வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, எல்லோரும் சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களையே நாடி இருந்தனர். மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தென்மாவட்டங்களின் முக்கிய நகரமான மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன, கடந்த சில வருடங்களாக நடந்து வந்த விமான நிலைய விரிவாக்க பணிகள் இப்போது முடிந்துள்ளன. இதையடுத்து விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவு தொடங்கப்பட உள்ளது.
தற்போது துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகம். அதனால் மக்களின் வசதிக்காக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அகர்வால், "மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவைத் துவக்க, நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அடுத்த கட்டமாக, கஸ்டம்ஸ் கவுன்டர்கள் அமைக்கும் பணி துவக்கப்படும். சர்வதேச விமானங்கள் மதுரையிலிருந்து இயக்கப்படும் போது, கஸ்டம்ஸ் மற்றும் இமிகிரேஷன் பிரிவுகள் அவசியம். கஸ்டம்ஸ் பிரிவிற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இமிகிரேஷன் பிரிவைத் துவக்க அனுமதிக்கும்படி தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்' என்று கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் குழு பார்வையிட்டு சென்றுள்ளது. ஏர் ஆசியா நிறுவனமும் மதுரையில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. கஸ்டம்ஸ், இமிகிரேஷன் பிரிவுகள் துவக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்தே வெளிநாட்டு விமானச் சேவையை துவக்க, மதுரை விமான நிலையம் தயாராக உள்ளது.
மதுரையில் சர்வதேச விமான நிலையம்
Total Pageviews
Indiblogger Score
பிரபலமான பதிவுகள்
-
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...
-
தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது. தோள்பட்டை வலிக்கும், இதய நோய...
-
தலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...
0 comments:
Post a Comment