தனுஷ் நம்ம பிரதர்தான் - சிம்பு பேட்டி


சிம்பு தனது ரசிகர்களுக்காக கொடுத்த சிறு பேட்டி

'தபாங்' சல்மான் கேரியரில் அல்டிமேட் ஹிட். 'ஒஸ்தி' உங்களுக்கு அப்படி அமையுமா? 'தபாங்' செமத்தியான ஒரு போலீஸ் படம். ஆனா, முரட்டுத்தனமா பெரிய மீசை வெச்சுக்கிட்டு, நரம்பு தெறிக்கிற மாதிரி பேசிக்கிட்டு இருக்கிற போலீஸ் இல்லை இது. விஜய் கேரியரில் 'கில்லி' அடிச்ச தரணி துணைக்கு வந்தார். அந்த மாஸ் இந்தப் படத்தில் அப்படியே இருக்கு. தொண்ணூறே நாள்ல படத்தை முடிச்சுக் கொடுத்தார். சல்மான் மாதிரியும் பண்ணக் கூடாது. சல்மான் செஞ்ச சில விஷயங்களைப் பண்ணாமலும் இருக்க முடியாது. முதல் நாள், முதல் ஷாட் எடுக்கிறவரை யோசனையா இருந்தது. ஆனா, அப்புறம் அடி பின்னிட்டோம். இதுவரை இப்படி ஒரு மாஸ் ஃபிலிம் நான் செய்தது இல்லை. படத்தில் எனக்குப் பேரு 'ஒஸ்தி' வேலன். சந்தானம் 'சிவாஜி தி பாஸ், ஒஸ்தி தி மாஸ்'னு சொல்லிட்டே இருப்பார். போலீஸ்ல ராபின்ஹுட் மாதிரி ஒரு ஆள்.    ஆனா அண்ணே... இந்த சிக்ஸ் பேக், எய்ட் பேக்லாம் எவண்ணே கண்டுபிடிச்சான்! மூணு மாசமா நான் கொலைப் பட்டினி. தண்ணிகூட இங்க் ஃபில்லர்ல அளந்து குடிக்க வேண்டி இருக்கு. என்னால பிரியாணி இல்லாம உயிர் வாழவே முடியாது. ஆனா, இப்போ ஒண்ணுகூடத் தொட முடியலை. ஆனா, உடம்பு சும்மா கிண்கிண்ணுனு ஆயிருச்சு!

ரொம்ப ஆசைப்பட்டு மல்லிகா ஷெராவத்தைக் கூட்டிட்டு வந்துட்டீங்கபோல?

நானா ஆசைப்பட்டுக் கேட்கலை. ஆனா, அந்தப் பாட்டுக்கு அப்படி ஒரு வெயிட் பார்ட்டி தேவை. 'தபாங்'கில் 'முன்னி' பாட்டு ப்ளாக்பஸ்டர் ஹிட். அங்கே மலாய்க்கா அரோரா பின்னியிருப்பாங்க. 'முன்னி'யைவிடப் பட்டையைக் கிளப்பணும்னு மல்லிகாவை இறக்கிட்டோம். இங்கே வந்து இறங்குறவரைக்கும் என்னை அவங்களுக்குத் தெரியாது. ட்விட்டரில் 'சென்னைக்கு சிம்புவோட டான்ஸ் ஆடப்போறேன்'னு எழுதி இருக்காங்க. 'ஐயோ, டான்ஸ்ல அவன் பட்டையக் கிளப்புவான். பீ கேர்ஃபுல்'னு நிறைய கமென்ட்ஸ் குவிஞ்சுதாம். ஷாட்டுக்கு வந்து லோக்கலா இறங்கி அடிச்சாங்க. மல்லிகா... மல்லிகாதான். 'கலாசலா... கலாசலா'னு வாலி சார் எழுதின பாட்டை எல்.ஆர்.ஈஸ்வரியும் அப்பா டி.ஆரும் பாடி இருக்காங்க. செம ரவுசா வந்திருக்கு ஸாங்!

ஜீவா உங்களை 'நண்பன் இல்லை'னு சொல்லி இருக்காரே?


நான் யார்கிட்டயும் அவ்ளோ ஈஸியாப் பழகிட மாட்டேன். சிம்புவை நெருங்கறது கொஞ்சம் கஷ்டம். புரிஞ்சுக்கிறது அதைவிட கஷ்டம். 10 பேருக்கு நம்மளைப் பிடிக்கும். 10 பேருக்கு நம்மளைப் பிடிக்காது. என்ன செய்ய?

அதையும் தாண்டி எனக்கு நிறைய வேலை இருக்கே. நம்மளைப்பத்தி யார் என்ன பேசுறாங்கனு கேட்டுக்கிட்டே இருந்தா, அதுவே நமக்கு வேலையாப் போயிரும். எனக்கும் அவருக்கும் பிரச்சினை இல்லை. நான் நடிக்கலாம்னு நினைச்ச ஒரு படத்தில் அவர் நடிச்சார்... அவ்வளவுதான்!


ஆனா, அந்தப் படத்தில் நடிச்ச பிறகுதானே ஜீவா ஒரு இடத்துக்கு வந்துட்டார்?


எல்லாப் படமும் நானே பண்ண முடியாது. நான் ஓடும்னு நினைச்சு ஓ.கே. சொன்ன படம்தானே அது? அப்ப என் ஜட்ஜ்மென்ட் சரிதானே? சிலர் 10 ஹிட்கூடக் கொடுக்கலாம். ஆனா, ஆக்டர்... ஸ்டார்... ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. படம் நல்லா இருந்தா ஆக்டர் நடிச்சதைப் பார்ப்பாங்க. புரிஞ்சுக்காமல் ஆட்டம் போட்டா, யாரையும் கீழே இறக்கிடுவாங்க. முதல் நாள் தியேட்டருக்கு யாருக்கு ஓப்பனிங் வருதோ... அவங்கதான் ஸ்டார்!

ஒரு படம் ஜெயிச்சா, நான் காலரைத் தூக்கி விட்டுக்கிறதும் கிடையாது. தோல்வி அடைஞ்சா, தலையைக் குனிஞ்சுக்கிட்டுப் போறதும் கிடையாது. இந்த உலகத்தில் ஒரே ஒரு சிலம்பரசன்தான் இருக்கான்!

தனுஷ் நேஷனல் அவார்டு வாங்கிட்டார். உங்களுக்கு ஆசை இல்லையா?

தனுஷ் 'ஆடுகள'த்தில் உழைச்சதும் நடிச்சதும் அவ்வளவு சூப்பர். அதுக்கு நிச்சயம் கிடைக்கணும். நமக்கு அந்த ஆசையே இல்லை. எனக்கு 'கிரேட் என்டர்டெயினர்'னு பேர் வாங்கணும். அவ்வளவுதான். தனுஷ் நம்ம பிரதர்தான். அவருக்கு இந்த அவார்டு செல்லும்!

'நண்பன்' படம் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகப்போகுதே... நடிச்சிருக்கலாம்னு இப்ப தோணுதா?

இப்பவும் அப்படித் தோணலை. 'த்ரீ இடியட்ஸ்' சூப்பர் படம். ஷங்கர் கிளாஸ் ப்ளஸ் மாஸ் டைரக்டர். விஜய்க்கு வித்தியாசமான கேரக்டர். வெற்றிக்கு நல்ல கியாரன்ட்டி இருக்கும்!

தம்பி குறளரசனும் நடிக்க வர்றார்போல?


ஆமா! அடுத்த வருஷம். சென்டிமென்டா அப்பா டைரக்ஷன். ஜிம்லயே கெடக்கான். நல்லா டான்ஸ் ஆடுறான். அழகா வசனம் பேசுவான். ஆட்டமும் பாட்டமும் நடிப்பும் ஜீன்லயே இருக்கு. 'பதற்றமே வேண்டாம். அழகா நடி. எல்லோரையும் மதி!'னு மட்டும் சொல்லி இருக்கேன். ரொம்ப ஸ்வீட் பாய். பொண்ணுகளுக்கு ரொம்பப் பிடிக்கும்!


எப்போ கல்யாணம்?

வீட்ல கேட்டுட்டே இருக்காங்க. இதைப்பத்திப் பேசணும்னு அப்பா அம்மா பக்கத்தில் வந்தாலே... ஓட்டம் பிடிச்சிடுவேன். கண்டிப்பா லவ் மேரேஜ்தான். ஆனா, பொண்ணு நம்மளைத் தேடி வரணும். காதலிக்கிறதும் கல்யாணம்பண்ணிக்கிறதும் என் உரிமை.

நான் எது பண்ணாலும் ஒரு குரூப் இருந்துக்கிட்டு கெடுக்குதுண்ணே. புரொடியூசர், டைரக்டர்கிட்ட போய் 'சிம்புவை வெச்சுப் படம் பண்ணாதீங்க'னு சொல்றாங்க. ஹீரோயின்கிட்டே போய் 'ஐயோ... சிம்புவா ஜாக்கிரதை'னு போட்டுக் கொடுக்குறாங்க. மனசார யாரையாச்சும் காதலிச்சாக்கூட இடைஞ்சல் பண்ணுவாங்க போல. ஆனா, கடவுள் இருக்காரு. இதுவரைக்கும் கடவுள் என் கையைப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டு வந்திருக்கார். நிச்சயமா, அந்த குரூப்கிட்ட இருந்து தப்பிச்சு, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்போ அந்தப் பொண்ணு தோள் மேல கை போட்டுக்கிட்டு பேட்டி கொடுப்பேன்.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content