ஊழலைத் தடுப்பதற்கான முயற்சியாக, ஹசாரேவின் வைத்த 3 முக்கிய கோரிக்கைகளையும் நாடாளுமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது. 12 நாட்களாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அதன் முடிவாக நேற்று இரவு 8 மணியளவில் 3 முக்கிய நிபந்தனைகளையும் அரசு ஏற்கும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் இது ஒரு பெரிய வெற்றியே. நாடாளுமன்றத்தின் இந்த முடிவை அடுத்து, அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் பிரணாப் முகர்ஜி. மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், நாடாளுமன்ற தீர்மானத்தையும், அண்ணாவுக்கு பிரதமர் எழுதிய கடிதத்தையும் நேரடியாக வழங்கினார். அதனால் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.இது தனக்கு கிடைத்த பாதி வெற்றி என ஹசாரே கருத்து தெரிவித்தார். அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் கோஷமிட்டு இந்த முடிவை வரவேற்றார்கள்.
நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர். மற்ற நாட்களில் இல்லாத அளவு கூட்டம் இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகர் ஆமீர்கான் நேற்று ஹசாரேவைச் சந்தித்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். அடுத்ததாக மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஹஸாரே சிகிச்சை எடுப்பார் எனத் தெரிகிறது.

0 comments:
Post a Comment