விஷமம் நிறைந்தவர் அமைச்சர் பா.சிதம்பரம் - அன்னா ஹசாரே சாடல்
இந்தியாவில் புதியதொரு சக்தியாக மாறியுள்ள அன்னா ஹசாரே, அவர் உண்ணாவிரதத்தின் போது கைதானதை பற்றி பேசுகையில், "இப்போதுள்ள இந்திய அரசு சூழ்ச்சி நிறைந்தவர்களையே கொண்டுள்ளது, என்னை டெல்லியில் உண்ணாவிரதத்தை தொடர விடவில்லை. ஜெ.பி.பூங்காவில் அனுமதி கொடுத்தபோதிலும் நிறைய கட்டளைகளை விதித்தது." என்றும் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தை விஷமம் நிறைந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் மராத்தியில் 'கோட்சல்' என்று குறிப்பிட்டுள்ளார். மராத்தியில் கோட்சல் என்றால் விஷமம், நேர்மையற்ற என்று பொருள். பத்திரிக்கையாளர்கள் அவரை சந்திக்கையில் அதை விளக்குமாறு கேட்டபோது, "அவரை 'கோட்சல்' என்று ஏன் சொல்கிறேன் என்றால், பல தருணங்களில் அவர் பொய் கூறியுள்ளார்." என்று அன்னா ஹசாரே கூறினார்.
டெல்லி போலீசார் அவரை வீட்டில் இருந்த நேரத்தில் கைது செய்ததன் காரணத்தை கேட்டபோது, மக்களின் அமைதியை கெடுப்பதாகவும், மேலிடத்தில் இருந்து தங்களுக்கு உத்தரவு வந்ததது என்று போலீசார் கூறியதாகவும், பின்பு இரண்டு மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார், "வீட்டில் இருக்கும் நான் எப்படி மக்கள் அமைதியை கெடுக்க முடியும்?" என்று கேள்வியும் எழுப்பினார்.

0 comments:
Post a Comment