ரஜினிகாந்த் - எனும் மாயச் சொல்

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி இரவு 11-45 மணிக்கு ரானோஜிராவ், ராம்பாய் என்ற தம்பதிக்கு பிறந்தார். இவருக்கு சத்தியநாராயணராவ், நாகேஸ்வரராவ் என்ற மூத்த சகோதரர்களும், அஸ்வத் பாலுபாய் என்ற மூத்த சகோதரியும் உள்ளனர். ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தாலும், தாய் மொழி மராத்தி ஆகும்.

கர்நாடகாவில் நடத்துனராக பணியற்றிய ரஜினி, நண்பர்கள் உதவியுடன் திரைப்பட நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சி பெற்றார். பின்பு சினிமா வாய்ப்பு தேடி அலையும் பொழுது, இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை அறிமுகம் செய்தார். பின்பு கமலுடன் சில படங்கள் நடித்துக் கொண்டிருந்தார்.


அந்த நேரத்தில் ரஜினி தனியாக நடிக்க ஆரம்பித்த பிறகு, எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் இருந்தது. எம்.ஜி.ஆரை பெரியவர்களும் பெண்களும் விரும்பினர், இளைஞர்கள் ரஜினியயும், இளம்பெண்கள் கமலையும் நேசிக்கத் தொடங்கினர். பைரவி என்ற படத்தில்தான் ரஜினிக்கு முதன்முதலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தினார் கலைப்புலி தாணு. ஆனால் ரஜினிக்கு பெரிய வெற்றிப் படமாகவும், ரசிகர்களை அதிகப்படுத்தியதும் பில்லா படம்தான். அதன் பிறகு அவரது அதிவேக வளர்ச்சியினால் தமிழ்த் திரை உலகிற்கே சூப்பர்ஸ்டாராக ஆகிவிட்டார். இன்று இவருக்கு கண்மூடித்தனமான ரசிகர்கள் உள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது இவருக்காக பிரார்த்தணைகளும், வேண்டுதல்களும் நடைபெற்றன. தன் குடும்பத்தாருக்காக செய்தார்களோ இல்லையோ இவரை தன் குடும்பத்தில் ஒருவரை போல எண்ணிச் செய்தார்கள்.ஒரு ரசிகனுக்கும் நடிகருக்கும் பெரிய உறவு இருப்பதில்லை. ரஜினியும் ஒரு நடிகரே, அவர் தன் நடிப்பிற்க்காக கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார். நாம் பணம் கொடுத்து அவரது படங்களை பார்க்கிறோம். இதைத் தவிர இதுவரை வேறு எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் அவருக்குக்காக எதையும் செய்யும் ரசிகர்கள் இருக்கின்றனர்.




ரஜினிகாந்த் தனது வாழ்வில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எவ்வளவோ எதிர்ப்புகள் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார், வளர்ந்து வந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த லதா எனும் நடிகையுடன் ரஜினிக்கு பழக்கம் என செய்திகள் வரத்தொடங்கின. அதன் பின் எம்.ஜி.ஆர் ரஜினி மீது கோவமாக இருந்ததாகவும் அதனை சரி செய்ய ரஜினியை மெண்டல் என்று சித்தரித்ததாகவும் லதா எனும் வேறு பெண்ணை உடனே கல்யாணம் செய்ததாவும் சொல்வர். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த தலைமுறையினர், அவரை பிடிக்காமல் மெண்டல் எனக் கூறுவதுண்டு. அடுத்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட சிறு அதிருப்தி அனைவரும் அறிவதே, அதனால் அவர் அ.தி.மு.க வெற்றிப் பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என தி.மு.கவிற்கு ஆதரவு தெரிவித்தார். பின்பு தனது மகள் கல்யாணத்திற்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் எனக் கூறியபோது, மக்களின் விமர்சனங்கள் இவர் மீது எழுந்தன. ' போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல்,  ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!' என்றும் 'இவரை வாழவைத்ததே தமிழ் ரசிகர்கள் தான் அவர்களை எப்படி வரவேண்டாம் எனச் சொல்லலாம்? ரசிகர்களை தனியாக அழைத்திருக்க வேண்டாமா?' என்றும் எதிர்ப்பினை காட்டினர்.




கடந்த தேர்தலில் அ.தி.மு.கவிற்கு  வாக்களித்ததாக ஊடகங்கள் காட்டிய காணொளி, பின்னர் தமிழகத்தில் வறுமையும் ஊழலும் பெருகி விட்டது என்று ரஜினி கருத்து தெரிவித்தது, அவரை பச்சோந்தியென்றும், காற்று வீசும் பக்கம் போகிறார் என்றும் வலைத்தளங்களில் விமர்சித்தனர். இவரை பிடிக்காதவர்களோ 'இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? நெல்சன் மண்டேலா போல் கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவரா? ஏன் இவர் பின்னால் ஒன்றுமே இல்லாமல் ஓட வேண்டும்?' என இன்றும் எதிர்க்கின்றனர்.



ஆனால்,  இவ்வளவு பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் மீறி  ரசிகர்களுக்கு ஆன்மீகவாதியாக அரசியல் சக்தியாக என்று பலவிதத் தோற்றங்களாகத் திகழ்கிறார்.அவரது உடல்நிலைக்காக வேண்டியது கோடிக் கணக்கான உயிர்கள். ரஜினியின் குறும்பும் ஸ்டைலும் பைத்தியக்காரத்தனமான சேட்டைகளும் நகைச்சுவைகளும் எப்படியோ எல்லோருக்கும் பிடிக்கத்தான் செய்கிறது. எப்படி நடித்தாலும் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் அவரது பண்பான குணத்திற்கு கிடைத்த பரிசுதான். ரசிகர்கள் இன்றும் அவரை நம்புகின்றனர், அவரை முதல்வராக பார்க்க ஒவ்வொரு ரசிகனுக்கும் ஆசை இருந்துகொண்டுதான் இருக்கிறது. அவருக்கென்று தனி செல்வாக்கு இருக்கிறது.


"என்னை இந்த உயரத்தில் தூக்கி வைத்த தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன், அதேபோல தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது" என்று அவர் கூறியுள்ளார். இதுவே சரியான தருணம், ரசிகர்கள் எதிர்பார்ப்பினை அவர் தீர்ப்பாரா? அரசியல் பிரவேசம் செய்வாரா? எல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளது.



எல்லாவற்றையும் தாண்டி உயரத்தில் நின்று கொண்டிருக்கும் ரஜினி இல்லை ரஜினிகாந்த் எல்லோருக்கும் ஒரு மாயச் சொல்தான்!!!

9 comments:

நல்ல பதிவுதான்.. ஆனால் உங்கள் பார்வையில் ரஜினியை பற்றி எழுதி இருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்..Castro Karthi

நன்றி கார்த்தி

உங்கள் பதிவு நன்றாக இருந்தது

நன்றி சரவணன்

ரஜினி மாயச்சொல் அல்ல மாயை சொல்.

நன்றி Real Santhanam Fanz

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content