வலுவான லோக்பால் மசோதா கோரும் அன்னா ஹசாரேவை இன்று (25/8/2011) வியாழக்கிழமை நடிகர் விஜய் சந்திக்கிறார். அவருடன் சேர்ந்து ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளார். சென்னையில் இருந்து காலை 6.30 மணியளவில் டெல்லி புறப்படும் விஜய், ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளார். டெல்லியில் அவரது ரசிகர்கள் மற்றும் தன்னுடைய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து ராம்லீலா மைதானம் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் ஒருநாள் உண்ணாவிரதத்தில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். தற்போது விஜய் நேரடியாக சென்று உண்ணாவிரதம் இருக்கிறார்.
0 comments:
Post a Comment