சும்மா என்றால் என்ன? - அர்த்தம்

சும்மா, சும்மா, சும்மா..!


"ஹலோ! "

"ஹலோ!"

"சித்ராவா? பிஸியா இருக்கீங்களா? சும்மா இருக்கீங்களா?"

"இப்போதான் எல்லா வேலையையும் முடித்து விட்டு வந்து, சும்மா வந்து உட்கார்ந்தேன். என்ன விஷயம்?"

"சும்மா தான் கூப்பிட்டேன். இன்று எனக்கு காய்ச்சல் என்று வேலைக்கு போகவில்லை. சும்மாதான் இருந்தேன். சும்மா இருக்கோமே - சும்மா, யாரையாவது கூப்பிட்டு, சும்மா பேசலாமேன்னு, சும்மா தோணுச்சு."

"நானும் சும்மாதானே இருப்பேன் என்று நினைச்சிட்டீங்க."

"சும்மா சொன்னேன். சும்மா கோபப்படாதீங்க. உங்களை கூப்பிட்டு பேசி நாளாச்சு. சும்மா, அப்படி இப்படினு பிஸியா நாள் எல்லாம் - சும்மா ஜெட் வேகத்துல பறக்குது."

"சும்மா. இதுக்கெல்லாம், சும்மா கோபம் வருமா?"

" நீங்க, சும்மா விளையாடுறீங்கனு தெரியும். "

"உங்க வீட்டுக்காரங்க ஆபீஸ் போயாச்சா?"

"அவருக்கு என்ன? சும்மா லீவ் போட்டு, நம்ம பக்கத்துல இருந்து, சும்மா கவனிக்க முடியுமா? வேலைக்கு போயாச்சு. ஆனால், ஒரு வாட்டியாவது, சும்மா ஒரு போன் பண்ணி, சும்மாவாச்சும் நான் எப்படி இருக்கேன் என்று சும்மா கேட்டு இருக்கலாம்."

"அவர் ஆபீஸ்ல் சும்மா இருந்தா, சும்மா கூப்பிடாம இருப்பாரா?"

"தெரியுது. ஆனாலும் அவரை சும்மா தேடுது."

"ரொம்ப கஷ்டமா இருக்கா?"

"இல்ல. சும்மா வெறும் காய்ச்சல்தான். இப்போதான் ஊருக்கு போன் செய்து, என் அம்மாவிடம் சும்மா பேசினேன்."

"அம்மா, எப்படி இருக்காங்க?"

"சும்மா, அதை இதை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டே இருக்காங்க."

"உங்க தாத்தா, எப்படி இருக்காங்க?"

"எப்போ பார்த்தாலும் சும்மா தலை வலிக்குது கால் வலிக்குது அப்படிங்கறார். டாக்டர், தாத்தாவுக்கு ஒண்ணும் இல்ல. வயசாச்சுல. சும்மா அப்படிதான் வலிக்கும்னுட்டார்."

"உங்க அப்பா, எப்படி இருக்காங்க?"

"retirement க்கு அப்புறம், சும்மா அங்கே இங்கே போய்ட்டு வந்து டைம் பாஸ் பண்றார்."

"உங்க தங்கை?"

"படிச்சு முடிச்சிட்டாள். சும்மாதான் இருக்கிறாள். சும்மா இருக்கிறதுக்கு, சும்மா ஒரு கம்ப்யூட்டர் course ஏதாவது படிக்கலாமேன்னு - சும்மா போய்க்கிட்டு இருக்கா."

"ஓ. "

"நீங்க அடுத்த மாதம், ஒரு weekend சும்மா இருந்தீங்கனா, சும்மா இந்த பக்கம் - எங்க வீட்டுக்கு, சும்மா வாங்களேன்."

"எதுவும் விசேஷமா?"

"இல்லை. சும்மாதான். சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு. சும்மா விசிட் பண்ணா நல்லா இருக்கும்."

"பார்க்கலாம்."

"சும்மா வாங்க. அப்புறம் சும்மாதான் சொன்னேன் என்று வராமா இருக்காதீங்க."

"அப்புறம் போன் பண்றேன்."

"கண்டிப்பா வரணும். வந்தா, சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்."

"சும்மா இருந்தா, சொல்றேன்."

"சும்மா சொல்லாதீங்க. வாங்க."

" ஹா,ஹா,ஹா,ஹா... நான் இப்போ வெளியே போகணும். நான் போனை வைக்கிறேன். நீங்க சும்மாவே இருங்க."

"மனுஷிக்கு காய்ச்சல்னா, சும்மா சும்மா போன் பண்ணி, சும்மா பேசி, சும்மா தொந்தரவு படுத்திக்கிட்டு... கொஞ்சம் சும்மா இருக்க மாட்டாளா, என்று நினைச்சிட்டீங்களா?"

"இல்ல. நல்லா ரெஸ்ட் எடுங்க."

அப்புறம், சும்மா இருக்கும் போது, சும்மா யோசித்து பார்த்தேன். அப்பொழுதுதான் புரிந்தது - அவளது சும்மாவில் ஒளிந்து இருந்த அவளது அன்பும், ஏக்கங்களும், வேதனைகளும், ஆதங்கங்களும், கவலைகளும், ஆசைகளும்.

இது முதலிலேயே தெரியாம போச்சே... தெரிந்து இருந்தால், சும்மா பேசிக்கிட்டு இருக்காமல், ஆதரவாக சும்மா கூட கொஞ்ச நேரம் பேசி இருந்திருப்பேனே...

சும்மா... சும்மா ஒரு வார்த்தைதான் - ஒன்றும் இல்லாத வார்த்தை. ஆனாலும் - சும்மாவுக்கு, எத்தனை ஆழமான அர்த்தங்கள் - தமிழில்!

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content