துப்பாக்கி பலமா வெடிக்குமா??


துப்பாக்கி! இந்த படம் கலை புலி தாணு தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்  நடித்து தீபாவளி அன்று  வெளியாக இருக்கிறது.  நண்பன்  படத்திற்கு பிறகு  ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இதில் காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிச்சுருக்காங்க. படத்துல வில்லனாக வித்யுத் ஜமால் நடிச்சிருக்கார்.

முதன் முறையாக விஜயோட ஏ ஆர் முருகதாஸ் கைகோர்த்து இருப்பதாலும், எப்பவுமே மணிரத்தனம் படத்திற்கு கேமர மேனாக இருக்கிற சந்தோஷ் சிவன் இந்த படத்துல இணைஞ்சு இருப்பதாலும், விஜய்யின் படங்களிலே இந்த படம் அதிக பொருட்செலவில் உருவாகி இருப்பதாலும், விஜய் நேரடி தமிழ் படத்தில்  (அதாவது ரீமேக் இல்லாமல் ) நடிச்சிருபதலும் இந்த படத்தோட பல்ஸ் எகிறி இருக்கிறது. (குறிப்பு : இந்த வருஷம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அனைத்து படங்களும் பியுஸ் போயிடுச்சு. எ.கா பில்லா 2, மாற்றான்.)இந்த படத்தோட தலைப்பு தான் தலையாய பிரச்சனையாய் இருந்துச்சு, ஆனா இந்த பிரச்சனை முடிச்ச உடனே (எப்போ முடிஞ்சதுனு  கேட்ட அது தனி கட்டுற போடணும்), படத்தோட ப்ரோமஷன் (விளம்பர ) வேலையெல்லாம் சூடுபுடிச்சுது. இந்த படத்தோட கதைகளம் மும்பையினும், தீவிரவாத கும்பலோட போராடுற ஒரு ராணுவ வீரன்  பற்றியதுதான்னு,  ட்ரைலர்  பாத்தவங்களுக்கு புரிஞ்சுருக்கும்.  ஆனாலும் வழக்கமான திருடன் போலிஸ் கதையாக இல்லாம  இனியமையான காதலோட  திரைக்கதை சொல்லிருக்கிறாராம் நம்ம இயக்குனர் முருகதாஸ். 


அதுமட்டுமில்லாமல்,  படத்துல காஜல் அகர்வால் ஒரு டிபிக்கல் மும்பை பெண்ணாகவும்,   பிளே கேர்ளாக  (Play Girl) வர்ர மாதிரியும்  காட்சி அமைக்க பட்டிருக்குதாம், விஜய் மற்றும் காஜலோட காதல் காட்சி கண்டிப்பா ரசிக்கும்படி இருக்குமாம். புதுமையாக விஜய் ஹிந்தி கூட பேசி நடிசிருக்கறராம்.  இந்த படத்தோட பாடல்கள் ஏற்கனவே கேட்ட ராகம் தான் என்றாலும் Google Google பாடலின்  டெம்போ நல்ல இருக்கு. இந்த படலை பாடியவர் உங்கள் விஜய்னு கண்டிப்பா திரையில வரும். ஏன் என்ற கரணம் உங்களுக்கே புரியும்.
சரிந்து இருக்கிற விஜயோட மார்க்கெட்,  இந்த ஆக்ஷன் படம் நிச்சயம் தூக்கி நிறுத்தும் என அவர் நம்பரதுனால படத்துக்கு பண உதவியும் செஞ்சு இருக்கார்.


இதில் முருகதாஸ் ஒரு சீனில் கெஸ்ட் ரோலும் பண்ணி இருக்கிறார்,  படம் நேற்று சென்சாருக்கு அனுப்பட்டது. படத்த பார்த்த  படக்குழுவினர் படத்துக்கு "U" (எல்லோரும் பார்க்கலாம்னு ) சர்டிபிகேட் கொடுத்து இருக்காங்க. 

இப்படி சின்ன சின்ன விஷயங்களையும் தவிர, துப்பாக்கி  படத்துல  முருகதாஸ், சந்தோஷ் சிவன், விஜய், காஜல், வித்யுத், ஹாரிஸ்  என 6 பெரிய புல்லட் லோடு ஆகி வருகிற நவம்பர் 9 ஆம் தேதி வெடிக்க தயார் இருக்குது.துப்பாக்கி  பலமா வெடிக்குமா இல்ல திபாவளி துப்பகியாக வெடிக்குமானு பொருது இருந்து பார்போம்.2 comments:

நண்பரே,

தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com

- தமிழ் களஞ்சியம்

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content