தலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3

தலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2  பாகம் 2




7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள்
தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உதிரும்.
தலையின் சருமத்தில் வரும் படைகள், கட்டிகள், புண்கள், தோலைத் தாக்கும் பிற நோய்களும் கேசம் உதிரக் காரணமாக அமையலாம்.

8. மரபு வழிக் காரணங்கள்
சிலருக்குப் பரம்பரையாகக் கேசம் உதிருதல், வழுக்கை விழுதல் போன்றவை ஏற்படலாம் பெண்களை விட ஆண்களுக்கு இவ்வாறு மரபு வழிக் காரணங்களால் கேசம் அதிகாமாக உதிர்கிறது.


9. மன அழுத்தம்
மன அழுத்தம், மன இறுக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கும் கேசம் அதிகமாக உதிரலாம். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தைமஸ் எனும் நாளமில்லாச் சுரப்பியிலிருந்து சுரக்கும் தைமொலின் என்ற இயக்க நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும் எனவே கேசம் அதிகமாக உதிரலாம்.

மன அழுத்தத்தோடு அல்லது இறுக்கத்தோடு இருக்கும்போது நமது முகம், தாடைப்பகுதி, நெற்றி மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகள் மிகவும் இருக்கமாகிறது.

இந்த இருக்கத்தால் தலையின் தோலுக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் அழுத்தப்பட்டு அவற்றில் இரத்த ஒட்டம் குறைபடுகிறது, இதனால் கேசவேர்கள் ஊட்டச்சத்து கிடைக்காமல் வலுவிழக்கின்றன.

10. வயது

40 வயதுக்கு மேல் கேசம் உதிவது சற்று அதிகரிக்கலாம், அது இய்ற்கையான ஒன்று.
அந்த வயதிலிருந்து உடலின் அனைத்து இயக்கங்களிலும் சிறிய மந்தத் தன்மை ஏற்படும். புதிய கேசம் வளரும் வேகமும் குறையும்.

பெரும்பாலானோருக்கு, கேசம் அதிகப்படியாக உதிராவிட்டாலும், 40 வயதிற்கு மேல் கேசத்தின் பருமன் குறையத் தொடங்கும்.

இவ்வாறு கேசம் மெலிவதால், அடர்த்தி குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும்.

11. கதிர் வீச்சுகள்

எக்ஸ் கதிகள், காமாக் கதிர்கள், மின் காந்த அலைகள் போன்ற பலவகையான கதிர்வீச்சுகளின் பாதிப்புகளினாலும் கூட கேசம் அதிகாமாக உதிரும்.

எக்ஸ்ரே லேப், மின் அணு நிகையங்கள், புற்று நோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை தரும் மையங்களில் வேலை செய்யும் கவனமுடன் இருக்க வேண்டும். வெளியில் அதிகம் சுற்றுபவர்கள் புற ஊதாக் கதிர்களினால் பாதிக்கப்பட்டு கேசம் உதிரலாம்.

12. வேதிப்பொருட்கள் (கெமிக்கல்ஸ்)

பல வகையான வேதிப்பொருட்கள் கேசம் உதிரக் காரணமாகலாம், பெயிண்டிங், நகைகளுக்கு மெருகேற்றுதல், கவரிங் பூசுதல், சோப்பு தொழிற்சாலைகளில், பிற வேதிப் பொருட்கள் தயார் செய்யும் இடங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறிது சிறிதாக உடலில் வேதிப்பொருள் சேரும் வாய்ப்பு உள்ளது. இதனால் கேசம் அதிகமாக உதிர வாய்ப்புள்ளது.

இதுவரை கேசம் உதிரும் காரணங்களை பார்த்தோம், இனி உதிர்வதை தடுக்கும் முறைகளை பார்க்கலாம்.

கேசம் உதிருவதை தடுக்கும் முறைகள்
1.   மருத்துவ ஆலோசனை
2.   உணவு முறை மாற்றங்கள்
3.   வாழ்க்கை முறை மாற்றங்கள்
4.   கேசப் பராமரிப்பு
5.   எளிய சிகிச்சைகள்

மருத்துவ ஆலோசனை

திடீரென கேசம் கொத்து கொத்தாக உதிரத் துவங்கினால், உடலில் தொன்றியுள்ள ஏதேனும் தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகவேண்டும். கேசம் மட்டுமே பிரச்சனை என்றால் தோல் நோய் நிபுணரை (Dermatologist) அணுகுவது அவசியம்.

தலையில் பேன், ஈறு, பொடுகு, புண், கட்டி, தோல் நோய் இருந்தால் அவற்றை தகுந்த சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.

இயக்க நீர் குறைபாடுகள் (Hormonal Imbalances) உள்ளதா, ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

உணவு முறை மாற்றங்கள்

கேசம் நன்கு வளரவும், உறுதியாக இருக்கவும் நாம் உண்ணும் உணவு புரதம் நிரைந்ததாகவும், சரிவிகித உணவாகவும் இருத்தல் அவசியம்.
புரதம் (Protein)

நாம் உண்ணும் உணவுகள் அடிப்படையிலேயே மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகிய மூன்றுமே உள்ளன. கேச வேர்கள் உறுதி பெறவும், கேசம் நன்கு வளரவும் புரதச் சத்தே மிக அவசியமானதாக உள்ளது.

புரதம் அதிகம் உள்ள உணவுகள்
கோழிக் கறி
கொழுப்பு குறைவான மாமிசங்கள்
முட்டை, மீன், உலர்ந்த பருப்புகள் (பாதாம், பிஸ்தா, முந்திரி), பட்டாணி, வேர்கடலை
பீன்ஸ், சோயா, பால், தயிர், யோகர்ட், சீஸ்

இரும்புச் சத்து

உங்களது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு உள்ளது என பரிசோதித்து பாருங்கள், இந்த அளவு 12.5 கிராமுக்கு மேல் இருப்பது அவசியம். 11 கிராமுக்கு கீழே இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று இரும்புச் சத்து மாத்திரைகள், டானிக்குகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கல்லீரல், பூசணி விதை, பாதாம் பருப்பு, முட்டை மஞ்சள் கரு, உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம், பப்பாளி, மாதுளை, பசலைக் கீரை, காலிஃப்ளவர், முருங்கைக்கீரை போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

பி.காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்
எல்லா பி.காம்ப்ளெக்ஸ் சத்துக்களுமே கேச வளர்ச்சிக்கு அவசியம், இருந்தும் பயாடின் (Biotin) மற்றும் அயனோசிட்டால் (Ionocitol) ஆகிய இரண்டும் மிக மிக அவசியமானவை.

பயாடின் அதிகமுள்ள உணவுகள்
கைக்குத்தல் அரிசி, பார்லி, ஓட்ஸ், சோயாபீன்ஸ், காலிஃப்ளவர், காளாங்கள், வேர்கடலை, பாதாம் பருப்பு.

அயனோசிட்டால் அதிகமுள்ள உணவுகள்
கல்லீரல், ஈஸ்ட், உலர்ந்த திராட்சை, முளைவிட்ட தானியங்கள், முட்டைகோஸ், வேர்கடலை.

அயோடின்
உடலில் அயோடின் சத்து குறைபடுவதாலும் கேசம் உதிர்வது அதிகரிக்கும். அயோடின் தலையின் தோலுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, கேச வேர்களை வலுவடைய செய்கிறது.

அயோடின் கலந்த உப்பு, கடல் உண்வுகள், பசலைக் கீரை. இவற்றுள் கடல் உண்வுகளில் அதிக அளவில் அயோடின் சத்து உள்ளது.

தாமிரம் அதிகம் உள்ள உணவுகள்
கல்லீரல், கடல் நண்டு (Lobster), சிப்பி, உலர்ந்த பருப்பு, கீரைகள்.

வைட்டமின் சி
நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாசி, பப்பாளி, முருங்கை கீரை, முட்டைகோஸ் போன்ற உணவுகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

தண்ணீர்
கேச வேர்கள் உறுதியாக இருக்க அதிக அளவில் நீர் அருந்துவது அவசியம்.தினசரி குறைந்தது 3.5 லிட்டர்கள் வரை அருந்துவது அவசியம்.

வைட்டமின் ஏ சத்து தேவைக்கு அதிகமாக இருந்தாலும் கேசம் உதிரத் துவங்கும், மீன் எண்ணெய் மாத்திரைகள், வைட்டமின் ஏ மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு கேசம் அதிகமாக உதிரத் துவங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடரும்...

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content