தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

நம் சமுதாயம்: சமுதாய அக்கறை உள்ளவரா நீங்கள்! உங்கள் குரல் ஒலிக்க!நம் சமுதாயம் - இந்த பகுதி சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தவே, எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த வாயிலின் வழியாக தெரியப்படுத்தலாம். இதன் மூலம் உங்களுடைய எண்ணங்கள், கேள்விகள் மற்றும் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது வெறும் வெளிப்படுத்தும் இடம் மட்டும் அல்ல, அதற்கான தீர்வு, சரி செய்யும் வழிமுறைகள், சரியான இடத்திற்கு பிரச்சனையை எடுத்துச் செல்லும் வழிகள் என எதுவாக இருந்தாலும் விவாதிக்கலாம். இது ஒரு தொடக்கமே, சிறு துளியாக நாங்கள் தொடங்குகிறோம் அதை வெள்ளமாக மாற்ற வேண்டியது நீங்கள்தான்.

2 ஜி ஊழல், மின் வெட்டு, விலைவாசி உயர்வு, குண்டும் குழியுமான‌ சாலை எனச் சமுதாயப் பிரச்சனை எதுவாயினும், கிராம‌மோ (அ) நகரமோ உங்கள் பிரச்சனையோ, பொதுப்பிரச்சனையோ (அ) அரசாங்கத்தில் சந்திக்க நேரிடும் இடர்பாடுகளோ எதுவாயினும், அதனை ஒரு கட்டுரையாக (அ) ஒரு தொகுப்பாக,  ஆங்கிலத்திலோ அ தமிழிலோ, புகைப்படத்துடனோ தட்டச்சு செய்து நம் சமுதாயம் என்ற தலைப்பில் எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

சமுதாய பிரச்சனைகளுக்காக ஒன்று பட்டு குரல் கொடுப்போம் 


தமிழ் டைடிங்ஸின் ஆசிரியரின் அனுமதிக்கு பிறகு உடனே இந்த வலைப்பூவில் உங்கள் பெயருடன் பிரசுரிக்க (அ) வெளியிடப்படும் . (பிரச்சனைகளை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பினால் அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.)

மின்னஞ்சல் முகவரி:  tamiltidings@gmail.com

பெண்களுக்கு உண்மையாக பிடித்தது என்ன ?


பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள்  நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள்  வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.


6. கட்டுப்பாடு:  உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை:  விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

3. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

7. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

9. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.


21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக்கிறது, “டிவி’ யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

நன்றி - ஆர் சௌந்தர ராஜன் - பெங்களுரு 

பில்லா 2 வில் குத்தாட்டம் போடும் அஜித்


அஜித் தனது அடுத்த படமான பில்லா 2வில் நடித்துக் கொண்டிருக்கிறார், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து முடிந்துள்ளது. படத்தை சக்ரி டோலட்டி இயக்குகிறார். இதில் ஒரு குத்து பாடல் அமைந்துள்ளது, அதற்கு இசை அமைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.

அந்த குத்து பாடலுக்கு மீனாக்ஷி தீக்ஷித்தை அணுகியுள்ளனர்,  சூப்பர் ஹிட்டான தெலுங்கு டூக்குடு படத்தில் மஹேஷ் பாபுவுடன் மீனாக்ஷி ஆடியுள்ளார். அதனால் அவருக்கு இந்த படத்திலும் ஆடும் வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பில்லா படத்தில் நயன்தாராவும், நமீதாவும் கவர்ச்சியில் கலக்கியிருந்தனர், பில்லா 2 வில் பார்வதி ஓமனக்குட்டன் மற்றும் மீனாக்ஷி கவர்ச்சியில் கலக்க உள்ளனர்.

கமல்ஹாசனுடன் நடனமாடிய விஜய்


பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாதவர் விஜய், நெருக்கமானவர்களின் நிகழ்சிகளில் மட்டுமே கலந்து கொள்வார். அப்படியே கலந்து கொண்டாலும் அதிகம் பேசாமல் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதவர். ஆனால் உலகநாயகன் அழைத்தால் மறுக்க முடியுமா? அதோடு நில்லாமல் அவருடன் நடனமும் ஆடியுள்ளார் விஜய். 

கமல்ஹாசன் 80களிலும் 90களிலும் தனது  ஆட்டத்திற்கு பெயர் போனவர், அந்த நேரத்தில் அவரது ஆட்டம் எல்லோராலும் ரசிக்கப்பட்டது.  இன்று ஆடல் என்றால் அதற்கு தனிப் பெயர் இளைய தளபதி விஜய்க்கு உண்டு. 

கமலும் விஜய்யும் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர், ஆனால் கமலுக்கோ விஜய்யின் ஆட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அதனால் கமல் தனது பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார், அவருக்கு நெருங்கியவர்களையும் நண்பர்களையும் மட்டுமே அழைத்திருந்தார். அதில் விஜய்யை ஆட அழைத்தார் உலக நாயகன். ஆச்சரியத்துடன் மறுப்பு தெரிவிக்க முடியாத விஜய் அவருடன் ஆடினார். உலக நாயகனின் பிறந்த நாள்களில் மறக்க முடியாததாக இதுவும் அமைந்துவிட்டது.


விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் - துப்பாக்கி


வேலாயுதம் பெரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார் விஜய், தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார்.  பிரம்மாண்ட தயாரிப்பாளரான‌ கலைப்புலி தானுவின் தயாரிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த படத்தினை தொடங்கவிருக்கிறார். முதற்கட்டமாக திருசெந்தூரில் படம் தொடங்கவிருக்கிறது.

விஜய்யின் அடுத்த படமான நண்பன் பொங்கலுக்கு வருகிறது, அடுத்த மாதம் படத்தின் பாடல்கள் வெளிவருகிறது. ஷங்கருடனான இந்த கூட்டணி அவரின் வெற்றியை உறுதிபடுத்தியுள்ளதால், மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் வரிசையில் விஜய் இருப்பது அவரின் வெற்றி வாய்பினை அதிகப்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படம் ஆக்ஷன் மிகுந்த காதல் படமாக உருவாக உள்ளது, இந்த கூட்டணி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கதாநாயகியாக  காஜல் அகர்வால் நடிக்கலாம்  எனக் கிசுகிசுக்கபடுகிறது. இசை ஹாரிஸ் ஜெயராஜும், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவனும் செய்வார்கள் என்று தெரிகிறது. படத்திற்கான புகைப்பட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

சென்னையில் ஒரே பி.பி.ஓ (BPO) நிறுவனத்தின் 4 நிர்வாகிகள் கைது


செவ்வாய்கிழமை அன்று சென்னை போலீசார் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 4 மூத்த நிர்வாகிகளை கைது செய்தனர். அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் செய்த புகாரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஈக்காடு தாங்கல் பகுதியை சேர்ந்த NxtGIPO Technologies எனும் நிறுவனம், கடந்த இரு மாதங்களாக அங்கு வேலை செய்யும் 600க்கும் அதிகமானவர்களுக்கு சம்பளம் கொடுக்காததால் புகார் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் தலைமை அலுவலகத்தினை கொண்டுள்ள நிறுவனம், ரூ 23000 சம்பளம் தருவதாக கூறியுள்ளது, பி.டெக் படித்த ஒருவர் கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய் செலவு செய்து வேலைக்கு சேர்ந்துள்ளார், இரண்டு மாதங்களாக நிறுவனம் சம்பளம் கொடுக்க தவறியதால் புகார் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வேறு எந்த புகார்களும் வரவில்லை என்றும், ஒருவர் கொடுத்த புகாரின் பெயரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசனை அழைத்தார் அப்துல்கலாம்


கடந்த 7 ஆம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடினார், அன்று தனது ரசிகர்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று கோரினார். அன்று அப்துல் கலாம் அவர்கள் கமல்ஹாசனுக்கு தொலைபேசி மூலம் வாழ்துக்களை தெரிவித்துள்ளார். அவரது மேலும் இனி வரும் காலங்களில் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.

கலாமின் வாழ்த்து கமலை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்ட ஒருவர் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தால் மகிழ்ச்சிதானே.

ஒன்றாக நடிக்கும் ரஜினிகாந்தும் ஆமிர்கானும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  அதிகமாக பாலிவுட்டோடு நெருக்கமாகி வருகிறார், ரோபோ (எந்திரன்) திரைப்படம் வெளியானது முதல், ரஜினியின் பாலிவுட் பிரவேசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ரா ஒன் படத்திலும் ஷாருக்கானுடன் சிறு காட்சியில் நடித்தார். அடுத்து ஆமிர்கானுடன் ஒன்றாக நடிக்க விருக்கிறார்.

ரஜினி ஆமிர்கான் இணைந்து நடிப்பது திரைப்படத்தில் அல்ல விளம்பரத்திற்காக,  குழந்தைகளின் நலத்திற்காக எடுக்கப்படும் ஒரு விழிப்புணர்வு விளம்பரத்தில் இருவரும் இணைகின்றனர். ஊட்டச்சத்துக்குறைவு காரணமாக வரும் விளைவுகளை அதில் கூறுகின்றனர்.

சச்சின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிரிக்கெட் உலகில் அதிக ரன்களை குவித்தவர், அதிக டெஸ்ட் சதங்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 99வது சதத்தை அடித்த சச்சின் அடுத்து வரும் பேதட்டிகளில் 100வது சதமடிப்பார் என்று ரசிகர்கள் இடையே எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் அதன்பின் சச்சின் கலந்து கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை.

மொத்தம் கலந்து கொண்ட 12 போட்டிகளில் 431 ரன்களை மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற போது அந்த சாதனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தொடர் தோல்விகளோடு நாடு திரும்பியது தான் மிச்சம்.

இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காயம் காரணமாக சச்சின் எந்த போட்டிகளில் கலந்து கெதள்ள முடியவில்லை. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்தியா அணியின் சகவீரர்கள் கூட சோர்ந்து போய்விட்டனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவு அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள சச்சின் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வழக்கமான முகபாவனையில் அணியின் சகவீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். எந்த மன அழுத்தமுமின்றி காணப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
(டிஎன்எஸ்)


சச்சின் சதம் அடிக்க வாழ்த்துக்கள்

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content