கடந்த தி.மு.க ஆட்சியின் போது 3 வருடங்களுக்கு முன்னர் தைத் திங்கள் முதல் நாளை புத்தாண்டாக அறிவித்தது. அந்த சட்டத்தை ரத்து செய்து சித்திரைத் திங்கள் முதல் நாளையே மீண்டும் புத்தாண்டாக அறிவித்து அ.தி.மு.க அரசு. அந்த மசோதாவினை செவ்வாய்க்கிழமை அன்று சட்டமன்றத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் அறிமுகப்படுத்தினார்.
‘தைத் திங்களில் புத்தாண்டு துவங்க எவ்வித ஆதாரமுமில்லை, மாறாக சித்திரையில் தொடங்கவே பல்வேறு ஆதாரங்கள் உண்டு, இந்நிலையில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினை ரத்து செய்ய, பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட விவாதத்திற்குப் பின் மசோதா ஒப்புகொள்ளப்பட்டு புதிய சட்டம் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, 'ஜெயலலிதா ஏட்டிக்குப் போட்டியாக இதை செய்கிறார், தமிழ் புலவர்களின் கோரிக்கையின்படியே தை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. 1921ல் மறைமலை அடிகளார் தலைமையில் 500 புலவர்கள் இது தொடர்பில் கோரிக்கை வைத்திருந்தனர்' என்று கூறியுள்ளார்.
எது எப்படியோ இவர்களுக்கிடையிலும், இவர்களாலும் திண்டாடுவது மக்கள்தான், இவர்களுக்கு என்ன கேடு வரப்போகிறது?
0 comments:
Post a Comment