சூர்யா வித்தியாசமான படங்கள் மூலம் தனக்கென்று தனி பாணியை வைத்துள்ளார், அவரது படங்கள் நல்ல வசூல் கொடுத்ததாலும், பெரும் வெற்றியை பெற்றதாலும், ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன. கஜினி, சிங்கம் படங்களை தொடர்ந்து காக்க காக்க படமும் ரீமேக் ஆகிறது. அதில் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பாலிவுட்டிலும் இந்த ரீமேக் படங்கள் நல்ல வசூல் கொடுத்ததால், அவர்களின் பார்வை இங்கு திரும்பியுள்ளது, விஜய்யின் படங்களும் இப்போது ரீமேக் பண்ணப்படுகிறது, விஜய்யின் வசூல் சாதனை புரிந்த போக்கிரியை வாண்டட் என்று ஹிந்தியில் சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது, அதை தொடர்ந்து காவலன் படமும் ரீமேக் ஆகிறது. இதிலும் சல்மான் கான் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வெற்றிப் படங்களான கோ, சிறுத்தை ஆகிய படங்களும் ரீமேக் ஆகின்றன.
சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதால் பாலிவுட்டிலும் இதற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, சூர்யாவின் படங்களை ரீமேக் செய்ய ஆர்வம் காட்டும் பாலிவுட், இப்போது விஜய்யின் படங்களுக்கும் ஆர்வம் காட்டுகிறது.
0 comments:
Post a Comment