சென்னையை அச்சுறுத்தும் மலேரியா!

சமீப காலமாக மலேரியா நம் சென்னையை ஆங்காங்கே பிடித்துக் கொண்டு வருகிறது.  இதுவரை மலேரியாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் கணக்கின்படி, 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒரளவு கட்டுக்குள் இருந்த மலேரியா, 2010 ஆம் ஆண்டு 10 சதவீதம் அதிகரித்து விட்டது. அதிலும் தமிழ் நாட்டில் 65 சதவீதம் மலேரியாவின் பாதிப்பு நம் சிங்கார(இந்த வார்த்தையை உபயோகப்படுத்தலாமா?) சென்னையில் தான்.

இன்றும் இது தொடர்வது தான் வருத்ததிற்குறிய விஷயம். பெரும்பாலும் சென்னையில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் எல்லோரும் போவதில்லை, அதனால், இது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில இடங்கள் இன்னும் கவனிப்பற்றே இருக்கிறது. அண்மையில் சென்னை மாநகராட்சியில் நடந்த கூட்டத்தில், மருத்துவ பிரிவில் இருந்து, சௌகார்பேட், வியாசர்பாடி, அகரம் (வடக்கு), பெரியார் நகர், செம்பியம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் மலேரியா இருப்பதாக சிபிஎம் கவுன்சிலர் தேவகி கூறியுள்ளார். ஆனால் உயர் நிலை அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.

'மலேரியா அதிகரித்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை, எங்களுக்கு அப்படி ஒரு நிலை தெரியவந்தால் மக்களிடம் கொசு விரட்டி மருந்துகளையும், கொசு வலையையும் உபயோகப்படுத்த வலியுறுத்துவோம்' என சுகாதார அதிகாரி குகநாதன் தெரிவித்தார்.

சென்னை மலேரியாவின் இருப்பிடமாக திகழ, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடமும் ஒரு காரணம். மலேரியா பரப்பும் கொசுக்கள் தேங்கி நிற்கும் தண்ணீரிலேயே பெருகுகிறது, கழிவு நீர்களில் இருப்பதில்லை.  கட்டுமானப் பணிகள் நடக்கும் கட்டிடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால்தான் அதிகமாகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை புதிதாக கட்டப்படும் இடங்களை, மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு கண்காணித்து வந்தது, ஆனால் அது இப்போது நடப்பதில்லை என்று முன்னால் மக்கள் சுகாதார மைய தலைமை நிர்வாகி டாக்டர் இளங்கோ கூறியுள்ளார். முன்பு போல் எந்த தடுப்பு நடவடிக்கையும் இல்லை, சேரி மற்றும் ஊரக பகுதிகளுக்கு எந்த அதிகாரிகளும் வருவதில்லை என  வியாசர்பாடி மக்கள் கூறுகின்றனர். சென்னையில் மட்டும் இந்த வருடம் மட்டுமே சுமார் 6000 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், தலைவலி, வாந்தியெடுத்தல் ஆகிய அறிகுறிகள் 10 முதல் 15 நாட்களுக்கு தொடரும். மலேரியாவை தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், அரசு அலட்சியமாக நடந்தால் பாதிக்கப்படுவது மக்களே. மாநகராட்சி தன் கடமையை செய்யாமல் மக்களை அவதிக்கு உள்ளாக்கலாமா? இந்த அலட்சியம் சென்னையை இன்னும் பாதிக்கதான் போகிறது.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content