இந்தியாவின் தோல்வி

'கண்டிப்பாக எந்த ஒரு தொடருக்கு முன்னும் பயிற்சி ஆட்டங்கள் இருப்பது நல்லது, அது மேலும் சிறப்பாக ஆட உதவியாக இருக்கும். யார் முதல் இடத்தை பிடிக்கப் போகிறார்கள் என்று தீர்மானிக்கும் தொடர், விட்டால் இங்கிலாந்து அதை கைப்பற்றிவிடும். ஓய்வு இல்லை, அதிக கிரிக்கெட் என்ற சாக்குகளைக் கூறக்கூடாது. சரியாக விளையாடவில்லை, அதனால் தோல்வி ஏற்பட்டது, அதை நேர்மையாக ஒப்புக் கொள்ளவேண்டும், அதுதான் சரியான அணுகுமுறை. ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் பயணம் மேற்கொள்ளும் போது 3 துவக்க வீரர்களை அழைத்துச் செல்லவேண்டும். சேவாக்தான் காயமடைந்து விட்டார், வாசிம் ஜாஃபரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? மேலும் இந்திய நடுநிலை வீரர்கள் இங்கிலாந்து வீரர்களை போல் விளையாடவில்லை. ஹர்பஜன் சிங்கும் பேட்டிங்கில் சோடை போவதால் அணி பின்னடைவாகிறது. லஷ்மண் 5 அல்லது 6ஆம் இடத்திலேயே இறக்கப்பட வேண்டும் அவ்ர் மேலே எழும்பும் பந்துகளை நன்றாக எதிர்கொள்கிறார் அது பின்னால் சென்று ஆடக்கூடிய அவரது உத்தி. ஆனால் பந்து ஸ்விங் ஆகும்போது அவரால் ஆட முடியவில்லை. தற்போது தோல்வியை தள்ளிவிட்டு வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்துங்கள் , உங்களுக்கு வயது 28 அல்லது 29 அல்லது 30 இருக்கலாம், இந்தியாவுக்காக வாழ்நாள் முழுதும் ஆடப்போவதில்லை. அணியில் நம் இடம் கையை விட்டுப் போய்விட்டால் மீண்டும் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. சச்சின் இன்னும் தொடரில் சரியாக வரவில்லை, டிராவிட் ஒருத்தரே நன்கு விளையடுகிறார்' என கங்குலி கூறியுள்ளார்.


இதில் எந்த தவறும் இல்லை, சிறந்த வீரர்கள் இருப்பினும் சரியான நேரத்தில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், உலக கோப்பையை கைப்பற்றிய இந்தியாவின் மீது நல்ல பார்வை உள்ளது. தனது வெற்றியை எல்லா இடங்களிலும் பதித்தால் தான், அது ஒரு சிறந்த அணியாகும். 1999 ஆம் ஆண்டு கோப்பையை வென்று, அடுத்த 2003 மற்றும் 2007ஆம் ஆண்டும் தொடர்ந்து உலக கோப்பையை கைப்பற்றி பல ஆண்டுகளாக எல்லா அணிகளையும் மிரள வைத்தது ஆஸ்திரேலியா. இப்போது பல நல்ல வீரர்களின் ஒய்வால் சிறிது பலமிழந்து நிற்கிறது. அதனை உதாரணமாக கொண்டு நமக்கு கிடைத்த முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

சிறந்த வீரர்கள் நம் அணியில் உள்ளனர், ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு நல்ல ஆட்டத்தினை வெளிப்படுத்துவது நல்லது. கங்குலி ஓய்விற்க்கு முன் சிறிது காலம் சரியாக விளையாடமல் போனதே அவர் மீது பல விமர்சனங்கள் வந்தன, ஆனால் அணித் தலைவராக இந்தியாவிற்கு அதிகமாக 21 டெஸ்ட் தொடர் வெற்றியினை கொடுத்தது அவரே. அனுபவமுள்ள வீரராக அவர் சொல்லுகிற ஞாயத்தினை இந்திய அணி ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அடுத்து வரவிருக்கும் தொடர்களிலாவது இந்தியா வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content