெயின் கணக்கெடுப்பு படி, உலகளாவிய சராசரி நேரம் 20 நிமிடங்களில்  ஏற்படும் போக்குவரத்து நெரிசலை 6 கண்டங்களில் உள்ள 20 நகரங்களில் 8042 பயணிகளிடம்   ஆய்வு நடத்தப்பட்டது.அதில் பெங்களூர் (44%) என குறிபிடப்பட்டுள்ளது. அந்த புள்ளி விவர அடிப்படையில் மிக மோசமான நகரப் பட்டியலில் பெங்களூர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த  ஆண்டின் எட்டு மாத இடைவெளியில் ஆகஸ்ட் 2011 வரை, கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் சட்டவிரோத/ தவறுதலான  பார்க்கிங் என  4 லட்சம் வழக்குகள் பெங்களூர் போலீசாரால்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூர் நகர போக்குவரத்து போலீஸ் பதிவுகளின்படி, ஒவ்வொரு மாதமும் 50,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  தவறான நிறுத்தம், இட பற்றாக்குறை காரணமாக கிட்டத்தட்ட 20 முதல் 35 நிமிடங்களில்  தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளனர்.

700 கோடி ஆகும் உலக மக்கள் தொகை

இந்த மாதத்தில், உலகின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை, 700 கோடியாகி விடும். 2100ம் ஆண்டிற்குள், இத்தொகை, ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்' என, ஐ.நா.,வின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 1804ம் ஆண்டு வரை, உலகின் மொத்த மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது. 1960களில், 300 கோடியாக அதிகரித்தது. இன்னும் ஒரு நூற்றாண்டில், ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும்.மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் நாடுகளில் தான் காணப்படுகிறது. உலகில், மக்கள் தொகை அதிகரிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய, மூன்று வளர்ந்த நாடுகள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளன.

இந்த அதிகரிப்புக்கு பொருளாதார வளர்ச்சி, பிறப்பு விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு ஆகிய காரணங்களை, நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேநேரம், கருத்தடை வசதிகளை அதிகளவில் மக்கள் உபயோகப்படுத்தும் போது தான், பிறப்பு விகிதம் குறைய வாய்ப்பு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

டிஎன்எஸ்

உலகிலேயே விலை உயர்ந்த செல்போன்கள்

இங்கு உலகிலேயே விலை உயர்ந்த செல்போன்களில் முதல் ஐந்தினை பட்டியலிட்டுள்ளோம்.


1. ஸ்டூவர்ட் ஹக்ஸ் ஐபோன் 4
செல்போனுக்காக எவ்வளவு பணம் வேண்டுமானலும் செலவழிக்கத் தயார் எனக் கூறுபவர்களே, இதனை வாங்கமுடியும். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த  ஸ்டூவர்ட் ஹக்ஸ் எனும் வடிவமைப்பாளரின் படைப்பான ஐபோன் 4 உலகின் விலை உயர்ந்த போன்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இவரது படைப்புகள் அனைத்தும் விலை உயர்வுக்காகவே மிகவும் பிரபலம்.  இதன் விலை 8 மில்லியன் அமெரிக்க டாலர். போனின் பக்கவாட்டில்  500 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் சின்னம் மட்டும் ரோஸ் கோல்டு மற்றும்  53 வைரக்கற்கள் கொண்டு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே இதுவரை இரண்டு போன்களே தயாரிக்கப் பட்டுள்ளன.


2. கோல்ட் ஸ்டிரைக்கர்  ஐபோன் 3 ஜிஎஸ்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் தயாரித்த இந்த ஐபோன், 136 வைரக்கற்கள் மற்றும் தங்கம் கொண்டு செய்யப்பட்டுள்ளது.  இதன் விலை 3.2 மில்லியன் அமெரிக்க டாலர். முன்பக்கத்தில் 7.1 காரட் பெரிய வைரம் பதிக்கப்பட்டுள்ளது.


3. பீட்டர் அலொசன்ஸ் கிங்ஸ் பட்டன்  ஐபோன் 3 ஜிஎஸ்
18 காரட் எல்லோ கோல்டினால் செய்யப்பட்ட இந்த ஐபோன், 138 வைரக்கற்கள் கொண்டு செய்யப்பட்டுள்ளது.  முன்பக்கத்தில் 6.6 காரட் பெரிய வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்.



4. கோல்ட் விஷ் லெ மில்லியன் பீஸ்
எம்மானுவேல் என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்த போன் ஒயிட் கோல்டினால் செய்யப்பட்டது. போனைச் சுற்றிலும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் விலை 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்.


 
5.  டைமண்ட் க்ரிப்டோ ஸ்மார்ட் போன்
பீட்டர் அலொசன்ஸின் மற்றொரு படைப்பு, பிளாட்டினம் கொண்டு செய்யப்பட்டது. போனைச் சுற்றிலும் 50  வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ரோஸ் கோல்ட் கொண்டு சில பாகங்கக் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்.

இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கம்! - மகிந்த ராஜபக்ஷே

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த அவசரகாலச் சட்டத்தை இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என ராஜபக்ஷே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். முதன்முதலில் 1983 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டம் அமல் செய்யப்பட்டது, போர் முடிந்து இரண்டு ஆண்டுகளான நிலையில் இனிமேல் இச்சட்டம் அவசியமில்லை என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார், இச்சட்டத்தின் சில கடுமையான பிரிவுகள் ஓராண்டுக்கு முன்னர் தளர்த்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே, இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்தார்.

இலங்கையில் புலியினரின் செயற்பாடுகள் ஒழிக்கப்பட்டதினால் அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு வலியுறுத்தி வந்தன. மனித உரிமை அமைப்பும் மற்றும் சர்வேதச மன்னிப்புச் சபையும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.

இதனை ஒரு ஆரம்பமாகக் எடுத்துக் கொண்டு, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்று ரணில் விக்கிரம சிங்கே வலியுறுத்தியுள்ளார்.

உலகின் விலை உயர்ந்த பத்துக் கார்கள்

Bugatti Veyron Super Sports



உலகிலேயே மிக உயர்ந்த கார்களில் முதலிடம் பிடிப்பது பிரஞ்சு நாட்டை சேர்ந்த புகட்டி நிறுவனத்தின் வெய்ரான் எனும் கார். அதிவேகமான கார்களில் ஒன்றான இது, 2.5 வினாடிகளில் 0-60 கி.மி வேகத்தை பிடிக்கும். இதன் விலை 2,400,000 அமெரிக்க டாலர்கள். இந்திய தொகைக்கு குறைந்தபட்சமாக 10,80,00,000 ரூபாய் ஆகும்.


Pagani Zonda Clinque Roadster



இரண்டாவதாக இத்தாலி நாட்டை சேர்ந்த பகனி  நிறுவனத்தின் சோண்டா ரோட்ஸ்டர் எனும் கார் உள்ளது. இது 3.4 வினாடிகளில் 0-60 கி.மி வேகத்தை பிடிக்கும். இதன் விலை 1,850,000 அமெரிக்க டாலர்கள், இந்திய தொகைக்கு குறைந்தபட்சமாக 8,32,50,000 ரூபாய் ஆகும்.

Lamborghini Reventon
 


 
மூன்றாவதாக இத்தாலி நாட்டை சேர்ந்த லம்போர்கினி நிறுவனத்தின் ரிவென்டன் எனும் கார் உள்ளது. இது 3.3 வினாடிகளில் 0-60 கி.மி வேகத்தை பிடிக்கும். இதன் விலை 1,600,000 அமெரிக்க டாலர்கள், இந்திய தொகைக்கு குறைந்தபட்சமாக 7,20,00,000 ரூபாய் ஆகும். இதன் வடிவமைப்புக்காகவே விலை அதிகமாக விற்கப்படுகிறது.

Koenigsegg Agera R



நான்காவதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கொனிக்செக் நிறுவனத்தின் அகிரா ஆர் எனும் கார் உள்ளது. இது 2.8 வினாடிகளில் 0-60 கி.மி வேகத்தை பிடிக்கும். இதன் விலை 1,600,000 அமெரிக்க டாலர்கள், இந்திய தொகைக்கு குறைந்தபட்சமாக 7,20,00,000 ரூபாய் ஆகும்.

McLaren F1



ஐந்தாவதாக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மெக்லான் நிறுவனத்தின் எஃப் ஒன் எனும் கார் உள்ளது. இது 3.2 வினாடிகளில் 0-60 கி.மி வேகத்தை பிடிக்கும். இதன் விலை 970,000 அமெரிக்க டாலர்கள், இந்திய தொகைக்கு குறைந்தபட்சமாக 4,36,50,000 ரூபாய் ஆகும்.

அடுத்த ஐந்து இடங்களை பிடித்த கார்கள்

Pagani Zonda C12 F - 667,321 அமெரிக்க  டாலர்கள்.
 
SSC Ultimate Aero - 654,400 அமெரிக்க  டாலர்கள்.
 
Ascari A10 - 650,000 அமெரிக்க  டாலர்கள்.
 
Saleen S7 Twin Turbo - 555,000 அமெரிக்க  டாலர்கள்.
 
Koenigsegg CCX - 545,568 அமெரிக்க  டாலர்கள்.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content