மங்காத்தாவை வெளியிடும் ராதிகா சரத்குமாரின் ராடான் பிக்சர்ஸ்

மங்காத்தா படம் வெளியிடுவதற்கு முன்பே பல திருப்பங்களை சந்தித்துள்ளது. இப்படத்தின் வெளியிடும் உரிமை ஞானவேல் ராஜாவிற்கு விற்கப்பட்டது, அதனால் ஸ்டூடியோ கிரீன் பெயரில் படம் வெளியாகும் என்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் தயாநிதி அழகிரி தனது ட்விட்டரில் ஸ்டூடியோ கிரீன் பெயரில் வெளியாகது என்றும் ஆனால் இம்மாதம் 31ம் தேதி வெளியாகும் என்றும் இன்று காலை குறிப்பிட்டிருந்தார். இது பற்றி ஞானவேல் ராஜாவிடம் விசாரித்த போது இப்போதைக்கு மங்கத்தா படம் ஸ்டூடியோ கிரீன் பெயரில் வெளியாகது குறிப்பிட்டுள்ளார். தற்போது படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மங்காத்தாவின் தொலைக்காட்சி உரிமம் மட்டுமல்லாமல், நெகடிவ் உரிமையையும் சன் பிக்ச்ர்ஸ் வாங்கியுள்ளது. மோசடி மற்றும் பணப்பிரச்சனைகளுக்கு பிறகு இப்படத்தை சன் பிக்ச்ர்ஸ் வெளியிடுகிறது. இவையெல்லாம் 25ஆம் தேதி மாலை வரை இருந்த நிலவரங்கள்.

கிளௌட் நயன், ஸ்டுடியோ க்ரீன், சன் என பந்தாடப்பட்ட மங்காத்தா இப்போது ராதிகா சரத்குமாரின்  ராடான்  நிறுவனத்திடம் மாறியுள்ளது. 
மங்காத்தாவின் தியேட்டர் உரிமையை ராடான் நிறுவனம் வாங்கியுள்ளது. டிவிட்டரில் நடிகை ராதிகா இதனை குறிப்பிட்டுள்ளார்.

எப்படியோ படம் வந்தா சரி.

1 comments:

இப்பவாது பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கட்டும்

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content