
"கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்" என்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நாளை மறுநாள் (செப்டம்பர் 2)முதல் தொடங்குகிறது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ரூ 70க்கு 90 செனல்களை காணலாம் என்று சட்டசபையில் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில்,
கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை உள்ளதாலும், இதனை சீர் படுத்துவதற்காகவும், மக்களிடம் அதிக கட்டணம் வசுலிப்பதை தவிர்க்கவும், கடந்த தி.மு.க அரசால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம் 2008 ஜூலை மாதம் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது, இந்நிறுவனம் முதலில் 50 ஆயிரம் இணைப்புகளை...