தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

அங்காடி தெரு வசந்த பாலனின் 'அரவான்' படங்களுடன்

அங்காடி தெரு படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கும் படம் அரவான். ஈரம் படப் புகழ் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார், பேராண்மை படத்தில் நடித்த தன்ஷிகா நாயகியாக நடிக்கிறார். பசுபதி மற்றும் மலையாள நடிகை அர்சனாகவி முக்கியமான கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். பிண்ணனி பாடகர் கார்த்திக் இசை அமைக்கிறார். சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் எனும் நாவலில் இருந்து தழுவப்பட்டுள்ளது. மதுரையின் பழங்காலத்தை கொண்டு இந்த நாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆதி 'வரிபுலி' எனும் கதாபாத்திரமாக நடிக்கிறார். வசந்த பாலன் இந்த படத்தின் திரைக்கதை எழுத ஒரு வருட காலம் எடுத்துள்ளார். பரத், அஞ்சலி, ஸ்வேதா மேனன் சிறு பாத்திரங்களில் நடிக்கின்றனர். ...

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.140, கியாஸ் சிலிண்டர் ரூ.2000!!!

ஆம்,  பெட்ரோல் (கல்லெண்ணெய்) விலை லிட்டருக்கு ரூ.140க்கும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் (வாயூகலன்/வளிக்கலன்) ஒன்றின் விலை ரூ.2000க்கும் விற்கப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இந்த விலை உயர்வு நிலவி உள்ளது. கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் சாலை மறியல் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியுள்ளது.  நாகா  குகி பழங்குடியினர் நடத்தும் இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  சதார் மலைப்பகுதியை வருவாய் மாவட்டமாக மாற்றக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் என்ஹெச்-39 மற்றும் என்ஹெச்-53 ஆகிய 2 தேசிய நெடுஞ்சாலைகளில்  சாலை மறியல் நடத்துகின்றனர்...

தமிழில் அஜித்துடன் நடிப்பது பெருமையாக உள்ளது - பார்வதி ஒமணகுட்டன்

பில்லா2 படத்திற்கு 2008-ம் ஆண்டு மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்று மிஸ் வேர்ல்டு போட்டியில் இரண்டாவதாக வந்த பார்வதி ஒமணகுட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டது தெரிந்த விஷயமே. இது பற்றி அவரிடம் கேட்டபோது "தமிழில் அதுவும் முஅன்முறையாக அஜித்துடன் நடிப்பது பெருமையாக உள்ளது, படத்தின் நாயகியாக நடிப்பதில் சந்தோஷப்படுகிறேன், சீக்கிரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன்" என்று கூறினார். பில்லா 2 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இப்போது கோவவில் தொடங்கியுள்ளது....

ஆமிர் கான் பார்த்து பாராட்டிய எங்கேயும் எப்போதும்

கஜினியின் ஹிந்தி பதிப்பை தொடர்ந்து ஆமிர்கானும், முருகதாஸும் நெருக்கமாகி விட்டனர். முருகதாஸ் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தை  ஆமிர் கானுக்கு சிறப்பு ஏற்பாடாக காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த ஆமிர், படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குனருக்கும் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பாராட்டினை தெரிவிதுள்ளார். அடுத்து 7ஆம் அறிவு படத்தினையும் எதிர்பார்ப்பதாக தெரிவிதுள்ளார்.ஆமிர் ஹிந்தியில் எங்கேயும் எப்போதும் படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தை வைத்திருப்பதாக கூறுகின்றனர்...

சிம்புவுடன் சென்னையில் மல்லிகா ஷெராவத்

சிம்புவுடன் ஆட சென்னைக்கு வந்துள்ளார் மல்லிகா ஷெராவத், சிம்புவின் ஓஸ்தி படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட மல்லிகா ஷெராவத் ஒப்பந்தமாகியுள்ளார், அதற்காக அவை சென்னை வந்து தங்கியுள்ளார். இப்பாடலுக்கு நடனம் அமைப்பது ஷோபி, நேற்று முதல் பாட்டிற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று முதல் சிம்புவும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். தமண் இந்த குத்துப் பாட்டிற்கு இரண்டு நாள் முன்பு இசை அமைத்துள்ளார். இதை டி.ராஜேந்தர் பாடியிருப்பதாக கூறுகின்றனர். பெண் பாடகி யார் என்று சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இந்த ஒரு பாடலுக்கு சில கோடிகள் செலவு செய்துள்ளதாக சொல்கின்றனர். பார்த்தால் தான் தெரியும்...

ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியை மாற்றிய மழை

சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ், முதலில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இப்போது சென்னையில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால், இதன் தேதி மாற்றி வைக்கப்படுள்ளது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழு வானிலை மாற்றங்கள் நிகழ்ச்சிக்கு சாதாகமாக இல்லை எனக் கருதி அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர். நுழைவுச் சீட்டு (டிக்கெட்) வாங்கியவர்கள் அதை 8ஆம் தேதிக்கு உபயோகப்படுத்தலாம். மாயாஜாலில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7 மணிக்கு நடைபெறும் என்று கூறியுள்ளனர். அடுத்து கோயம்புத்தூரில் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளனர். உண்மையாகவே...

சன் நெட்வொர்கிலிருந்து சக்சேனா விலகல்

சன் குழுமத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன் கலாநிதி மாறனின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படும் ஹன்ஸ்ராஜ் சக்சேனா  விலகிவிட்டதாக அவரது வழக்கறிஞர் செந்தில்குமார் தெரிவித்தார். இந்த நிலையில், சக்சேனா   சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார். சக்சேனா சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்தவர். இவர் பல்வேறு வழக்குகளில் சிக்கி இரண்டரை மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 14ஆம் தேதிதான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் 16 வழக்குகளை சந்திப்பதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்...

அஜித்தின் அடுத்த இயக்குனர்? விஷ்ணுவர்தன்!!!

பில்லா 2 படத்திற்கு இயக்குனராக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது விஷ்ணுவர்தன்தான், அது நடக்காமல் போனது. மீண்டும் இவர்களது கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், இயக்குனர் யார் எனும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தற்போது பில்லா2 படப்பிடிப்பில் இருக்கும் அஜித், அப்படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தின் அறிவிப்பை கொடுப்பார் என்று ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். தற்போது விஷ்ணுவர்தனும் பவன் கல்யாணை வைத்து இயக்கிவரும் தெலுங்கு படத்திற்கு பிறகுதான் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பார் எனத் தெரிகிறது, இருந்தும் இவர்களிடையே நடந்துள்ள பேச்சுவார்த்தை, அஜித்தின் அடுத்த படத்திற்கு...

7ஆம் அறிவு டிரைலர்

...

பயப்பட மாட்டேன் தவறை தட்டிக் கேட்பேன் : விஜயகாந்த்

  சென்னை மாநகராட்சி தேமுதிக மேயர் வேட்பாளர்   வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்  மயிலாப்பூரில் நடந்தது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து விஜயகாந்த் பேசியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறோம். இன்னொரு கம்யூனிஸ்டு கட்சியும் எங்களுடன் வர இருக்கிறது. நம்பினோர் கைவிடப்படார். பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி என்கிறீர்கள். கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்றார். இப்போதும் சொல்கிறேன் மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பப்படிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் கூட்டணி...

தமிழ்நாடு பள்ளித் தேர்வுகளில் இனி மதிப்பெண் இல்லை!

பள்ளித் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு முறைக்குப் பதிலாக மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. வரும் கல்வியாண்டு (2012-13) முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இனி மதிப்பெண் போடும் முறைக்குப் பதிலாக ஏ, பி, சி, டி, இ என கிரேடு வழங்க முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்புகளுககு புதிய கல்விமுறையை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு 2013-14-ஆம் ஆண்டுகளில் இப்புதிய முறை விரிவுபடுத்தப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு...

போட்டியில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ்

இந்த தீபாவளியில் எந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் ? கோலிவுட்டின் முன்னனி நட்சத்திரங்கள் ஒன்றாக போட்டியிட்டு பல நாட்கள் ஆகி விட்டது, இப்போது முன்னனி நட்சத்திரங்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இந்த தீபாவளிக்கு இவர்களது படங்கள் ஒன்றாக வெளிவர உள்ளன, விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் ஏழாம் அறிவு, சிம்புவின் ஒஸ்தி, தனுஷின் மயக்கம் என்ன நீண்ட நாட்களுக்கு பிறகு தீபாவளி பண்டிகைக்கு, அனைத்து தரப்பு நடிகர்களின் படங்களும் வெளிவருகிறது...

ஒரே நாளில் 66 வேட்பு மனுக்கள்

தமிழ்நாட்டில் அக்டோ பர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.முதல் கட்டமாக, திருச்சி தவிர சென்னை உள்பட 9 மாநகராட்சிகள், 60 நகரசபைகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்டடீபர் 17-ந் தேதி அன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 2-வது கட்டமாக மீதமுள்ள 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 19-ந் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.இவை தவிர தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 12 ஆயிரத்து 620 ஊராட்சிகளுக்கும் இந்த இரு நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கண்ட உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்த தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.நடைபெறவுள்ள இந்த...

21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்

1.  குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மது அருந்துவதைக் குறைப்பதற்கு உங்களுடைய சொந்தக்காரணங்கள் யாவை? முதலில் உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். மது அருந்துவதை விட்டொழிக்க வேண்டும் என்ற உங்கள் இலக்கை அடைய அது ஒரு வழிகாட்டியாக அமையும். உங்கள் குறிக்கோள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது மது அருந்த வேண்டியிருக்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருத்தலாகவோ, மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுதலாகவோ, அல்லது மது அருந்துவதை ஒரேயடியாக விட்டொழிப்பதாகவோ இருக்கலாம். ஆனால் உங்களுக்காக மட்டுமே நீங்கள் மது அருந்துவதை விடமுயற்சி செய்கிறீர்கள் என்பதில் மட்டும் உறுதியாக நில்லுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் முயற்சியில் வெல்வது கடினம். 2.  பிறகு,...

மது அருந்துபவர்களுக்கு எச்சரிக்கை!!!

மது அருந்துவது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனென்றால் நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும். ஈரல் பதிப்பு மூன்று கட்டங்களின் ஊடாக நடைபெறுகிறது. ஆரம்பத்தில் கொழுப்புப் படித்தல் (fatty change) என்ற பாதிப்பும் பிறகு ஈரல் அழர்ச்சி (hepatitis)என்ற பாதிப்பும் இறுதியாக சிரோசிஸ் (cirrhosis)என்ற வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது இங்கே முதல் இரண்டும் அதாவது கொழுப்புப் படித்தல் மற்றும் ஈரல் அழர்ச்சி என்பவை இருக்கும் நிலையில் ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் அவரின் ஈரல் பழைய நிலையை அடைந்து சுகமாகலாம். ஆனால் அது சிரோசிஸ்...

சென்னையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை

சென்னையில் யுவன் ஷங்கர் ராஜாவை அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். விஜய் டிவியில் அதை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாகவே அறிவித்தபடி இசை நிகழ்ச்சி நடக்கிறது. மாயாஜாலில் முப்பரிமான (3D) அனுபவத்துடன் 270 டிகிரி பரிமான பார்வை வசதியுடன் கூடிய மேடை அமைக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 2ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது, சில உலக சாதனைகளை செய்ய திட்டமிட்டுள்ளார் ஹாரிஸ். மாயஜாலிலும், அதன் இணையதளத்திலும் நுழைவுச் சீட்டு கிடைக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாக திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறத...

நன்றி சொன்ன அஜித்குமார்

அஜித்தின் 50வது படமானா மங்காத்தா, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, அஜித்தின் 25வது படமான அமர்க்களம் வெற்றி பெற்றதை போல், இதுவும் வெற்றிப் பெற்றுள்ளது, அஜித்திடம் இது பற்றி கேட்ட போது, "ரசிகர்களுக்கும் மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனக்கு மட்டுமே கிடைத்த வெற்றி அல்ல இது, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, வைபவ், ப்ரேம்ஜி, அஸ்வின், மகந்த், ஒளிப்பதிவாளர் ஷக்தி மற்றும் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி. இவர்கள் எல்லோரும் என்னை தோலில் சுமந்து படத்தை வெற்றி பெற செய்துள்ளனர். ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கும் எனது நன்றி, கதையை  கூட முழுவதுமாய் கேட்காமல் என்னோடு நடித்தார். முதல்வர் ஜெயலலிதாவிற்கும் எனது நன்றியை...

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் - திருமாவளவன்

திமுக., அதிமுக., அல்லாத மூன்றாவது அணி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சியபோது இதனை தெ‌ரி‌‌வி‌த்த அவ‌ர், பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியக் கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும் எ‌ன்றா‌ர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அ.தி.மு.க. நடந்து கொண்ட விதம் காரணமாக ம.தி.மு.க. என்ற ஒரு அரசியல் கட்சி தேர்தலையே சந்திக்க இயலாத ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்து வருகிறது. இது கூட்டணியில் உள்ள கட்சிகளை...

ஐஐடி-யில் புதிய இயக்குனர்

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி., இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தி பொறுப்பேற்றார். சர்மா தலைமையிலான தேர்வுக் குழு, ராமமூர்த்தியை தேர்வு செய்தது. இதற்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்து உத்தரவு வெளியிட்டார். சென்னை ஐ.ஐ.டி., இயக்குனராக இருந்த ஆனந்த், கடந்த ஜுலையில் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ராமமூர்த்தி புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் ராமமூர்த்தி, சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தவர். இங்கு, 1980ல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறையில் பி.டெக்., பட்டம் பெற்றார். பின், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., பட்டங்களை பெற்றார். சிறிது காலம் அமெரிக்காவில் பணிபுரிந்த அவர், 1986ல் சென்னை...

சென்னை சூப்பர் கிங்க்ஸ் மும்பை இண்டியன்ஸ் மோதும் சாம்பியன்ஸ் லீக்

சாம்பியன்ஸ் லீக் போட்டியின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் விளையாடுகின்றன.  இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (செப்.24) நடைபெறுகிறது. மும்பை அணியில் காயம் காரணமாக சச்சின் விலகியுள்ளார். இதேபோல் ரோஹித் சர்மா, சூர்யகுமார், முனாப் படேல், குல்கர்னி ஆகியோரும் இடம்பெறவில்லை. சச்சின் இடம்பெறாததால் ஹர்பஜன் தலைமையில் மும்பை அணி களம் காண்கிறது. அதே சமயம் நடப்புச் சாம்பியனும், ஐபிஎல் சாம்பியனுமான தோனி தலைமையிலான சென்னை அணியில், டிம் செளதி மட்டும் காயம் காரணமாக விலகியுள்ளார். மற்றபடி பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. போட்டி சென்னையில் நடைபெறுவதால் சூப்பர் கிங்ஸன்க்கு அது கூடுதல் பலம். சென்னையில் நடைபெற்ற எந்த ஆட்டத்திலும்...

ஈ.சி ரீசார்ஜில் அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள்

வாடிக்கையாளர்கள் செய்யும், 'ரீசார்ஜ்' தொகைக்கு அதிகமாக, மொபைல்போன் சில்லரை வியாபாரிகள், கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மொபைல்போன் வாடிக்கையாளர்களில், பெரும்பாலோர், பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்களின், 'ப்ரீபெய்டு' சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 'ஈசி டாப்-அப்' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியை, மொபைல்போன் சேவை நிறுவனங்கள், தங்களின் சில்லரை வியாபாரிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தன. இதற்காக, சில்லரை வியாபாரிகளுக்கு, அந்தந்த சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்கியது. இந்நிலையில், சில்லரை வியாபாரிகளுக்கு வழங்கிய கமிஷன் தொகை,...

ராஜினாமா செய்யத் தயார் ஆகும் அமைச்சர் சிதம்பரம்

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் தன் மீது புகார் கூறப்படுவதால் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் நிதி அமைச்சகத்திடம் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மனது வைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் என ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதம் குறித்த தகவலை சுப்ரமணிய சுவாமி நீதிமன்றத்தில் அளித்துள்ளார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே பிரதமரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சிதம்பரம் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக...

அஜித்தை ராஜா இயக்கவில்லை - ஜெயம் ரவி

அஜித்தை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்திற்கு, யார் இயக்குனர் என்பதில் இப்போதிலிருந்தே அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல்கள் வந்த வண்ணம், இருந்தன. ஜெயம் ரவியின் அண்ணனும், ரீமேக் படங்களுக்கும் பெயர் போன இயக்குனர் ராஜா, அல்லது இயக்குனர் ஷங்கர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று கூறப்பட்டது.ஆனால், ஜெயம் ரவி தனது ட்விட்டரில் ராஜா அஜித் படத்தை இயக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் தரப்பிலும், ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்திற்கு தேதிகள் மட்டுமே கொடுத்திருப்பதாகவும், வேறு எதுவும் உறுதி செய்யப்படவில்லை எனவும், ஜனவரி மாதம் வரை பில்லா 2 படப்பிடிப்பு இருக்கும் அதுவரை எதுவும் உறுதி படுத்த நேரம் இருக்கப்போவதில்லை எனக் கூறப்படுகிற...

தி.மு.க.விலிருந்து விலகிய நடிகர்

ஒவ்வொரு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பல கிராமம் நகரம் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வந்தும் கட்சியில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை, இதனால் மன வருத்தம் அடைந்து தி.மு.க. கட்சியிலிருந்து விலகுவதாக நடிகர் தியாகு தெரிவித்துள்ளார்.கட்சியில் இல்லாதவர்கள் கூட திமுக தலைவரை துதி பாடியே பல்வேறு பதவிகளையும், வசதி வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பதவி பெற்றுள்ளனர். ஆனால் 33 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும் எனக்கு எந்த அங்கீகாரமும் கட்சியில் கிடைக்கவில்லை.இதிலிருந்து நீங்கள் என்னை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள் என்பது புரிந்து விட்டது. இதுவரை கட்சியில் இருந்தது தவறு என்று புரிந்து கொண்டுள்ளேன். எனவே கடந்த 19ந்...

கே.என்.நேருவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும் மு.க.ஸ்டாலின்

நிலப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறிய புகாரில் மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். அக்.4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் கே.என்.நேருவை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், கே என் நேரு சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் நாளை தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் நாளை காலை திருச்சி வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வருகின்றனர். அடுத்த மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. சிறையில் இருந்தபடியே நேரு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால், அதற்கு தேவையான ஆவணங்களை திமுக வக்கீல்...

தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ம.தி.மு.க

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிட இருக்கிறது. இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்தார். மாநகராட்சி மேயர்களுக்கான முதல் பட்டியலை இன்று வெளியிட்டார். அதன்படி சென்னை மேயர் பதவிக்கான வேட்பாளராக நா.மனோகரன், கோவைக்கு- அர்ஜூனராஜ், மதுரைக்கு- பாஸ்கர சேதுபதி, தூத்துக்குடிக்கு - பாத்திமா பாபு உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நடிகர்களும் மனிதர்கள்தான். கேவலப்படுத்த வேண்டாம் ரசிகர்களே

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திறமை உண்டு, அவர்களது தனித்திறமை எல்லோருக்கும் பிடித்து விடுவதில்லை, சில நடிகர்கள் ஈர்க்காமல் போனால் அதற்கு அவரிடம் திறமை இல்லை என்று அர்த்தம் கொள்வது தவறு. ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தால் அவருக்கு போட்டியாக மற்றொரு நடிகரை நினைத்துக் கொண்டு மற்ற நடிகரை இழிவு படுத்துவது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று, அன்று மக்களின் படிப்பறிவு பின் தங்கியே இருந்தது, அப்போது புரியாமல் செய்து விட்டனர் என்று கூறலாம். ஆனால் இன்று படித்தவர்களே இழிவுபடுத்தும் கேவலமான செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர். இன்று பேஸ் புக், ஆர்குட், ட்விட்டர் போன்ற வலைப் பின்னல்களில் பெரிதாக வளர்ந்து வரும் கலாச்சாரம் இது, ஒரு நடிகரை பிடிக்காதவர் அவரை எதிர்ப்பது...

Pages (17)1234567 Next

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

354623

Feeds

rank

Indiblogger Score

tamiltidings.blogspot.com
29/100

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content