ரயிலில் முதன் முதலாக மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களாக இருந்தால், நீங்கள் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியவைகள் !
1. உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளுதல் மிக நன்று.
2. ஒரு கைக்குவளை(mug) பயணத்தின் போது கொண்டு செல்வது கழிப்பறை உபயோகத்தின் போது பயன்படும்.
3. முடிந்த வரை ரயிலில் விற்கப்படும் தின்பண்டங்களை மற்றும் உணவு வகைகளை வாங்கி உண்பதை தவிர்க்கவும். தண்ணி பாட்டில்களை தவிர.
4. வீட்டிலிருந்து புளியோதரை மற்றும் ரொட்டிதுண்டுகள் கொண்டு செல்லலாம்.
5. பொழுதை போக்க கையில் ஒரு நாவல் அல்லது ஒரு புத்தகம் கொண்டு செல்வது நன்று.
6. வயிற்று உபாதைக்கான மாத்திரை கொண்டு செல்வது அவசரத்திற்கு உதவும்.
7. முன்பின் தெரியாத நபரிடம் எதையும் வாங்கி உண்ண வேண்டாம். அது உங்களுக்கு சிக்கலில் முடியலாம்.
8. செல்போன் உபயோகிப்பவராக இருந்தால், சார்ஜிங் பாயின்ட் எங்கு உள்ளது என்பதை ரயில் புறப்படும் முன்னரே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
பயணம் இனிதாக முடிய வாழ்த்துகள் ......
1 comments:
Nice one.. Thanks a lot...
Post a Comment