இந்துக்களின் மூல முதற்பொருளாக விளங்குபவர் விநாயகப் பெருமான். அவரை துதித்தே அனத்தையும் ஆரம்பிக்கின்றோம்; செய்து முடிக்கின்றோம். குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானவர் விநாயகர்.
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று நம் கையாலேயே பிடித்து வைத்து நாம் பூஜை செய்வதால் நமக்குப் பிடித்தமான தெய்வமாக இருக்கிறார். நம் வினைகளைத் தீர்த்து வைப்பதால் விநாயகர் என்று போற்றுகிறோம். சிவ கணங்களுக்குத் தலைவராதலால் கணபதி என்றும் கணேசர் என்றும் வணங்குகிறோம்.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினமான விநாயகர் பிறந்த தினத்தை, ‘விநாயகர் சதுர்த்தி’ என்று விமரிசையாகக் கொண்டாடுவது இந்துக்களின் பழமை வாய்ந்த பாரம்பரியம். அவரவர் வீடுகளிலும் ஆங்காங்கேயுள்ள ஆலயங்களிலும் இவ்விழாவைக் கொண்டாடுவது மரபு. விநாயகரை பூஜித்து, விழா கொண்டாடி முடிந்ததும், அதற்கென்று செய்த அவரின் விக்ரஹத்தை (திருவுருவத்தை, மூர்த்தியை) விஸர்ஜனம் (நீரில் கரைத்தல்) செய்வதற்காக கடல், நதி, ஏரி, வாயக்கால், கிணறு என்று நீர் நிகைளை நோக்கி எடுத்துச் சென்று அங்கே கரைத்த பின்னர் அவரவர் வீடு திரும்புவது வழக்கம்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்க வேண்டும் என்று நினைத்த மராட்டிய சிங்கம் பால கங்காதரத் திலகர், வீட்டிற்குள்ளும் ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, ஊர்கூடிக் கொண்டாடும் பொது விழாவாகவும் விஸர்ஜன ஊர்வலத்தை ஊரே திரண்டு வந்து கலந்துகொள்ளும் பழக்கமாகவும் மாற்றினார் மராட்டியமாநிலத்தில் ஆரம்பித்த அவ்வழக்கம் பின்பு நாளடைவில் எல்லா மாநிலங்களிலும் பரவிவிட்டது. இறைபக்தியுடன் கூடவே தேசபக்தியும், மக்கள் ஒற்றுமையும் வளர ஏதுவான ஒரு மிகப் பெரும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா ஆகிப்போனது.
விநாயகர் சதுர்த்தி
Total Pageviews
354632
Indiblogger Score
tamiltidings.blogspot.com |
29/100 |
பிரபலமான பதிவுகள்
-
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...
-
தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது. தோள்பட்டை வலிக்கும், இதய நோய...
-
தலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...
Feedburner
Dont forget to visit often

1 comments:
Happy Vinayagar Chaturthi
Post a Comment