கேசத்தின் அடிப்படை
கேசம் ஏன் உதிருகிறது என்பதை தெரிந்து கொள்ள கேசம் குறித்த சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். நமது கேசம் இறந்த திசுக்களால் ஆன மெல்லிய ஆனால் உறுதியான ஒரு பாகம். இவை கெராட்டின் என்ற ஒரு வகை புரதத்தால் உருவானவை.
உள்ளமைப்பு
கேசத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்
1. தோலுக்கு வெளியே
2. தோலுக்கு உள்ளே
தோலுக்கு வெளியே இருக்கும் பகுதியின் பெயர் கேசத் தண்டு (Hair Shaft) , தோலுக்கு உள்ளே இருக்கும் பகுதியின் பெயர் கேச வேர் (Hair Root). கேசத் தண்டில் மெடுலா (Medula)எனும் உட்பகுதி, கார்டெக்ஸ் (Cortex) எனும் வெளிப்பகுதி உள்ளது. கேச வேர்களில் அடிப்பகுதி பெரிதா இருக்கும் அதை கேசக் குமிழ் (Hair Bulb) என்கிறோம், அது பாலிக்கிள் (Hair Follicle) என்ற பகுதியோடு இணைந்திருக்கும். பாலிக்கிள் பகுதியில் உள்ள ரத்த குழாய்கள் வழியாக வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்கிறது.
கேசவேரோடு எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, (Sebaceous Glands) இந்த எண்னெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் திரவம் கேசத்திற்கு மினுமினுப்பை தருகிறது, சுரப்பிகள் சரியாக இயங்காவிடில் எண்ணெய் பசையின்றி வறண்டு போய் விடும். அதிகமாக இயங்கினால் எண்னெய் பிசுக்குடன் இருக்கும்.
கேசத்தின் நிறம் அதிலுள்ள மெலனின் என்ற வேதிப் பொருள் அளவை பொறுத்து மாறுபடும். வயதாகும் போது இது குறைவதால் நரை ஏற்படுகிறது. கேசத்தின் வளர்ச்சியில் மூன்று நிலைகள் உள்ளன அவை வளரும் பருவம், இடைப்பருவம், ஓய்வுப் பருவம் ஆகும். வளரும் பருவத்தில் புதிய கேசம் உருவாகி வளர்ந்து வரும், அடுத்த பருவத்தில் வளரும் வேகம் குறையும். மூன்றாம் பருவத்தில் வளர்ச்சி நின்று உதிர்ந்து விடும். சில மாதங்கள் கழித்து மீண்டும் புதிய கேசம் வளரும்.
அடுத்த பாகத்தில் முடி உதிர்வுக்கான காரணங்களை பார்க்கலாம்
1 comments:
நல்ல தகவல்
Post a Comment