சென்னை தினம் -ஆகஸ்ட் 22 - சென்னைக்கு வயது 372


சென்னையை கண்டுபிடித்து 372 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆம்,  இதே ஆகஸ்ட் மாதம் 22 ஆம் நாள் 1939 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் வணிகம் செய்வதற்காக சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயக்கரிடமிருந்து ஒரு சிறிய நிலப்பகுதியை வாங்கினார்கள். அதன் பிறகே அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. பிரான்சிஸ் டே (Francis Day) அவருடைய துபாஷி (இரு மொழி பேசுபவர்) மற்றும் அவர்களுடைய மேலதிகாரி அண்ட்ரூ கோகன் (Andrew Cogan) நாயக்கர்களிடம் செய்த ஒப்பந்தம் இதே தேதியில் நடந்ததால் அந்த நாள் சென்னை தினமாக (MADRAS DAY) இன்று (August 22) கொண்டாடப்படுகிறது.

அதன் பிறகே கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் வந்தன, கிராமப் பகுதிகள்பழைய, புதிய சிறு நகரங்கள்  இணைக்கப் பட்டன. இன்று சென்னை மாபெரும் வளர்ச்சி அடைந்து மாநகரமாக உருவாகியுள்ளது.

சென்னை கொண்டாட்டம் (MADRAS WEEK) என இதனை ஒவ்வொரு வருடமும் சென்னை மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆகஸ்ட் 21 முதல்  - 28, 2011 வரை  இது நடைபெறுகிறது.

கொண்டாட்டத்தில் இணைய மேலும் விவரங்களுக்கு http://themadrasday.in வலைதளத்திற்கு செல்லவும்.

சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content