விலை உயர்வு - நமக்கு வாய்த்த விதி


நம் அத்தயாவசிய உணவுப் பொருட்கள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை, பால், காய்கறிகள் முதலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிக கஷ்டப்பட்டு சமாளித்து வருகின்றனர், விலை உயர்வை தடுக்கவோ இல்லை கட்டுப்படுத்தவோ நமது மன்மோகன் அரசு எந்த ஒரு சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதில் போதுமான அக்கறையும் காட்டாவில்லை என்பதே உண்மை.

தற்போது நாம் அனுபவிக்கும் விலை உயர்வும் பணவீக்கமும் தானாக நடந்த ஒன்று அல்ல. நமது இந்தியஅரசு தனியார் நிறுவனங்களுக்கு துணைபோனதும், தனியார் மயமாக்கலுக்கு அடிமையானதும் ஒரு முக்கிய காரணமாகும். அதனால்தான் விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் கூட 30 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்திருகிறது மன்மோகன் அரசு. இதன் சலுகையாக பல கோடிகளை, மானியமாக பெருமுதலாலிகளுக்கு கொடுத்திருக்கிறது.

தனிநபர் ஒவ்வொருவரும் 50,000 டன் வரை உணவு தானியத்தை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருப்பதன் மூலம், உணவுப் பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கும், சந்தையில் விலையை ஏற்றுவதற்கும் சட்டப்படி அனுமதி அளித்துள்ளது.இதன் மூலமாக சில்லரை விற்பனையில் நுழைந்துள்ள டாடா, அம்பானி போன்ற பெரிய முதலாளிகள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன. விலை நிர்ணயமும் அவர்கள் கைகளுக்கு கொடுக்கபட்டுள்ளது, அதுவும் சட்டபூர்வமாக.விவசாயிகள் பல ஆண்டுகளாக உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் அமைத்துக் கொடுக்க கோரிக்கை வைத்தும், அரசு அதை மறுத்தும் செய்யாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். கோயம்பேடு காய்கறி பழச்சந்தையில் மட்டும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன்கள் அழுகிக் குப்பையில் கொட்டப்படுகிறது.


அரசு ஆதரவுகள், நியாயவிலை விற்பனை, மானியங்கள் என எதுவும் கொடுக்காமல், பெருமுதலாலிகளே சந்தைகள், உற்பத்தி, விநியோகம் இதனை தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் தொழில், விற்பனை, உற்பத்தி ஆகியவை உலக தரத்திற்க்கு உயரும் என நம்பி நாட்டை அரசே நாட்டை தனியாரிடம் விற்கிறது. இதனை சாதகமாக்கிக் கொண்டு விலையை ஏற்றுகின்றனர் பெருமுதலாலிகள். மேல்தட்டு மக்களின் சந்தையை மட்டும் உயர்த்த நினைக்கும் அரசு மற்றவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏற்றுமதிக்கும், தனியாருக்கும் நமது வருவாயை கொடுத்துவிட்டு அரசு வேடிக்கை பார்க்கிறது.

உற்பத்தி அதிகமாகும் போது அரசே கிடங்குகளில் சேமித்து வைத்து, பற்றாக்குறையின்போது சேமிப்பை உபயோகப்படுத்தி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தலாம். இது அரசுக்கு தெரியாமலா இருக்கும். அதோடு நில்லாமல் பெட்ரோல் விலையையும் ஏற்றிவிடுகிறது, இதை ஒரு காரணாமக வைத்து அத்தயாவசிய உணவுப் பொருட்களும் இன்னும் விலை ஏறுகிறது.

எல்லாதரப்பு மக்களிடமும் இருக்கும் ஒரே கவலை பெட்ரோல் விலை உயர்வு, இதை கட்டுப்பத்தினாலே போதும் என்றாகிவிட்டது நிலைமை. பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு சொல்லும் பொய் காரணங்கள்

1. உலகச்சந்தையில் கச்சா எண்ணைவிலை உயர்ந்து விட்டது
2. அதானல் எண்ணை நிறுவனங்களுக்கு நஷ்டம்
3. பெட்ரோலிய பொருட்களுக்கு கொடுக்கப்படும் மானியங்களால் அரசுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமை.

கச்சா எண்ணைவிலை பீப்பாய் ஒன்றுக்கு தற்போது 85 முதல் 90 டாலர்கள் வரை உள்ளது, பெட்ரோல் விலை ரூ.70ஐ நெருங்கி உள்ளது. 2008 ஆம் ஆண்டு பீப்பாய் ஒன்றின் விலை 135 டாலர்கள் விற்ற போது, அன்று பெட்ரோல் விலை ரூ.54 மட்டுமே. ஆனால் மத்திய அரசு விலையை குறைப்பதற்கு பதிலாக தற்போது அதிகமாக விற்கின்றது.

அரசு நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. அந்த எண்னை நிறுவனங்கள் இந்தியன் ஆயில்,இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation), அவைகளின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையின் படி நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம் கீழே:

IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்

HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்

BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்

நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டது. எண்ணை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளதாகமத்திய அரசு ஏமாற்றுகின்றது.எதிர்பார்த்த லாபம்தான் வரவில்லை, அது எப்படி நஷ்டமாகும். நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா? பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கு அரசு போலியான காரணங்களைக் கூறிவருவதைப் பார்த்தால், சமையல் எரிவாயு, டீசல் போன்றவற்றின் விலையையும் கடுமையாக உயர்த்துவதே அதன் நோக்கமாக இருக்கும் என்று தெரிகிறது.வீட்டு உபயோக எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியத்தை இனிமேல் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கலாம் என்கிற திட்டம் அரசிடம் இருக்கிறது.

இதனால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக விலை கொடுத்து எரிவாயு சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் மானிய விலையில்கூட எரிவாயு சிலிண்டர்களை வாங்க முடியாத நிலையில் இருப்பவர்கள் என்பதால், ஒட்டுமொத்தமாகவே மானியம் என்பது இல்லாமல் போய்விடும். அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பல்வேறு சீர்திருத்தங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளில் சில, பொருளாதார வளர்ச்சியுடன் சமரசம் செய்து கொள்பவையாகக் கூட இருக்கின்றன. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.

பெட்ரோலியப் பொருள்களின் இதுதான் உண்மையா? இல்லை, வேறு பல காரணங்கள் உள்ளன.

அரசு கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல் பொருட்களின் விலை நிர்ணய உரிமை கடந்த 2010 ஆண்டு ஜூலை 25 முதல் எண்ணை நிறுவனங்களே உலக சந்தைக்கேற்ப இந்திய சந்தையிலும் விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற கொள்கை முடிவை இந்திய அரசு எடுத்தது, அதனால் ரிலையன்ஸ், எஸ்ஸார் மற்றும் ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்களின் கையில் தான் விலை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது. அந்நிறுவனங்கள் லாபநோக்கத்தோடு விலைகளை மாற்றிக் கொண்டு இருக்கின்றன.

தற்போது உள்ள சந்தை நிலவரக் கணக்குப் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 ரூபாய் கூட வராது. ஆனால் நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் அரசு விதித்துள்ள வரிகள் தான். வரி அதிகமாக என்ன காரணம்? தனியார் நிறுவனங்கள் தான்

தனியார் எண்னை நிறுவனங்கள் பல பெருகியுள்ளன, தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது. இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.

உலக வங்கியில் இந்திய அரசு கடன் வாங்கியதற்காக 65 சதவிகிதம் வரியும் ஒரு காரணம், பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் மயமாக்குதலை விட வேண்டும்.

மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. இலவசம் என்று கூறி ஒரு பக்கம் கொடுத்தாலும், அன்றாட தேவைகளில் கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காரணம். அரசியல்வாதிகள் ஆட்சியில் இருப்பதால் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை செலவிடுகின்றனர். சொந்த பணத்தை செலவு செய்தால்தானே அதன் கஷ்டம் புரியும்.

மக்களின் பணம் கொள்ளை அடிக்கபடுகிறது, விலை உயர்வை அரசே தூண்டிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறது. டாடா, அம்பானி போன்றவர்களின் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், தனியார் மயமாக்குதல் போன்றவற்றை அரசு தவிர்த்தாலே போதும். விலை உயர்வு அரசின் கைகளிலேயே உள்ளது, எப்போது நம் அரசு திருந்துகிறதோ அப்போது தான் நாடு உருப்படும், அதுவரை பணக்காரன் பணக்காரனாவான், ஏழை ஏழையாவான்.

எல்லா விஷயங்களையும் இங்கு எடுத்து கூற முடியாவிட்டாலும், எங்களால் முடிந்ததை தெரிந்ததை பகிர்ந்துள்ளோம். முடிந்தவரை இதை எல்லோருக்கும் இதை பகிரவும்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content