கல்வித்துறைக்கு அமைச்சராக இருப்பவர் இந்த வருட பத்தாம் வகுப்பு எழுதியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் கல்வித்துறைக்கு அமைச்சர் பி.எம்.எல்.கல்யாணசுந்தரம், இவர் 1991 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்துள்ளார். பின்பு அவர் சகோதரர் பார்த்துக் கொண்டிருந்த தொழிலுக்கு உதவியுள்ளார். பத்து வருடங்கள் கழித்து அரசியலுக்குள் நுழைந்த கல்யாணசுந்தரம், 2006ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
20 வருடங்கள் கழித்து மீண்டும், யாரும் தெரிந்து கொள்ள கூடாது எனத் தேர்வினை திண்டிவனதிற்கு வந்து எழுதியுள்ளார். "அவர் நேற்று அறிவியல் தேர்வினை வந்து எழுதினார், ஆனால் சமூக அறிவியல் பாடத்திற்கு அவர் வரவில்லை. அவரின் புகைப்படம் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுடன் பொருந்தியது" என திண்டிவனம் கல்வித்துறை அதிகாரி ஷண்முகம் தெரிவித்தார்.
"தேர்விற்கு நண்பர்கள் உதவியுடன் படித்தேன், நேற்று அறிவியல் பாடம் எழுதினேன், ஆனால் சமூக அறிவியல் தேர்விற்கு போக முடியவில்லை." என்று கல்யாணசுந்தரம் கூறினார்.அமைச்சர் ஆன பிறகு சென்னை திறந்த பல்கலைகழகத்தில் அவர் பி.ஏ. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
கல்வியே ஒழுங்காக தாண்டாதவர் எப்படி புதுவை மாநிலத்தின் கல்வித்துறைக்கு அமைச்சரானார்? எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

2 comments:
காமராஜரை ஏத்துக்கிட்டீங்க,இவர ஏத்துக்க தன்மானம் தடுக்குதோ?அனுபவம் போதும்யா!
நாம் 1960களில் இல்லை, 21ஆம் நூற்றாண்டை கடந்து கொண்டிருக்கிறோம். காமராஜர் எளிமையாகவும், நேர்மையாகவும் இருந்தார், எந்தச் சூழலிலும் அவர் அரசாங்கப் பொருட்களையோ, பணத்தையோ துஷ்பிரயோகம் செய்ததில்லை. நேர்மையான அவரை ஏற்றுக் கொண்டதற்காக எல்லோரையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? காமராஜரை போன்று இன்னொருவரை காட்டுங்கள் யோகா அவர்களே கண்டிப்பாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இப்போது காமாராஜர் இருந்திருந்தால், காலம் முன்னேறி கொண்டிருக்கும் வேகத்திற்கு கண்டிப்பாக அவரும் படித்திருப்பார்.
காமராஜரை மற்றவரோடு ஒப்பிட்டதற்கு கண்டிப்பாக வெட்கப்படத்தான் வேண்டும்.
Post a Comment