தேவையானவை:
சிக்கன் துண்டுகள் - கால் கிலோ
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மல்லி பொடி - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - அரைஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
எலும்பில்லாத கோழிக்கறியாக எடுத்துக் கொண்டு அவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். சிக்கனை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்பு அரைஸ்பூன் சில்லி பவுடர், அரைஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
வெங்காயம் பேஸ்ட் செய்து கொள்ளவும், அத்துடன் கடலை மாவு, அரிசிமாவு, அரைஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், அரைஸ்பூன் சில்லி பவுடர், மல்லி பொடி, சீரகப்பொடி, உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். எண்ணெயை கடாயில் சூடுப்பண்ணி வேகவைத்த சிக்கன் துண்டுகளை கடலைமாவு கலவையில் பிரட்டி பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் பக்கோடா தயார்.
0 comments:
Post a Comment