இன்று சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஜெயலலிதா 196 புதிய பஸ்களை வழங்கினார்.
196 புதிய பேருந்துகளில், 106 புதிய பேருந்துகள், 106 புதிய வழித்தடங்களிலும், மீதமுள்ள 90 புதிய பேருந்துகள் ஏற்கனவே உள்ள வழித் தடங்களிலும் இயக்கப்படுகின்றன.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 36 பேருந்துகளும், சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 23 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 56 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 13 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 63 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் 7 புதிய பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு பேருந்தின் சாவிகளை வழங்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழக அரசின் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 196 பேருந்துகளை துவக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக தங்கள் பணியினை செய்ய வேண்டும். தங்களுக்கும் அவர்களை நம்பி பயணம் செய்யும் பயணிகளுக்கும் எந்தவிதமான ஆபத்து இன்றி நல்ல முறையில் பணியாற்ற வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா போக்குவரத்து கழகத்தினர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

1 comments:
Post a Comment