இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உலக நாடுகளில் இசைப்பயணம் மேற்கொண்டு மேடை இசை கச்சேரிகள் நடத்தவிருக்கிறார். இது குறித்து ஹாரீஸ் ஜெயராஜ் கூறியதாவது:-
நான் இசையமைப்பாளராகி சுமார் 10 வருடங்கள் ஆகி விட்டது. முதன் முதலில் கவுதம்மேனன் தான் என்னை அறிமுகப்படுத்தினார். மேடை இசை நிகழ்ச்சிகளை நடத்தும்படி ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தன. அதை ஏற்று நான் உலக இசைப்பயணம் செல்கிறேன்.
முதல் இசை நிகழ்ச்சி சென்னை மாயாஜாலில் அடுத்த மாதம் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும். கோவையில் அக்டோபர் 16-ந்தேதியும் ஐதராபாத்தில் 22-ந்தேதியும், துபாயில் நவம்பர் 18-ந்தேதியும், மலேசியாவில் டிசம்பர் 3-ந்தேதியும் நடைபெறும்.
3டி தொழில் நுட்பத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் இடம் பெறும். பிரபல பாடகர்களான ஹரிகரன், கார்த்திக், திப்பு, கிரிஷ், ஹரிணி, ஆண்ட்ரியா, சின்மயி, பென்னிதயாள், நரேஷ் அய்யர், ஹரீஸ் ராக வேந்திரா உள்பட 17 பேர் மேடையில் தோன்றி பாடுவார்கள்.
இயக்குனர் விஜய் மேற்பார் வையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடக்கின்றன.
டெக்பிரண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உலக தரத்தில் புது அனுபவமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment