'மங்காத்தா' தயாநிதி அழகிரியின் கிளவுட் நயன் மூவீஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித், அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, வைபவ் மற்றும் அஞ்சலி நடித்து வெளிவர இருக்கும் அஜித்தின் 50வது படம். இப்படத்தின் வெளியீடு தேதியில் குழப்பம் நீடித்து வந்தது. இப்படத்தின் வெளியீடு (வெளிநாடும் சேர்த்து) உரிமையை அய்யங்கரன் இன்டர் நேஷனல் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் தற்போது அஜித் ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியாக படத்தின் வெளியீடு தேதியினை அறிவித்துள்ளது. படம் இம்மாதம் இறுதியில் 31ம் (ஆகஸ்ட்) தேதி வெளியாகும் என்று அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment