சென்னையை பொருத்தவரை என்னதான் அரசு கிடுக்குப்பிடியான சட்டங்களை வகுத்தாலும், போக்குவரத்து விதிமுறையை மீறுவோர் எண்ணிக்கையும் விபத்துகளும் குறைந்தபாடில்லை. அப்படி விதியை மீறுவோர்கள் போக்குவரத்து காவல்துறை அதிகாரி வசம் பிடிபட்டால், அவர்களில் சிலர் அதிகாரியை 50 (அ) 100 க்கு கவனித்துவிட்டு சென்றுவிடுவது வழக்கம். ஆனால் அதில் பலர் அபாரத்திற்கு உள்ளாவார்கள், அப்படி வசூலிக்கப்படும் தொகை மூலம் ஆண்டுக்கு 20 கோடி அரசுக்கு வருமானம் வருகிறது என்கிறது போக்குவரத்து காவல்துறை.
இது பற்றி போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா குறிப்பிடுகையில், இந்த விதிமுறை மீறல்களால் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 86 கோடி வரை அபாரம் விதிக்கபட்டு பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் பெருமளவில் அபாரதம் வசூலிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணியாமல் ஓட்டுவதற்குதான்.
இந்த ஆண்டில் இதன் மூலம் சுமார் 6 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவோர்க்கு விதிக்கப்படும் அபாரதம் மூலம் ரூ 77 லட்சமும், முறையான லைசன்ஸ் இல்லாம்ல் வாகன்ம் ஓட்டும் ஒட்டுனர்களுக்கு விதிக்கப்படும் அபாரதம் மூலம் 75 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment